நெய்வேலியில் என்னுடன் பள்ளியில் படித்தார் டாக்டர்.கல்பனா. தற்போது சிங்கப்பூரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் இந்த நாட்டில் தன் பிள்ளைகளை நமது பாரதப் பண்பாட்டின் அடையாளமான திருமுறை இசை, கர்நாடக இசை முதலியவற்றில் பயிற்றுவித்து வருகிறார். பிள்ளைகளும் கல்வியில் முதன்மையாகவும், கலைகளில் மேலும் முதன்மையாகவும் தேறி வருகின்றனர்.
அருமையான அந்தக் குழந்தைகள் இவ்வாண்டு நவராத்ரியின் போது எம் இல்லம் வந்து தங்கள் பாடல்களினால் இல்லத்தையும் எம் உள்ளத்தையும் நிறைத்தனர். திருமுறைப் பாடல்கள் சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலில் தகுந்த ஓதுவார்கள் மூலம் செம்மையாகப் பயிற்றுவிக்கப் படுகின்றன.
நாங்கள் கேட்டு மகிழ்ந்ததை நீங்களும் கேளுங்கள். தமிழிசையும், கர்நாடக இசையும், திருமுறையும் உங்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.
பிள்ளைவளர்ப்பு என்றால் என்ன என்பதை திருமதி.கல்பனா, அவரது கணவர் திரு.நாகேஸ்வரன் முதலியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும்.