இன்று கலியுக வருஷம் 5114, விஜய வருஷம், மார்கழி மாதம் 17ம் நாள், தஷிணாயனம் கலந்த அமாவாசையில் ஹேமந்த ருதுவில் பூராடம் மற்றும் மூலம் நட்சத்திரங்கள் கூடின தினத்தில் வடக்கே மற்றும் வட கிழக்கே சூலமும் உள்ள ஒரு நாளில் ஆங்கில வருஷம் 2014 வந்துள்ளது எனப்தைத் தவிர வேறு ஒன்றும் புதியதாகத் தெரியவில்லை.
என் பகுத்தறிவினால் அறியக்கூடியது அவ்வளவு தான் போல.
ஜனவரி முதல் நாள் என்பது என்னவென்று சங்க இலக்கியங்களில் நான் அறிந்தவரை துழாவிப் பார்த்தேன்.
கம்பன் ஏதாவது சொல்லியிருப்பானோ என்றும் தேடினேன்.
வள்ளுவர், இளங்கோ என்று யாராவது ஏதாவது சொல்லி இருப்பார்களோ என்றும் பார்த்தேன்.
அப்படி ஒன்றும் அவர்கள் சொல்லவில்லை.
இவர்கள் யாருக்குமே தெரியாமல் ஒரு ஒப்புயர்வற்ற நிகழ்வு ஆண்டு தோறும் நடக்கிறது. அது நமது தமிழையும் தமிழ் தேசீயத்தையும் காக்கவே பிறப்பெடுத்துள்ள ‘தமிழ்த் தலைவர்கள்’ மட்டுமே தெரிந்து வைத்துள்ள ஒன்று போலத் தெரிகிறது.
அது எப்படி கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் த்லையாய பழம் பெரும் புலவர்களுக்குத் தெரியாததெல்லாம் நமது ‘தமிழ்த்’ தலைவர்களுகு மட்டும் புலப்படுகிறது என்று யோசித்தேன்.
நாள் முழுக்க அமர்ந்து யோசித்தேன்.
‘தமிழ்த் தலைவர்’ பெருமை சொல்லவும் அரிதே என்று உணர்ந்துகொண்டேன்.
உங்களுக்கும் அந்த பூரண ஞானம் பொலிய எல்லாம் வல்ல பகுத்தறிவை வேண்டுகிறேன்.