யார் தமிழன் என்று ஒரு கேள்வி எப்போதுமே எனக்கு இருந்தது உண்டு. அது இப்போது தீர்ந்திருக்கிறது. கீழ்க்கண்டவற்றில் சில பல கொள்கைகள் கொண்டவர்கள் தமிழர்கள் என்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இவையே தமிழனின் அடையாளங்கள் என்று கல்வெட்டில் பதியலாம் என்று நினைக்கிறேன். வரும் தலைமுறை தெரிந்துகொள்ளும்.
மரண தண்டனை என்பது கொடூரமானது. மனித குலத்திற்கு எதிரானது. இருபத்தோறாம் நூற்றாண்டில் இந்த தண்டனை இருப்பது வெட்கக்கேடு. அதுவும் வன்முறையே. எனவே அதனை ஒழிக்க வேண்டும்.
மரண தண்டனை ஒழிப்பு தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் செல்லாது. அது பகுத்தறிவு.
விடுதலைப் புலிகள் தியாகிகள். மனித குல மேம்பாட்டுக்குப் போராடியவர்கள். என்ன மனித வெடி குண்டு, வன்முறையா ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
வீரப்பர் சந்தனப் போராளி. அவரைக் கொன்றவர்கள் பாசிச அரக்கர்கள்.
ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் தமிழர்கள் அது வன்முறை இல்லையா ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
இலங்கை வட மாகாண முதல்வர் மீன் பிடி முறையில் விசைப் படகுகள் கூடாது என்கிறாரே ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை. யாரது வட மாகாண முதல்வர் ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
வைகோ ப.ஜ.க.வுடன் கூட்டணி. தமிழ் மானம், மதச் சார்பின்மை ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
சென்னையில் பட்டப்பகலில் EPRLF பத்மனாபா மற்றும் 13 பேர் 19-ஜூன்1990-ல் கொலை செய்யப்பட்டனரே ? அது வன்முறை இல்லையா ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
வரதராஜ பெருமாள் என்பவர் தமிழர் இல்லையா? அவரது பழைய தமிழ் மாகாண அரசு தமிழர் அரசு இல்லையா ? அவரைக் கொல்ல முனைந்தவர்கள் பற்றி ..? ஹி ஹி தம்பி ஏதோ இந்தியிலே பேசறாப்புல இருக்கு…
கோழைத்தனமாகப் பெண்கள் வயிற்றில் வெடிகுண்டைக் கட்டிவிட்டு வெடிக்கச் செய்வது வீரம்.
பத்து வயதுப் பிள்ளைகளை சயனைடு குப்பிகள் கட்டி போர்ப்பயிற்சி கொடுப்பது பகுத்தறிவு, வீரம்.
பெரியவர் அமிர்தலிங்கம், சாம்.துரையப்பா, லக்ஷ்மன் கதிர்காமர் முதலியோர் கொல்லப்பட்டனரே ? அவர்கள் தமிழர்கள் இல்லையா ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
ஹரித்ரா ஸ்ரீஹரன் என்ற பெண் தாய் தந்தையருடன் இருக்க வேண்டாமா ? ராஜீவ் காந்தியுடன் இறந்தவர்கள் குழந்தைகள் பற்றி ? ஹலோ .. ஹலோ. சிக்னல் கிடைக்கவில்லை.
நக்ஸலைட்டுகள் வன்முறை பற்றி – அவர்கள் வன்முறைக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும்.