இணையம் இல்லை, கணினி இல்லை, மின்சாரம் இல்லை, செய்தித் தாள் இல்லை .
தேரழுந்தூரில் இவை எதுவும் இல்லை.
எனவே கனிமொழியின் கருத்துக்கள், அவர் தந்தையின் தாக்குகள், பிரதமரின் பேச்சுக்கள் ( அவை இல்லை என்றாலும் கூட ) – இவை எதுவும் பற்றி தெரியவில்லை.
திக் விஜய் சிங்கின் அசடு வழிசல்கள், வீரமணியின் விவேகமற்ற வாக்குவாதங்கள் இவை எதுவும் இல்லாத தனி நாயக உணர்வு.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக எதுவும் பார்க்க முடியாது.
திடீரென்று ஒரு நூற்றாண்டு பின்நோக்கிப் போய் பாரதியார் இருந்த காலத்தில் இருப்பது போன்ற உணர்வு. மின்சாரம் கண்டு பிடிக்க்கப்படவே இல்லை என்பது போன்ற ஒரு எண்ணம். எனவே தொல்லை எதுவும் இல்லை.
நானும், உறவினரும், ஆநிரைகளும் – இவர்களுடன் ஆமருவியப்பனும். காலை , மாலை மதியம் இரவு என்று எப்போதும் எந்த வெளி உலகத் தொடர்பும் அற்ற ஒரு ஏகாந்த நிலை கடந்த ஆறு நாட்களாக.
திருமங்கை ஆழ்வாருக்கும் இதே உணர்வு தான் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் அவர் தேரழுந்தூர் வந்திருந்த போது.
என்னை ஆழ்வார் நிலைக்கு உயர்த்திய அம்மாவிற்கும் அவருக்கு முந்தைய பகுத்தறிவாளருக்கும் நன்றி.