RSS

Monthly Archives: January 2015

வந்தவர்கள் – ஒரு துவக்கம்

தேரழுந்தூர் பாராயண கோஷ்டி

தேரழுந்தூர் பாராயண கோஷ்டி

பண்பாடில்லாத மனிதர்களின் கதைகள் வரலாறுகளாய்ப் பரிமளிக்கும் போது வரலாறாய் வாழ்ந்தவர்களின் நினைவுகள் நம் எண்ணங்களில் இருந்து மறைந்தன. அவை எழுதப்படாமலேயே அழிந்து போன அறியாத வரலாறுகள்.

அகமும் புறமும் ஒன்றாய் வாழ்ந்து மறைந்து போன வரலாற்று மனிதர்கள் அவர்கள்.

இதை வரலாறாய்ப் படிக்க வேண்டாம்; நன்றாய் வாழ்ந்து வாழ்வில் குறைந்து அழிந்து போன மனிதர்களின் வாழ்க்கைக் கதை என்று கொள்ளுங்கள்.

பெரு நில முதலாளிகளாகவும் அறிவாளிகளாகவும் ஞானவான்களாகவும் இருந்த ஒரு சமூகம், ஓட்டாண்டிகளாகவும் பேராசைக்காரர்களாகவும், அறிவிலிகளாகவும் கரைந்து போய்ப் பின்னர் சிறு நிலங்களை வாங்கவும் அவதிப்படும் அடிமைகளாய் ஆன கதை.
மூன்று தலைமுறைகள் பட்ட பாட்டினால் நான்காம் தலைமுறை பெற்ற பலன் பற்றிய கதை இது.

மனிதனின் கீழ்மையைக் காட்டும் அதே நேரத்தில் மனிதத்தின் மகோன்னதத்தையும் விளக்கும் கதை இது. மேலேறிக் கீழிறங்கிப் பின் மேலேறும் அலைகள் போல மேலும் கீழும் ஏறி இறங்கிய ஒரு குடும்பத்தின் கதை இது.

இக்கதையில் வரும் குறியீடுகள் எந்தக் குடும்பத்தையும், பரம்பரையையும் குறிக்கலாம்.

சமூக நிலையிலும் அறிவிலும் உயர்ந்தும் பொருளியலில் தாழ்ந்தும் இருந்த ஒரு சமூகத்தின் கதை இது.

இந்த வரலாறு மறக்கப்பட்ட வரலாறு; மறுக்கப்பட்ட மக்களின் மண்டு போன வரலாறு; மாண்டுபோன மக்களின் மறுக்கப்பட்ட வரலாறு . இவ்வரலாற்று மாந்தர்களின் வாழ்வுகள் வெளிச்சத்துக்கு வராமலேயே மறைந்து போனவை. அந்த மறைந்துபோன வாழ்வுகளின் தேடிப்பிடித்த மறு பதிவு இது.

படித்துப்பாருங்கள். ஒருதுளி கண் பனித்தால், வாழ்ந்தவர் வாழ்த்துவர்.

வரும் வாரங்களில் இவர்களை சந்திப்போம்.

 
2 Comments

Posted by on January 26, 2015 in Writers

 

Tags:

Why I like Perumal Murugan

I like tamil writer Perumal Murugan for two reasons.

1. He exposed the hypocrisy of the dravidian parties when it came to dealing with casteism.
2. He exposed the lack of unity among Tamil writers when they failed to stand in unison to support him during his hour of need.

The communists,  the rationalists headed by Veeramani of the D.K. et al squared a big zero when they came to know that it was the people from Gounder community who opposed the writer and not the right wing government.

The tall claim that the rationalist leader E.V.Ramasamy Naicker had abolished the caste system came to a nought when the economically and numerically strong Gounder community came together to oppose Perumal Murugan.

Oh yes, there is an insult to the injury as well. Ramasamy Naicker was from Erode, that falls under the Kongu belt where Perumal Murgan was opposed tooth and nail.

I don’t support the ‘culture police’ part but I am happy that this incident has helped bring out the hypocrisy of ‘abolishing caste’.

 
Leave a comment

Posted by on January 16, 2015 in English Posts

 

Tags: , , , ,

பேரூர் மடம் – என்ன நடக்கிறது ?

