யாரிடம் வேண்டுமானாலும் அசட்டையாக இருக்கலாம். ஆனால் கூழைக் கும்பிடு போடுவோரைத் தள்ளியே வைப்பது நல்லது. தங்கள் சுய மரியாதையை இழந்தவர்கள், சுய மதிப்பீடு அற்றவர்கள், பதவி பெற என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள் இவர்கள். கோவிலில் அம்மனைத் தரிசனம் செய்வது போல் நிற்கிறார்கள். இவர்களிடம் சற்று கவனமாக இருப்பது முதல்வருக்கு நல்லது.
ஏதோ நாம் சொல்லி இவர்கள் கேட்கப் போகிறார்களா என்ன ? ஊதுகிற சங்கை ஊதி வைப்போம். விழுபவர் காதில் விழட்டும்.