அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு பூர்வமாக நாட்டை நகர்த்துவது பற்றி யோசிக்கிறது சிங்கப்பூர்.
தேசீய நூலக வாரியம் உலக அளவில் ஆகச் சிறந்த ஒரு நூலக நிர்வாகம் என்பது நாம் அறிந்ததே.
Read Singapore என்ற பெயரில் இந்த ஆண்டின் வாசிப்பு அனுபவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைந்துள்ளது சிங்கை அரசு. Nurturing a nation of Readers – வாசிக்கும் ஒரு நாட்டைப் பேணுதல் என்பது நோக்கம்.
இவ்வாண்டின் தலைப்பு “ஒரே வானம்”. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்று நான்கு அங்கீகரிக்கப்பட்ட மொழி ஆசிரியர் படைப்புகள் இடம் பெரும்.
இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆக இவ்வருடம் அவர் எழுதியுள்ள நூல்கள் பற்றிய ஆய்வுகள், கலந்துரையாடல்கள், நேர் காணல்கள் ஆகியன இருக்கும்.
ஜெயமோகன் படைப்புகள் வாசிக்க தனி உணர்வு வேண்டும். வாசித்தபின் ஏற்ப்படும் உணர்வு தனி. ஆனால் வாசிக்கும்போது நிகழும் உணர்வுகள் – அவை தனி. அனுபவித்தால் தான் தெரியும்.
வாசகர்களே, முடிந்தவரை ஜெயமோகன் நூல்களைப் படித்துத் தயாராகிக் கொள்ளுங்கள். எழுத்தாளரைச் சந்திக்கும்முன் அவரது அலைவரிசைக்குத் தயாராகிக்கொள்ளுங்கள்.