தமிழர் தந்தை ஈ.வெ.ரா. திருக்குறளைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்த்து பகுத்தறிவைப் பரப்புவோம்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் – விடுதலை (01.06.1950)
” வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம்,‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.