இலக்கிய வட்டத்தின் திரு.ஆ.கி.வரதராசன் ஐயா அவர்களின் ‘அன்னையின் ஆணை’ நூல் இன்று கல்லாங் சமூக மன்றத்தில் வெளியிடப்பட்டது. திருமதி நாச்சியம்மை அருணாசலம் அவர்கள் வெளியிட திருமதி. இலக்குமி இக்குவனம் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக பேரா.சு.ப.திண்ணப்பனார் வரவேற்புரை வழங்கினார். ‘இலக்குவனின் ஏற்றம்’ என்னும் தலைப்பில் கவிஞர். கோவிந்தராசு கவிதை பாடினார். தொடர்ந்து பேரா.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் ‘இராமனுக்கு ஒரு தம்பி – இராவணனுக்கும் ஒரு தம்பி’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
இடையில் காரைக்குடி கம்பன் கழகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா பற்றிய புகைப்படத் திரையீடு நடந்தது.
நூல் விற்பனையான அளவு இன்னொரு மடங்கு ஆ.கி.வ. அவர்கள் பொருள் வழங்கினார். மேலும் சிங்கை வெள்ளி 5,000 சேர்த்து, வெள்ளி 12,000 சிண்டா ( Singapore Indian Education Trust )விற்கு நன்கொடையாக ஆ.கி.வரதராசன் அவர்கள் வழங்கிப் பின்னர் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவெய்தியது.
பேரா.சொ.சொ.மீ. அவர்களின் கம்ப இராமாயணச் சொற்பொழிவு பற்றி விரைவில் எழுதுகிறேன்.