பூ விற்ற காசும் பகுத்தறிவும்..

அலட்சியம், அவநம்பிக்கை, நேர்மையின்மை, அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு, ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம்,அதிகாரிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள், ஊழல், பொறுக்கியெடுத்த கயவர்கள் அரசின் ஆட்சிப்பணிகளில் குறுக்கிடுதல் – இப்படியே பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு மோடியின் நிர்வாகத் தெளிவு, ஆட்சியில் ஊழலின்மை, முன்னேற்றம் என்பது பற்றிய பேச்சே எப்போதும் பேசுதல், நம்பிக்கை, எதிர்காலம் பற்றிய ஒரு புரிதல் கலந்த அணுகுமுறை, சாதி சார்ந்த அரசியல் செய்யாமல் இருத்தல் — இவற்றை எல்லாம் பார்த்தால் சற்று வியப்பாகத்தான் இருக்கும். அதனாலேயே ஆங்கில ஊடகங்களால் பழிவாங்கப்படுகிறார் மோடி.

மோடி பற்றி வசை பாடும் வானம்பாடிகள் என்ன கூறுகிறார்கள் ? அவர் ஊழல் செய்தார் என்றா ? அவர் பணம் சுருட்டினார் என்றா ? குடும்ப அரசியல் செய்கிறார் என்றா ? இல்லை.

இவை அனைத்தும் இல்லாமல் அரசு புரிகிறார் என்பதால்தான் அவர் மீது குற்றச்சாட்டு.

குற்றம் சாட்டுபவர்கள் யார் ? மகாத்மா காந்தியும், காமராஜருமா ? இல்லையே ? குற்றம் சாட்டுபவருக்கும் அவ்வாறு செய்ய ஒரு அருகதை வேண்டாமா ?

மின்சார நிர்வாகத்தில் இந்தியா எங்களிடம் கற்க வேண்டும் என்கிறார். தவறு என்ன ? குஜராத்தின் மின் நிலையங்கள் உற்பத்தித் திறன் (Plant Load Factor) இந்திய சராசரியை விட உயர்ந்தே உள்ளதே ! மின் மிகு மாநிலமாக உள்ளதே ( கடந்த பத்து ஆண்டுகளில் ). அது ஒரு தவறா?

இடது சாரி சார்ந்த கருத்தாக்கங்கள் இருக்கலாம், அரசுகள் வரலாம், காங்கிரஸ் போன்ற இடதும் வலதும் இல்லாத ஒரு குழப்ப அரசும் வரலாம் ஆனால் தேசிய நலன் கருதியினும் ஒரு வலது அரசு வரக்கூடாது என்பது ஓர் தேசத் துரோக எண்ணம்.

அவரது பொருளியலைப் பற்றியும், நிர்வாகத் திறன் பற்றியும் ஆட்சியில் உள்ள நேர்மை பற்றியும் சிங்கபூர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் வழங்கியுள்ள நற்சான்றுகள் பல. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சோனியா காந்தியினால் நடத்தப்படுகிறது.அது முதற்கொண்டு குஜராத் மிகச்சிறந்த மாநிலம் என்று விருது வழங்கியுள்ளது. அது தவிர ஐக்கிய நாடுகள் சபையும்.

இது எதுவுமே போதவில்லை என்றால், கீழே உள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்.
http://www.gujaratindia.com/state-profile/awards.htm

ஆனால் மோடி மோசமானவர்,  இந்து மத அடிப்படைவாதி,  ஆதிக்க குணம் கொண்டவர், சிறுபான்மையினரின் எதிரி என்று  கூறுபவர்கள் அவர் ஆங்கில மீடியாவின் பாகற்காய் என்பதால் தான்

. இவர் அமெரிக்க, சீன மற்றும் ஜப்பானிய தொழில நிறுவனங்களின் நண்பன். அமெரிக்காவின் அறிவுஜீவிகளின் போலி மதச்சார்பின்மையின் எதீர்வினை. இந்திய இடது சாரி அறிவுஜீவிகளின் வாழ்வாதாரம் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

இப்படிப்பட்ட ஒரு மனிதர் அமெரிக்காவிற்கு வரக்கூடது. சமீப காலத்தில் அவரது வீடியோ பேச்சு கூட ஒளிபரப்பாகக்கூடது என்பது அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தீர்மானம்.

ஆனால் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அவரை வந்து சந்திக்கிறார்கள். குஜராத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய உதவ வேண்டுகிறார்கள்.

நேற்று அமெரிக்க கார் நிறுவனம் போர்ட் ( Ford ) குஜராத்தில் ஒரு கார் தொழிற்சாலை  துவங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.

ஆக இந்த மோடி எதீர்ப்பும் நமது பகுத்தறிவு போலத்தான் போலே. கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு இரவில் ஊர் அடங்கினபிறகு சாமி கும்பிடுவது போல்  வெளியில் மோடி எதிர்ப்பு ; உள்ளே அவரது மாநிலத்தில் முதலீடு.

பூ விற்ற காசு மணக்குமா நாய் விற்ற காசு குரைக்குமா?

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: