பெண் விடுதலை ..சில எண்ணங்கள்

FORD_jpg_1405219fஇந்தப் படம் J.Walter Thompson India என்ற பன்னாட்டு விளம்பரக் கம்பெனியுடையது. இதன் விளம்பர வாசகம் “Leave Your Worries Behind with the Figo’s extra-large boot”. உங்கள் தொல்லைகளைப் பின்னுக்குத் தள்ளுங்கள். எங்கள் காரில் பின்புறம் மிகுந்த இடம் உள்ளது. இத்தாலியின் முன்னாள் தலைவரைக் கிண்டல் செய்யும் விதத்தில் அமைந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் வேறு.

காரின் பின்புறத்தில் மூன்று அழகிகள் கை கால்கள் கட்டப்பட்டு உணர்வைத் தூண்டுகின்ற விதத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் அல்ல , மூன்று பெண்கள். இதைத் தயாரித்துள்ளது ஒரு பன்நாட்டு விளம்பர நிறுவனத்தின் இந்தியக் கிளை.

இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர மிகவும் மெத்தப் படித்த மேதாவியாக இருக்க வேண்டும். Creative Skills எனப்படும் கற்பனைத் திறன் மிகுந்து இருக்க வேண்டும். சொல்லப்போனால் முற்போக்கு சிந்தனை உள்ளவராக இருக்கவேண்டும். பழைய பஞ்சாங்கமாக இருக்கக் கூடாது. நவ நாகரீக உலகில் சஞ்சரிக்க வேண்டும்.

சரி. கற்பனைத்திறன் என்பது இது தானா ? இதில் தான் கலை நயம் உள்ளதா? நாகரீகமாக மக்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் விதமாக இதில்  என்ன உள்ளது ?

சில ஆண்டுகளுக்கு முன் ” I love you Rasna” என்று ஒரு விளம்பரம் வருமே. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுமே.ஒரு விரசம் உண்டா ? ஒரு ஆபாசம் உண்டா ?இன் றும் நினைவு கொள்ளத்தகும் விதமாக இருக்குமே !

இப்படி ஒரு ரசனை கெட்ட, பெண்களை தரம் கெட்ட வகையில் சித்தரிக்கும் நிறுவனங்களில் வேலை செய்வது ஒரு கௌரவமா என்ன ? இந்த மாதிரி நிறுவனங்கள் தான் நம் நாட்டை உயர்த்தப் போகின்றன என்றால் அந்த உயர்வு நமக்கு நல்லதா இல்லை அவமானமா ?

அல்லது இவ்வாறு பெண்களை ஒரு போகப்பொருளாகப் படைக்க ஒரு இந்திய நிறுவனம் – இதற்கு பெண் உரிமை இயக்கங்கள் ஒன்றும் வாய் திறக்கக் காணோம். அல்லது வாய் திறக்காமல் இருப்பது தான் நாகரீகமோ ?

எதை வேண்டுமானாலும் விற்கலாம், எதையும் வெளியிடலாம் – காசு வந்தால் போதும் – இந்த நிலை தான் பெண் விடுதலையா ? அப்படி என்றால் இந்த விடுதலை நமக்குத் தேவையா ?

பாரதியார் சொன்னார் :

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் …”

இப்போது யாரைக் கொளுத்துவது ? நிறுவனத்தையா ? ஊழியரையா ? கார் கம்பெனியையா ? பெண் உரிமை பேசி காசு சம்பாதித்து இது போன்ற விளம்பரங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் முற்போக்கு வாதிகளையா ?

” கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையற்ற

பெண்களின் கூட்டமடி கிளியே பேசிப் பயன் என்னடி ?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s