“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அது தேவன் என்றாலும் விடமாட்டேன்..”
இது CBI க்கும் பொருந்தும்.
நிலக்கரி ஊழலில் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு குற்றப்பத்திரிக்கை. அதை CBI சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்கிறது.கோர்ட் இதை வேறு யாரிடமும் காட்டினீர்களா என்று கேட்கிறது ( அவ்வளவு நம்பிக்கை! ). CBI இல்லை என்கிறது. அரசாங்கத்தில் யாரிடமும் காட்டினீர்களா என்கிறது. சத்தியமாக இல்லை, அம்மா சத்தியம் என்கிறது.
சில தகவல்கள் வெளியாகின்றன. பின்னர் ஆமாம் காட்டினேன். மத்திய சட்ட அமைச்சரிடம் காட்டினேன்.அவர் ஆங்கிலத்தில் சில திருத்தங்கள் செய்தார் என்கிறது. பிறகு சில அதிகாரிகளிடமும் காட்டினேன் என்கிறது CBI.
ஒன்று – இந்தியாவில் சட்ட அமைச்சர் தவிர யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.
இரண்டு – நாம் அனைவரும் காதுகளில் கூடை கூடையாகப் பூ சுற்றிக்கொண்டிருக்கிறோம்.
மூன்று – யாருக்கும் போய் சொல்லத் தெரியவில்லை.