புது வருஷம் பிறந்தவுடன் ஜனவரி இரண்டாம் நாள் முதலமைச்சரிடம் மதுவிலக்கு பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
”மதுவிலக்கை நீக்க முடியாது. மதுவிலக்கு எங்கள் கொள்கை. நாங்கள் பதவியில் இருக்கும் வரை மதுவிலக்கு அமலில் இருக்கும்.”
‘மதறாசில் மதுவிலக்கு நீக்கம் என்னும் பேச்சிற்கே இடமில்லை”.
“மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மது விலக்கை நீக்கினால் அதனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் இல்லை’.
இவாறெல்லாம் முதல்வர் தெரிவித்தார்.
கடைசியாகத் தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துள்ளது.
வாழிய நலம். வாழ்க தமிழகம். வாழ்க தமிழக முதல்வர். வளர்க அவரது நல்லாட்சி.
‘எல்லா நலமும் பெற்றுக் கொட நாட்டிலும் கோட்டையிலும் அவர் ஆட்சி செழிக்கட்டும்.
இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை. கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். உண்மை தான்.
‘ஹிந்து’ நாளிதழிலேயே வந்துவிட்டது. எனவே உண்மையாகத் தான் இருக்கும்.
செய்தி நாள் 02-ஜனவரி-1964. முதல்வர் ;திரு.பக்தவத்சலம் அவர்கள்.
“This Day That Age” என்ற 50 ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி அது.
இப்போது நடந்துட்டாலும்..