நியூ யார்க் நகர அருங்காட்சியகத்தில் நான் கண்ட பெருமாளுக்கு என்று சில பாசுரங்கள் பாடினேன். அப்பாடல்களை நல்ல ராகத்தில் நல்ல குரல் வளம் உடைய எனது நண்பரின் மகள் பாடி அதனை நியூ யார்க் அருங்காட்சியகத்தில் ஒலி பரப்பலாம் என்று ஒரு சிறு முயற்சி செய்கிறோம். எனவே பின்னால் வரும் பாசுரங்கள் என்ன ராகத்தில் அமையலாம் என்று இசை ஞானம் உள்ளவர்கள் சொன்னால் உபயோகமாக இருக்கும்.
பாசுரங்கள் இதோ :
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
——————-
தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே
———————-
திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
———————
ஆடியாடி யகம்கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடு மிவ்வாணுதலெ
——————–
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
———–
“சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்”
பெருமாளின் அருள் பெற்ற நியுயார்க் பெருமாளுக்கு வாழ்த்துகள்! சுவை சொட்டும் இப்பாடல்களுக்கு சுகமான குரலும்-இசையும் மிக அவசியம். கவனம் செலுத்துங்கள்.
LikeLike
நன்றி சார்.
LikeLike