காட்ஜூவிற்கு அம்மாஞ்சியின் யோசனைகள்

நீதிபதி மார்க்கண்டேய காட்ஜூ – அவர் பேசாத விஷயமே இல்லை.

மோடி முதல் பத்ரிகை சுதந்திரம் வரை, மம்தா முதல்;இப்போது சஞ்சய் தத் வரை அவர் பேசாதது ஒன்றும் இல்லை. அவ்வளவு பேசி விட்டார். இருந்தாலும் அவர் பத்ரிகை துறை தலைவராக இருநது என்ன தான் செய்வார் ? அதனால் அவருக்குஅசட்டு அம்மாஞ்சியின் யோசனைகள். இதைப்பற்றி எல்லாம் நீங்கள் கருத்து சொல்லுங்கள். நீங்கள் பேச ஆரம்பித்தால் தான் எங்களுக்குப் பொழுது போகிறது.

நாளை காலை எல்லாரும் பல் தேய்க்கலாமா கூடாதா ?

காபி தான் குடிக்க வேண்டுமா அல்லது டீ குடிக்கலாமா ? எது மதச்சார்பின்மை?

அவ்வாறு குடிக்கும்போது எச்சில் பண்ணி குடிக்கலாமா கூடாதா ? எதற்கும் கேட்டு வைத்துக் கொள்வது நல்லது தானே !

குளித்தபின் சாப்பிடலாமா அல்லத சாப்பிட்ட பின் தான் குளிக்க வேண்டுமா?

குளித்த பின் திருநீறு / திருமண் இட்டுக் கொள்ளலாமா கூடாதா ? எது மதச்சார்பின்மை ? விளக்கி விடுங்கள்.

வேஷ்டி கட்டிக்கொண்டு உணவு உண்ண வேண்டுமா அல்லது பஞ்சகச்சம் தான் கட்டிக்கொள்ள வேண்டுமா ? தங்களுக்கு கோபம் வரவழைக்காதது எது?

இறைவனை இந்து மத முறைப்படி வழி படலாமா அல்லது மதச்சார்பின்மை காரணமாக எல்லா மத வழக்கப்படியும் வழிபட வேண்டுமா ? நீங்கள் சொல்வது போல் செய்யக் காத்திருக்கிறேன்.

மம்தா பநேர்ஜி பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமா ? இல்லை இருப்பதே போதுமா?

மோடி அடுத்த முறை தேர்தலில் ஜெயித்த பின் பதவி ஏற்கலாமா கூடாதா ?

சினிமாக்களில் நாயகிகள் வரலாமா கூடாதா ?

அந்த நாயகிகள் எத்தனை முறை அழ வேண்டும் ?

இந்திய பத்திரிக்கைகளில் இந்து மத கடவுளர் படங்கள் வரலாமா கூடாதா ? அப்படி வந்தால் அதற்கு பரிகாரம் போல் மற்ற மத கடவுள் படங்களைப் போட்டுவிட வேண்டுமா ? உங்கள் உள்ளக்கிடக்கை என்ன ?

வீட்டில் வெள்ளிக்கிழமை தான் கோலம் போட வேண்டுமா ? மாக்கோலம் போடலாமா அல்லது புள்ளி வைத்த கோலம் தான் போட வேண்டுமா ?

தயவு செய்து நீங்கள் இவை எல்லாம் பற்றி சொல்லி விடுங்கள். நாங்கள் பாட்டிற்கு ஏதாவது செய்து  உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுவீர்கள். வாய்க்கு வந்தபடி பேசி உங்கள் மேதா விலாசத்தைக் காட்டி விடுவீர்கள்.

எதற்கு வம்பு? மேலே சொன்னதில் நீங்கள் ஒரு வழி காட்டி விட்டீர்கள் என்றால் எங்களுக்கு அது வசதியாக இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s