எச்சரிக்கை : தமிழர் அதிலும் தமிழ்ப் பெண்கள் இதனைப் படிக்க வேண்டாம். உண்மையாகத் தமிழின் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் மதிப்புக் கொண்டவர்கள் இந்த பின்னூட்டத்தைப் படிக்க வேண்டாம்.
உண்மையைப் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். இல்லாத ஒன்றை இருப்பதாகப் பேசவும் ஒரு கற்பனைத் திறன் வேண்டும். பகுத்தறிவு பேசும் பெரியவர்கள் தங்கள் தலைவரும் தமிழர் தந்தை என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு தலைவர், தமிழ் பற்றியும், தமிழர் பற்றியும், தமிழ் மொழி மீது பற்று கொண்டோர் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அப்பாவித் தமிழர்கள் மத்தியில் இருந்து மறைத்து விட்டமை திராவிட அரசியலின் ஒரு சாதனையே.
அந்த தலைவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தான். இதில் எனது பங்களிப்பு ஒன்றுமே இல்லை. பெரியார் கூறியுள்ளவை இவை அனைத்தும். ஆனால் இவை சாதாரணத் தமிழ் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது வடிகட்டின அயோக்கியத்தனம்.
எல்லாவற்றையும் விட கண்ணகியை தெய்வமாகப் போற்றுவது தமிழர் மரபு. கண்ணகியை கற்புக்கரசியாய் வழிபடுகிறோம். சிலப்பதிகாரத்தை தமிழின் ஆகச் சிறந்த காவியமாகக் கொண்டாடுகிறோம். தி.மு.க. அரசாங்கங்கமும் பூம்புகாரில் கண்ணகிக்கு நினைவாலயம் எழுப்பியது என்றும் நினைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அரசு கண்ணகி சிலையை மெரீனா கடற்கரையில் இருந்து நீக்கியது மாபெரும் தவறு என்று தமிழ் ஆர்வலர்களும், திராவிட அரசியல்வாதிகளும் அரற்றினார். உண்மை தான். நீக்கியது தவறு தான். ஆனால் பகுத்தறிவுப் பகலவன் என்றும் , தமிழர் தந்தை என்றும் நாளும் சூளுரைக்கப்படும் ஈ.வெ.ரா சிலப்பதிகாரத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டால் திராவிட அரசியல்வாதிகளின் இரட்டை நிலை தெரிய வரும். அதிலும் தெய்வம் போல் தொழப்படும் கண்ணகியைப் போற்றும் ஒரு காவியத்தை ஒரு ரொம்பவும் சராசரிப் பாமர வார்த்தைகளில் அவர் ஏசியுள்ளது என்னை மிகவும் பாதித்தது.
சிலப்பதிகாரம் ஒரு புளுகு — – விடுதலை (28.3.60)
“….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா ? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கி யம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? ”
சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51)
“….இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்”.
இப்படிப் பேசியவரைத் தமிழர் தலைவர் என்று கொண்டாடும் தமிழ்த் தலைவர்களை என்னவென்று நினைப்பது ?
இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.
தேவடியாள் என்பது தேவரடியாள் என்னு தேவதாசி சமூகத்தை குறிக்கும் சொல்.. அது இன்று தமிழகத்தில் வசவு வார்த்தையாகிவிட்டது திராவிட கழகத்தாரின் பொய் பிரச்சாரத்தால்..
தேவதாசி என்பவர், கோயிலில் நாட்டியமாடி, கோயில் பராமரிப்பில் ஈடுபடுவர்.. அவர்களுக்கு கோயில் மானியத்தில் ஒரு உரிமையும் பங்கும் உண்டு.. அதை இந்த திராவிட கழகத்தார்கள், பறித்து நடுத்தெருவுக்கு கொண்டு வந்து, நிர்கதியாக்கி, விபச்சாரத்தில் ஈடுபட வைத்தார்கள்..
LikeLike
நன்றி திரு.செந்தில். தொடர்ந்து பதிவில் இணைந்திருங்கள்;.
LikeLike
ஒரு மனித உடம்பில் புற்று நோய் வந்த பலநாள் சென்று கொல்லும், ஒரு மரத்தில் புல்லுருவி முளைத்து வளர வளர அந்த மரம் எந்த உபயோகத்திற்கும் ஆகாமல் நெருப்புக்குதான் ஆகும் ,தி க வினர் இந்த சமூகத்திற்கு புற்று நோய் .புல்லுருவி யாக இருக்கிறார்கள் இரு நோயையும் களைவோம் எல்லோரையும் வாழவைத்து வாழ்வோம் வாழ்த்துக்களுடன் தன.லோகநாதன் ,ஜோதிடம் வாஸ்து சாஸ்திர ஆராய்ச்சியாளர் பட்டுக்கோட்டை 9843418856
LikeLike
Nellai Jebamani ardent follower of Kamara oncemade public statement that Periyar never visited Dalia hamlet for a cup of tea and his comments on social justice /eradication of casteism is mockery. Double standards of so called social justice leaders
LikeLike
Thank you. Very true.
LikeLike