பெரியார் வழியில் தமிழ் வளர்ப்பது எப்படி?

நம் அனைவருக்கும் தெரியும் தமிழர் தந்தை யார் என்று. நாம் தமிழர்களாய் நிமிர்ந்து நிற்பது ஏன், யாரால் என்றால் தமிழ் நாட்டில் பிறந்த பிள்ளை கூட சொல்லும் “பகுத்தறிவுப் பகலவன்”  பெரியாரினால் தான் என்று.  அந்த அளவுக்குப் பெரியார் பால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால் தமிழர் தந்தை தமிழ் பற்றி சொன்னவை என்ன ? பகுத்தறிவு வேலை செய்தது. அதனால் அவர் தமிழ் பற்றி என்ன சொன்னார் என்று சிறிது ஆராய்ச்சி செய்தால் சற்று அதிர்ச்சி தான்.

தமிழைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டிருந்தார் பெரியார் என்பது தான் உண்மை. ஆனாலும் திராவிட ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் ஏன் இவற்றை மறைத்துப் பேசுகிறார்கள் ?  உண்மையை வெளிப்படையாகப் பேசினால் என்ன ?

நீங்களே படியுங்கள். பின்னர் கருத்து உருவாக்கிக் கொள்ளுங்கள் அல்லது விவாதத்திற்கு வாருங்கள்.

———————-

விடுதலை — 27.11.1943

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது

” தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார் ”

விடுதலை  – 16.3.1967

தமிழின் பெயரால் பிழைப்பு

” நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக் காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது ”

‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில் தந்தை பெரியார்.

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

” ..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன் “

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: