எப்போதெல்லாம் வார்த்தையில் நிதானம் தவறுகிறதோ, அப்போதெல்லாம் பெரும் குழப்பத்தில் உளோம் என்று புரிதல் வேண்டும். தற்போது காங்கிரஸ் நிதானம் தவறுகிறது. மோடியை “கொலைகாரன்” என்று அழைத்துள்ளது.
காங்கிரசார் மோடியை பிரதமர் பதவியில் அமர்த்தாமல் விட மாட்டார்கள் போல் தெரிகிறது. ராகுலின் தாயார் “மரண வியாபாரி” என்று மோடியை அழைத்ததன் பலன் இதுவரை குஜராத்தில் கால் பதிக்க முடியவில்லை. மீண்டும் அதே தவறு. பொலிக பொலிக, இது போல் தவறுகள் பல்கிப் பெருகுக !
ராகுல் காந்தியே குஜராத்திலும் தலித் வீடுகள் உள்ளன, அங்கும் கஞ்சி கிடைக்கும். சீக்கிரம் போய்க் குடித்து அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுங்கள்.அது தான் நாட்டிற்கு நல்லது. சுப சகுனமும் ஆகும். பீகார், பஞ்சாப், உபி போல் தங்கள் சேவை இந்திய நாட்டிற்குத் தேவை.
தமிழ் நாடு வர வேண்டிய அவசியமே இல்லை. தேர்தலிலும் நிற்க வேண்டாம். வீணாக வைப்புத்தொகை இழப்பானேன்? எனவே குஜராத் செல்லுங்கள். மேலும் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் அமைச்சர் நாராயணசாமியை மேலும் தொலைக்காட்சியில் பேசச் சொல்லுங்கள். மோடியின் வெற்றி உறுதியாகிவிடும். கூடவே மணி ஷங்கர் ஐயர் – அவரது பேச்சும் நல்லது. காங்கிரசிற்கு எதிராக வாக்காளர் கோபத்தை அதிகப்படுத்த உதவும். அவருடன் ரேணுகா சௌதரி.மும்மூர்த்திகள் போல் இவர்கள் செயல்பாடு மோடிக்கு நல்லது செய்யும்.
இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ விடாமல் செய்தால் படுதோல்வி சர்வ நிச்சயம்.
பரிகாரம் : உடன் இத்தாலிக்கு பயணச்சீட்டு எடுப்பது.