என்ன சம்பந்தம் ?

திருவல்லிக்கேணியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் கன்னியாகுமரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் மாதிரி போலே .. அதோடு அவர் ஏன் கடலைப் பார்க்கிறார் ? நாட்டு நடப்பு அவ்வளவு சரி இல்லையோ ? இருக்காதா பின்னே ? “கள் உண்ணாமை” பற்றி அதிகாரம் எழுதினர் ஆனால் அரசாங்கமே கள்ளுக்கடை நடத்தினால் அவர் எப்படி நாட்டைப் பார்ப்பார் ?

பெருமைப் படுகிறோம் ?

ஸ்டாலினைப் பெற்றதால் பெருமைப் படுகிறேன் என்று “தமிழர் தலைவர்” கூறுகிறார். ஐயா, உங்களைப் பெற்றதால் தமிழ்த் தாய் பெருமைப் படுகிறாளா என்று தெரிய வில்லை. ஆனால் ஒன்று. “கவிஞர்” கனிமொழியைப் பிரிந்து “திஹார்” தாய் வருத்தப்படுகிறாள்.

வெள்ளை அறிக்கை

சிங்கபூர் 2020 ல்  மக்கள் தொகை 69 லட்சம் ஆகும். அதனால் வசதிகளை மேம்படுத்த வேண்டும், என்ன என்ன புதிய கட்டுமானங்கள் தேவை என்று ஆராய்ச்சி செய்து  வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். அவ்வளவு தான் செய்தி.

கேள்வி

கோகுல இந்திரா, சிவபதி , விஜய் அமைச்சர் பதவி பறிப்பு – ஓஹோ இப்பிடி சிலர் அமைச்சரா இருந்தாங்களா ?
என்ன செஞ்சாங்க ? பதவி இருந்ததுக்கும் பதவி போறதுக்கும் ?

கேள்வி

காவிரிலே தீர்ப்பு நமக்கு எதிரா வந்தா ஜெயலலிதாவை திட்டினோமே, இப்போ சாதகமா வந்திருக்கே பாராட்ட மனசு இல்லையே தமிழ்த் தலைவர்களே ! இது தான் பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதையோ !!

கேள்வி

இலங்கையில் வேளாண்மை கூலித் தொழில் வேலை செய்ய ஆள் தேவை. விசா கொடுக்கிறார்கள். தமிழ் நாட்டு தமிழர்கள் வேலை செய்ய போலாமா கூடாதா ?

விஸ்வரூபம் பார்த்து வீணா போறத விட வேலை செஞ்சு உருப்படலாமே !

பகுத்தறிவு சிங்கம்

சுவாமி விவேகானந்தர் தான் என் வழி காட்டி என்று jayalalithaa கூறி உள்ளார். அவரும் ஹிந்துத்வா வெறியர் என்று பகுத்தறிவு சிங்கங்கள் சொல்லப்போவது உறுதி. வாழ்க பகுத்தறிவு.

உலகெலாம் …

என்ன ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னு பார்கறீங்களா ? ரொம்ப நாளா வேற ஒரு சைட் லே எழுதிகிட்டு இருந்தேன். இப்போ இந்த சைட். இப்பவாவது நிறைய பேர் படிக்கறாங்களானு பார்க்கலாம்.

அதே சரி. பழைய சைட் என்னனுதானே கேக்கறீங்க ? http://coffeewithamaruvi.blogspot.com இது தான் அந்த சைட்.

இந்த சைட் லெ யாவது படிங்கப்பா தம்பிங்களா ..

சில கேள்விகள் ..

