சென்ற வாரம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி. வாசிப்பில் நமது கடந்த கால நிகழ்வுகளின் தொனி ( nostalgia) என்பது தலைப்பு.
மிக நிறைவாக இருந்தது இந்த நிகழ்ச்சி. நன்றி திருமதி.சித்ரா ரமேஷ்.
பேச்சாளர்கள் பலரின் பேச்சுக்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தன. பலவற்றுடன் என்னைத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது.
திருமதி.சித்ராவின் பேச்சு மனிதன் தனது பேராசைக்காகவும், சுயநலத்துக்காகவும் செய்யும் செயல்களால் மற்ற உயிர் இனங்கள் படும் பாட்டை கண் முன் நிறுத்தியது. இயற்கையை இயற்கையாக விட வேண்டியது தானே என்ற அவரது கேள்வி நியாயமானது தானே ? ஜெயமோகனின் ‘யானை டாக்டர் ‘ படிக்க வேண்டும்.
திருமதி அழகு நீலாவின் பேச்சு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு சேட்டை செய்யும் ஒருவர் இருக்கிறார். வணிக ரீதியான இந்த உலகம் அவர்களை உதவாக்கரைகள் என்று உதாசீனப்படுத்தி முத்திரை குத்தி இருப்பது உண்மை. இயல்பாகப் பார்த்தால் அந்த மாதிரி மனிதர்களால் இயற்கைக்கு ஒரு கெடும் நிகழ்வதில்லை, மாசு படுவதில்லை.வெற்றி பெற்றவர்களால் மாசு அடைகிறது என்பது வேண்டுமானால் உண்மை.
திருமதி.பாரதியின் பேச்சில் பதின்மவயதின் புரிதலின்மை தெரிந்தது. இந்த வயதின் தனிமைப்படுதலை எதிர்ப்பதாகக் கூறியது அருமை.
திரு.குமாரின் பேச்சு பல பேருக்குப் பல பழங்கால நினைவுகளை வரவழைத்திருக்கும். எல்லாராலும் எல்லா வற்றையும் சொல்ல முடியாது. ஆனால் குமார் கூறியது போல் பல நிகழ்வுகள் நமது வாழ்விலும் நடந்திருக்கும் என்பது உண்மை.
திரு.ஷாநவாஸ் பேச்சு ஆசிரிய இழப்பை முன்னிறுத்தியது.
திரு கண்ணபிரான் பேச்சு அனுபவ உண்மைகளை உணர்த்தியது.ஒரு முன்னோடி சமுதாயத்தின் உணர்வுகள் பளிச்சிட்டது.
மிக நல்ல ஒரு ஞாயிறு மதிய வேளை நடந்து முடிந்தது.
அடுத்த வாரம் எழுத்தாளர் ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்.
இது போன்ற நிகழ்ச்சிகள் அழைப்பாளர்களுக்கு மட்டுமா அல்லது பொதுவானவையா?
பொது நிகழ்ச்சிகள் மற்றும் பங்களிப்பு எளிது எனில் நிகழ்ச்சி நிரல் இருக்கும் இணையப் பக்க சுட்டி இருந்தால் அனுப்புங்களேன்..நன்றி.
LikeLike
இடம் அங் மோ கியோ நூலகம், வரும் ஞாயிறு மாலை ஆறு முதல் ஒன்பது வரை
LikeLike