பெயர் : மு.கருணாநிதி
வயது : ஓய்வு பெரும் வயது அல்ல ( இந்திய அரசியலில்)
தொழில் : கதை எழுதுவது (தேர்தல் அறிக்கை என்றும் கூறலாம்)
உப தொழில் : போராட்டம் நடத்துவது
தினமும் செய்வது : பிள்ளைகளுக்குள் சண்டை விலக்கல்
பொழுதுபோக்கு : அவ்வப்போது முதலமைச்சராக இருப்பது
விரும்பும்
பொழுதுபோக்கு : பொதுக்குழு கூட்டுவது
வாழ்நாள் சாதனை : குடும்பப் பராமரிப்பு
சமீப சாதனை : தமிழ் ஈழ ஆதரவு (சிரிப்பு வராமலே)
வாழ்நாள் தமாஷ் : 15 நிமிட உண்ணாவிரதம்
மிகச்சிறந்த தமாஷ் : தனித் தமிழ் நாடு அடைந்தது
நல்லா மனிதர். குடும்பப் பொறுப்புள்ளவர். குடும்பத்தினர் சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள பல அரசியல் போராட்டங்கள் நடத்துவார்.தமிழ் நாட்டின் பிரச்சினைகள் தீர கடிதம் எழுதியே சாதனை படைத்துள்ளார். கடிதம் எழுதுவதோடு அவர் கடமை முடிந்து விடும். சொந்த பிரச்சினைகள் என்றால் தவறாமல் டெல்லி செல்வார் ( சக்கர நாற்காலியில் இருந்தாலும் ).
பொழுதுபோக்க பல முறை முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். அப்போது பொழுது போக்க பாராட்டு விழாக்களில் பங்கு கொண்டுள்ளார்.இது வரை ஆக அதிகமான பாராட்டு விழாக்களில் பங்கு பெற்றதற்காகவும் ஒரு பாராட்டு விழா நடந்தது.அதற்க்கும் தலைமை தாங்கினார் என்றும் ஒரு பேச்சு.
உலகத் தமிழர்களின் தலைவராக இவரை அண்ணாவும் பெரியாரும் கனவில் வந்து நியமித்ததால் அயராது உழத்துக்கொண்டே இருக்கிறார். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கண்டாலே இவரது தலைமைப்பண்பை அறியலாம்.
தான் பதவிக்காலத்திற்குள் தமிழ் மொழியைக் காத்தே ஆக வேண்டும் என்பதால் செம்மொழி மாநாடு நடத்தினார்.அதன் பிறகு தமிழ் மொழி செவ்வாய்க் கிரகம், நிலா முதலிய வேற்று கிரகங்களிலும் பேசப்படுகிறது என்று அறிந்து மனம் மிகவும் ஆனந்தப்படுகிறது.
சோழச் சக்கரவர்த்திகளுக்குக்பிறகு கவி பாடும் புலவராக இருக்கும் ஒரே தலைவர் இவரே.
கலைத்துறையில் தனது வாரிசாக அவ்வையாரின் அவதாரமாம் கவிஞர் கனிமொழியைத் தமிழ் நாட்டிற்கு அளித்துள்ளார்.
அரசியலில் வாரிசாகவும் தனது சேவையைத் தொடரவும் தனது மகன்களான இரு சிறந்த கல்வி மான்களை நாட்டிற்கு அளித்துள்ளார். இருவரும் தமிழகத்திற்கும் இந்தியத் திருநாட்டிற்கும் ஆற்றி வரும் பணி அளவிடமுடியாதது.
பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியின் அறிகுறியாகத் தன் மகன் ஸ்டாலின் 60 ம் கல்யாணத்தை தாலி கட்டிக் கொண்டாடுவதைக் கண்டு ஆனந்தப்பட்டார். அவரது பகுத்தறிவுப் பற்றைக் கண்டு கண் கலங்காதவர் எவரும் இல்லை.