எழுத்தாளர் ஞாநியின் தர வீழ்ச்சி வியப்பளிக்கவில்லை.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுபவர் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவது நல்லது என்று நான் நினைத்தது உண்மை தான். ஆனால் இந்து மத துவேஷ வேஷம் போட வேண்டியிருப்பதால் அவர் எடுக்கும் நிலைக்கும் சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் எடுக்கும் நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
தேர்தலில் நிற்கும் வரை அவர் என்னவேண்டுமானால் பேசியிருக்கலாம். அவை திராவிட தேச முற்போக்கு அரசியல் அவலங்களில் ஒன்றாக மன்னிக்கப்படும். ஆனால் வேட்பாளர் என்று ஆனவுடன் எல்லாருக்குமான, எல்லா சமூகத்தினருக்குமான ஒரு பொது மனிதராக அவர் பேச வேண்டும்.
இந்தக் காணொளியில் அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தி சென்றுவிட்டு வந்த 58 மனிதர்கள் ஹிட்லர்கள் என்று பேசுகிறார். அதை அப்படியே சற்று இழுத்து ‘மாதா கோவில் சென்று வருபவர்கள் முசொலினிகள்’ என்றோ, ‘புனிதப் பயணம் சென்று வருபவர்கள் தீவிரவாதிகள்’ என்றோ அவர் சொல்வாரா ? அப்படிச் சொன்னால் அது அபத்தம் இல்லையா ?
இந்துக்களை இழிவுபடுத்திப் பேசினால் சிறுபான்மையினர் மகிழ்வார்கள் என்று நினைப்பது சிறுபான்மையினரை அவமானப்படுத்துவது போன்றது. அவர்களது கூட்டு அறிவுத் திறத்துக்கும் விடுக்கும் மிகப்பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்.
தீவிர போலி செக்யூலர் என்று காட்ட எவ்வளவு கீழ்த்தரமாகவும் பேசலாம் என்றால், மரியாதையை இழக்கலாம் என்றால் – இப்படி தேர்தலில் நிற்பது அவசியம் தானா ?
போலி மதச் சார்பின்மையின் அவலங்களின் மொத்த உருவாகக் காட்சியளிக்கிறார் திரு.ஞாநி.
என்ன ஒரு வீழ்ச்சி !