என்னைச் செதுக்கிய சில சிற்பிகள்

Jhss Teavhersநெய்வேலி ஜவகர் பள்ளியில் எனது ஆசிரியப் பெருமக்கள். இடமிருந்து வலம் : திருமதி.ஜீனா தயாளன், திரு.பட்டாபி ராமன் ( சமஸ்கிருதம்), திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ( ஆங்கிலம் ), திரு. சுந்தரம் ( தலைமை ஆசிரியர்), திரு மாணிக்கம் ( உடற்பயிற்சி), திரு.வெங்கடேசன்,திருமதி, அனுசூயா( உயிரியல்). 

அனுசூயா அவர்கள் தவிர மற்ற அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார்கள்.

திரு.கிருஷ்ணமூர்த்தி ( G.K.Sir) அவர்கள் வகுப்புகளில் வோர்ட்ஸ்வர்த் நேரில் வருவார். அந்த ஒரு மணி நேரம் அங்கு ஜி.கே. இருக்க மாட்டார். கண்களில் நீர் மல்க ‘லூஸி கிரே’ ( Lucy Gray) வின் மரணத்தைக் கண்டிருக்கிறேன். ‘Solitary Reaper’ ன் சோக கீதம் உணர்ந்திருக்கிறேன். ‘In Celebration of Being Alive’ (Dr.Christian Bernard ), ‘In the grip of prejudice’ ( E.R.Braithwaite ) போன்ற பாடங்கள் நடக்கும் போது அந்த நிகழ்வுகள் என் கண் முன்னே ஓடியிருக்கின்றன. மே மாதம் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

இந்தப் படத்தில் இன்னும் பலர் இல்லை. என் தமிழாசிரியை திருமதி. உலகம்மாள் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். அவர் அன்னை தெரஸாவின் தமிழ் வடிவம். இவருடனும் மே மாதம் பேசினேன்.  

ஆங்கில ஆசிரிய்ர் திரு.ராமானுஜமும் இந்தப் படத்தில் இல்லை. அந்த ஆங்கில ஜாம்பவானின் அறிவுக்கு ஈடு அவரே தான்.

இன்றெல்லாம் ஒரு நாலு வார்த்தை பேசவும் எழுதவும் வருகிறது என்றால் அவை எல்லாம் இவர்கள் போட்ட பிச்சை மட்டுமே.

இவர்கள் என்னைச் செதுக்கிய சிற்பிகள். சமீபத்தில் 1988ம் வருடம் வெளியேறிய மாணவர்கள் இவர்களை நெய்வேலியில் சந்தித்துள்ளனர். அவர்கள் பாக்கியவாங்கள்.

இவ்வாசிரியர்கள் கை பட்ட பல சிற்பங்களில் நான் ஒரு சிதறிய துண்டு.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

One thought on “என்னைச் செதுக்கிய சில சிற்பிகள்”

  1. எனக்குப் பிடித்த ஊர் நெய்வேலி. காரணம் என் சகோதரன் அங்கு வேலை செய்ததால் மட்டும் அல்ல. நெய்வேலியின் சுத்தம், சுகாதாரம், நகர அமைப்பு,வீடைப்பு அனைத்தும் மனதிற்குகநதவை.இந்த சூழல் இருபது ஆண்டுகளுக்கு முன். இப்போது கிட்டத்தட்ட சராசரி தமிழக நகராகிவிட்டது. என் பள்ளிப் பருவத்தில், கும்பகோணத்திலிருந்து பிரெஞ்ச் பாண்டிச்சேரிக்கு ச் சென்று அங்குள்ள தனி அழகை ரசித்தவன். அதற்குப் பிறகு, நெய்வேலி மனத்தைக் கவர்ந்த ஊராகியது. அப்போதெல்லாம் நெய்வேலி நேரு பள்ளி மிகப் பிரசித்தமானது. தமிழ் நாட்டின் தலை சிறந்த மாணவர்கள் அங்கே உருவானதைப் பார்க்க முடிந்தது,..அந்தப் பள்ளியின் பின் புறத்தில் தான் எங்கள் வீடு. அன்றாடம் அந்தப் பள்ளியைப் பார்க்கும் புண்ணியம் கிடைத்தது. அதில் விளைந்த பயிர் நீங்கள் என அறிந்து மகிழ்ச்சி ஆமருவி!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: