ஸ்டாலின் 60 ம் கல்யாணம் பற்றியும், 60தம்பதிக்கு தாலி வழங்கி கல்யாணம் செய்தது பற்றியும், அவரே தன் மனைவிக்குத் தாலி கட்டி கொண்டாடியது பற்றியும் “தமிழர் தலைவர்” வீரமணி ஐயா வாய் திறக்கவில்லையே! தாலி ஒரு அடிமைச் சின்னம் என்று பெரியார் சொன்னாரே! ஸ்டாலின் பெரியார் வழியில் நடக்கவில்லையே , அவரை பகுத்தறிவுப் பாசறையில் இருந்து ஒதுக்கி வைக்கப் போகிறீர்களா வீரமணி ஐயா? இந்த சமயங்களில் வாய் மூடி மௌனியாய் இருப்பதுதான் ஈரோட்டுப் பாதையா ?
இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சாமல், தன் மனப்படியும் தன் மனைவியின் மனப்படியும் நடந்துகொண்டு தமிழ் முறைப்படி தாலி கட்டி கொண்டாடிய ஸ்டாலின் அவர்களும், அவரது மனைவி திருமதி துர்கா அம்மையாரும் இறைவன் அருளால் எல்லா நலனும் பெற்று 80 கல்யாணம் காண வேண்டும் என்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ள எங்கள் ஊர் தேவாதி ராஜனை , ஆநிரை காத்த ஆமருவியப்பனை வேண்டுகிறேன்.