பேரூர் மடத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளியிலிருந்து உள்ளே நோக்குபவன் என்னும் அளவில் ஆதீனங்கள் என்ன செய்து வருகின்றன என்று சில நண்பர்களுடன் ஆராய்ந்தேன். அதில் பேரூர் மடம் தொடர்பான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

அத்துடன் பேரூர் மடம் புராதன ஆதீன மடம் இல்லை என்றும் சொல்லக் கேட்டேன். மதுரை, தருமபுரம், திருவாவடுதுறை முதலிய ஆதீனங்கள் வரிசையில் பேரூர் இல்லை என்றும், இது கர்னாடக வீர சைவ மரபாளர்களுடன் தொடர்புடையது என்றும் நண்பர்கள் தெரிவித்தார்கள். இவர்கள் தெரிவித்தது பெரும் கவலை அளிப்பதாக இருந்தது. சைவ மடம் என்று சொல்லிக் கொண்டு ஆகம விதிகளுக்குப் புறம்பாகப் பல கோவில்களை அவர்கள் சீரமப்பதாகத் தெரிகிறது. சீரமைக்கிறோம் என்கிற பெயரில் ‘சைவ ஆகமம்’ என்ற பெயரில் ஒரு புது வழியைப் பின்பற்றுகிறார்கள் என்றும் தெரிந்தது.

பல கேள்விகள் எழுந்தன :

  • பேரூர் மடத்தாருடன் கோவை நகர தி.க.வினரும் சேர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள்.
  • கோவில்களை அழிப்பதே தி.க.வின் எண்ணமாக இருக்கும் போது, பேரூர் மடத்துடன் இவர்களது தொடர்பென்ன ?
  • தி.க. ஆன்மீகத்திற்கு எப்போது வந்தது ? கோவில்கள் மேல் அதுவும் சைவ ஆகமக் கோவில்கள் மேல் அவர்களது கரிசனம் பொங்கி வழியும் காரணம் என்ன ?
  • பெரியார்திடீரென்று யாருடைய கனவிலாவது வந்தாரா ?
  • பேரூர் மடத்திற்கும் தி.க.விற்கும் தொடர்பென்ன ?

எல்லாம் போக, மோதி அரசின் காவிக் கொள்கை பற்றி ஆதீனத்தின் கல்லூரியில் இவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள். கல்லூரியில் அரசியல் பேசுவது ஏன் ?

இதில் மொழிப்போர் பற்றியும் பேசுகிறார்கள். பேசாதது ஆன்மிகம் மட்டுமே.

தி.க. கை வைப்பது எதுவும் இந்திய எதிர்ப்பாகத்தனே இருந்திருக்கிறது இதுவரை ?

பேரூர் மடம் தி.க.வின் ஒரு தோற்றமா ?

கால்டுவெல் முதல் ஜி.யு.போப் வரை சைவ சித்தாந்தத்தைக் கிறித்தவத்துடன் இணைத்து பசு, பதி, பாசத்தை ‘ஆடு’, ‘மேய்ப்பர்’, ‘பற்று’ என்றும், ‘மகன்’, ‘தந்தை’, ‘புனித ஆவி’ என்றும் மாற்றிப் மாற்றிப் பேசி வந்தனர். திருவள்ளுவர் புனித தோமையாரினால் கிறித்தவராக மத மாற்றம் செய்யப்பட்டார் என்று கதை புனைந்தனர்.

இதனை அனுசரித்துத் தேவநேயப் பாவாணர், பாதிரியார் தேவநாயகம் முதலானோர் அதே பல்லவியைப் பாடினர். இதற்குத் தி.மு.க. அரசு உதவி செய்தது. குறிப்பாக ‘திருவள்ளுவர் கிறித்தவரா?’ என்று ஒரு நூலை எழுதினார் தேவநாயகம். இதற்கு மு.கருணாநிதி முன்னுரை எழுதியுள்ளார்.

இந்த சைவத்தைக் கிறித்தவத்துடன் இணைத்தல் என்கிற பழிக்கு திராவிட இயக்கங்கள் என்கிற போர்வையில் வரும் அமைப்புகள் ஆதரவு பெருமளவு அளித்துள்ளன. முக்கியமாக்த் தமிழ்க் கத்தோலிக்கப் பாதிரியார்கள் தி.மு.க. அனுதாபிகளாகவும், இந்திய எதிர்ப்பாளர்களாகவும் இருப்பது நம் கண்கூடு.

