————————————————————————————————–

கொஞ்ச நாளாவே உலகத்துலே எல்லாருமே ரொம்ப நல்லவங்களா மாறிட்ட மாதிரி ஒரு எண்ணம் வருது.நமக்கு தெரிஞ்சவங்க இல்லை. முன் பின் தெரியாத அந்நியர்கள் கூட ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க.

இதுக்குக் காரணம் எனக்கு வர பல E-MAILs தான்.

பேர் ஊர் தெரியாத பல பேர் எனக்கு பணம் அனுப்ப ஆசைப்படறாங்க. விடாம என்னை துரத்தித் துரத்தி பேங்க் அக்கௌன்ட் நம்பர் கொடுனு அன்பு தொல்லை தாங்க முடியலே.

அதுலே முக்கியமான விஷயம் – அவுங்களுக்கு ஆப்பிரிக்காலே ஒரு பெரிய லாட்டிரி விழுந்துருக்கு. அவுங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் இல்லாததாலே என்னோட பேங்க் அக்கௌன்ட் லே பணம் போட முடிவு செஞ்சிருக்காங்க.அதுக்கு என்னோட அக்கௌன்ட் நம்பர் கேக்கறாங்க.

இது கலி காலம் தானா ? ஏதோ த்ரேதா யுகம் மாதிரி இருக்கு. மனுசங்க இவ்வளோ நல்லவங்களா மாறிட்டாங்களே !

அவ்வளவு பணத்தையும் எனக்கே எனக்கு அனுப்ப அவுங்க Just Fund Transfer Charges மட்டும் கேக்கறாங்க. அதுவும் என்ன ஒரு 250 டாலர் தான். இதை கட்டினா எனக்கு 2,500,000 டாலர் அனுப்பறாங்க. அடேயப்பா எவ்ளோ பணம்?

இது தெரியாம நம்ம 2G ராஜா ( தமிழில் இராசா ) தப்பு தப்பா தப்பு பண்ணிட்டு திரு திருன்னு முழிசிண்டிருக்கார். கூடவே கனிமொழி அம்மாவும் அதே மாதிரி முழிக்கறாங்க.

என்ன இருந்தாலும் பகுத்தறிவுக்கடவுள் எனக்கு அருள் பண்ணின மாதிரி அவங்களுக்கு பண்ணலே..

கொடுக்கற தெய்வம் கூரையை பிச்சிண்டு கொடுக்கும்னே சொல்லுவாங்களே, இதானா அது ? இப்போ EMAILஐ பிச்சிண்டு கொட்டறது.

இப்பிடி ஒரு ரகம் மக்கள் இருக்க இன்னொரு ரகம் இன்னுமே சூப்பர்.

ரேஷ்மி குப்தா, சுபத்ரா தேஷ்பாண்டே, மதுமிதா முதலியார் . அஞ்சலி தேஷ்முக், ஷர்மிளா ஐயர் , சுபாஸ்ரீ படேல், பிரியா சென்குப்தா, பல்லவி கபூர்,சோனம் தீட்சித், கன்வல்ஜித் கவுர், கிறிஸ்டினா, ஸ்மிதா அரோரா,ரூபாலி பானேர்ஜி …..

இவுங்கல்லாம் யாருன்னு கேக்கறீங்களா ?

எனக்கு EMAIL லே PROPOSE பண்ணினவங்க.அதுவும் எப்படி ?

Sample சில வரிகள் :

“Honey I am waiting for your reply “
“We had a good time. Time to meet up again ?”
“Mere Yaar, Long time.Shall we ..?”
“Missing you since last week. Shall we meet up in Carlton, NYC this week end?”

நீங்களே சொல்லுங்க.. நான் என்ன செய்யறது?

நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ? 

2 thoughts on “நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் ?

  1. yes, you will lose emails from ரேஷ்மி குப்தா, சுபத்ரா தேஷ்பாண்டே, மதுமிதா முதலியார் . அஞ்சலி தேஷ்முக், ஷர்மிளா ஐயர் , சுபாஸ்ரீ படேல், பிரியா சென்குப்தா, பல்லவி கபூர்,சோனம் தீட்சித், கன்வல்ஜித் கவுர், கிறிஸ்டினா, ஸ்மிதா அரோரா,ரூபாலி பானேர்ஜி …..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s