தர்ம வாசிஷ்டம் கூறுவது :
நன்கு கற்றறிந்த பிராமணன், சிறுவர், குருவுடன் தங்கிப்பயிலும் மாணவர், பெற்றோர் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்ட விதவைப் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், அரசனின் ஊழியர்,வேலை ஆட்களின் மனைவி – இவர்களிடம் எப்போதும் வரி வசூல் செய்யக் கூடாது.
மஹா பாரதம் –உத்தியோக பர்வம் – விதுர நீதி கூறுவது :
கல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன்.
திருடன், கொடுமையானவன், குடிகாரன்,கருக்க்கலைப்பு ஏற்படுத்துபவன்,பிரம்மச்சரியத்தை மீறும் மாணவன்,தன்னுடைய வேத அறிவை விற்பவன் – இவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும்,தண்ணீர் பெறவும் அருகதை அற்றவர்கள்.
மனு தர்ம சாஸ்திரம் கூறுவது :
திருட்டின் தன்மை அறிந்து திருடுகிற சூத்திரனுக்கு அந்த திருட்டுக்கு உண்டான தண்டனையைப் போல் 8 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.அதே குற்றத்தைச் செய்யும் பிராமணனுக்கு 64 மடங்கு அல்லது 100 மடங்கு அல்லது 128 மடங்கு வரையிலும் தண்டனை விதிக்கலாம்.ஏனென்றால் திருட்டினால் வரும் தோஷத்தை பிராமணன் அறிந்திருக்க வேண்டும்.
————————————————————————————————————————————————–
இவைகளுக்கு மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.
Amaruvi, what do you want to say by posting this? because it’s of no use for today’s society in anyways.
LikeLike
For you to comment 🙂 seriously these things are not known. The Manu smriti is considered an evil doctrine, thanks to the English and “secular” education. But the reality is different. Whether it is applicable in full today or not, that such a treatise existed and the truth that it is not an evil doctrine needs to be made known to people- especially the English educated class that has time just for soaps, gossips, parties and sports.
LikeLike