ஒரு சில கேள்விகள் நமக்கு எப்போதுமே உண்டு. பல நேரங்களில் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேறவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

அடியேனின் “ஏன் கேள்விகள் … “

தமிழ் டி.வி. சேனல்களில் பேசும் பெண் அறிவிப்பாளர்கள்

கண்ணை உறுத்தும் ஆடை அணிகிறார்கள்
தமிழ் பேச சிரமப்படுகிறார்கள்
கையை ஆட்டுகிறார்கள், அதுவும் ஒரு பெண்டுலம் மாதிரி

தமிழ் எழுத்தாளர்கள்

எப்போதும் புரியாமலே எழுதுகிறார்கள்
இலங்கை பற்றியே எழுதுகிறார்கள்
ஒரு மாதிரி ஒப்பாரி வைப்பதில் போட்டி போடுகிறார்கள்
எப்போதும் ஹிந்து மதத்தை சாடுகிறார்கள்
சினிமா கலைஞர்களை போற்றியே பேசுகிறார்கள்
‘பார்ப்பன ஏகாதிபத்தியம்’ இல்லாமல் எழுதுவதே இல்லை

தமிழ் மொழி ஆர்வலர்கள் / தமிழ்த் தலைவர்கள் / சினிமா இயக்குனர்கள்

சினிமாவில் நாயகிகள் ஆடை குறைப்பது தமிழ் கலாச்சாரம் தானா ?
சினிமா விழாக்களில் நாயகிகள் அரை குறை ஆடைகளில் வருவது சரியா ?

பெரியாரும் அண்ணாவும் தவறே செய்யவில்லையா ? அவர்கள் மனிதர்களே இல்லையா ? அண்ணல் காந்தியே தவறுகள் பல செய்தார் என்று பார்க்கிறோமே…

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பகுத்தறிவு சார்ந்து எழுதுவதாகக் கூறிக்கொண்டு ‘என் சீதை சோரம் போவாள்’, ‘என் கண்ணகி மதுரையை எரிக்க மாட்டாள்’, ‘என் கஸ்துரி பாய் அடிமைப் பணி செய்ய மாட்டாள் ‘ என்று பிரச்சாரம் செய்கிறார்களே – அது என்ன தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் அடையாளமா ?

பெரியவர் அமிர்தலிங்கம், சாம் துரையப்பா,சிறி சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் தானே? இவர்கள் கொலை எல்லாம் கொலை இல்லையா? செய்தவர்கள் கொலை காரர்கள் இல்லையா?

ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் 23 பேர் தமிழர்கள் இல்லையா ?

தமிழ்ப் பத்திரிக்கைகளில் நடுப்பக்கத்தில் அரை நிர்வாண பெண்கள் படம் போடுகிறார்களே அது தமிழ்ப் பண்பாடா ?

“கள் உண்ணாமை” பற்றி வள்ளுவர் சொல்கிறாரே, தமிழ்த் தலைவர்கள் கள்ளுக்கடை ஒழிப்புப் போராட்டம் நடத்தாமல் அரசாங்கம் சார்பாகவே கள்ளுக்கடை நடத்துகிறார்களே அது வள்ளுவ துரோகம் இல்லையா ?

இவரைத் தெரியுமா ?

பயோ டேட்டா 

பெயர்                     :              விஜய காந்த் 
தொழில்                :              அரசியல் – எதிர்க் கட்சித் தலைவர் 
உப தொழில்         :              நாக்கைக் கடிப்பது

முந்தைய
 தொழில்               :              தீவிரவாதிகளைப் பிடிப்பது (திரையில்)

அடையாளம்       :              சிவந்த கண்கள் ( நிரந்தரமாக )

படிப்பு                     :              பேசத் தெரியாத அளவு
பிடிக்காத
வார்த்தை             :               அம்மா ( அவருடைய அம்மா அல்ல ) 
முகவரி                :                கட்சியினர் வீட்டுக் கல்யாண மண்டபம்   
சொத்து                 :               பாதி இடிபட்ட ஒரு கல்யாண மண்டபம்

பொழுது
 போக்கு                :               கட்சியினரை அடித்து விளையாடுவது

தற்போது  இவரைக்  காணவில்லை. யாரும் தயவு செய்து கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

%d bloggers like this: