ஜெயலலிதா தேசிய அரசியல் நோக்கம் கொண்டவர் என்பது புரிகிறது.முதலில் சிறுபான்மையினர் ஓட்டை விஸ்வரூபம் மூலம் தக்க வைத்துக் கொண்டார்.தற்போது இலங்கைத் தமிழர் விஷயத்தில் மிகவும் தீவிரமான நிலை எடுத்து வைகோ, தி.மு.க., மற்றும் எல்லாரையும் ஒரே அடியில் வீழ்த்தி தனது நிலையை ஸ்திரப்படுத்தியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் மாநில சட்டசபை மூலம் இப்படி ஒரு தீர்மானம் போட்டதன் மூலம் வேறு எவரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வேறு எதுவும் பேச முடியாதபடி செய்துவிட்டார். முன்னர் ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் முதல் முதலில் சட்டசபை மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்.
இதன் மூலம் எல்லாம் தனக்கு இது வரை இல்லாத ஒரு ஓட்டு வங்கியை உண்டாக்கிவிட்டார் என்பது உண்மை.
திமுகவின் வயிற்று எரிச்சாலைக் கொட்டிகொண்டுள்ளார் என்பது ஆறுதலான விஷயம்.
இப்படி எல்லாம் செய்தாலும் இந்த நடவடிக்கை இந்திய தேசத்தின் வெளியுறவுக் கொள்கையில் தலையிடுவதால் தனது வரம்புக்கு மீறிய நடவடிக்கை, ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிட்டார் என்று அசட்டு அம்மாஞ்சி கருதுகிறான்.
“ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன் ..”