சைவத்தை வேத மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்; சைவத்தைக் கிறித்தவ தாக்கம் உள்ளதாகக் காட்ட வேண்டும்; தமிழர் மதம் என்று ஒன்று தனியாக இருப்பதாகக் காட்ட வேண்டும்; அப்போதுதான் தமிழுக்கும் ஒன்றுபட்ட இந்தியாவிற்கும் இடையே ஒரு வேறுபாட்டை உருவாக்க முடியும்; அப்படிச் செய்தால் இலங்கையின் தமிழ் மாகாணங்களை இணைத்துத் தமிழகத்துடன் சேர்த்துத் தமிழ் நாடு என்று ஒரு தனி நாடு கோரலாம்; அதற்குக் கிறித்தவ மத போதகர்களின் வழி காட்டுதல்கள் ஏற்பாடு செய்ய முடியும்; அன்னிய முதலீடும் இதற்குக் கிடைக்கும். இந்தப் பன்முனைத் தாக்குதல் கடந்த சில  ஆண்டுகளாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு  நிகழ்வில் பாதிரியார்கள் முன் நின்று செயல்பட்டது கவனிக்கப்பட வேண்டியது.

இதன் தொடர்ச்சியே பேரூர் மடம் – தி.க. தொடர்பு என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்னும் அதிர்ச்சி அளிக்கும் செய்திகளும் கிடைக்கின்றன. பல பழைய கோவில்களை சீரமைக்கிறோம் என்று சொல்லி, பழைய சிலைகளுக்குப் பதிலாகப் புதிய சிலைகள் வைக்கப்படுகின்றன என்றும், பழைய சிலைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன என்றும் இணையத்தில் பேசப்படுகிறது.

இது குறித்த நண்பர்கள் அளிக்கும் சுட்டிகள் கவலை அளிப்பதாக உள்ளன. நெருப்பில்லாமல் புகையாது.

மேற்சொன்ன என் கருத்துக்கள் / அனுமானங்கள் தவறு என்றால் அதற்கான ஆவணங்களைத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

(திராவிட-கிறித்தவ மதமாற்ற சக்திகளின் கூட்டணி பற்றி மேலும் அறிந்துகொள்ள ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ‘உடையும் இந்தியா’ ஆவண நூலைப் பார்க்கலாம்.)

 
3 Comments

Posted by on January 14, 2015 in Writers

 

Tags:

'கிறித்தவமும் சாதியும்' – நூல் ஆய்வு

‘கிறித்தவமும் சாதியும்’ என்னும் பேராசிரியர் ஆ,சிவசுப்பிரமணியனின் நூல் பற்றிய என் ஆய்வு. அதிக மக்களைச் சென்றடையவேண்டும் என்பதால் ஆங்கிலத்தில் அளித்துள்ளேன். சுட்டி இதோ ‘கிறித்தவமும் சாதியும்’.

 
Leave a comment

Posted by on January 11, 2015 in Writers

 

Tags:

இராமானுசர் வந்திருந்த போது

கோபுர வாசல் சுவர்

கோபுர வாசல் சுவர்

என்ன அப்படியே நின்றுவிட்டீர்கள் ? மதிலைப் பார்த்து மலைத்துவிட்டீர்களா ? உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.

பிராகாரம்

பிராகாரம்

இது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.

குதிரை மண்டபம்

குதிரை மண்டபம்

இதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.

அதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.

புரந்தர தாசர்

புரந்தர தாசர்

இவர் யார் என்று பார்க்கிறீர்களா ? புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.

அட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே ! அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ! ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு !

அங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் ? குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது ? இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா ! அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் !

இல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.

நீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே ! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் ? அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் ? இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.

சுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .

அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்

அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்

‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் ! அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.

மேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் ! சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்
ஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.

ஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன ?

மூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.

சூக்ஷ்ம சொரூபமா ? என்ன பேச்சு இது ?

இராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா ? நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.

வயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே ? நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா ? அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது  வைணவம்.

தங்க விமானம்

தங்க விமானம்

என்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ?  சரி, எழுந்திருங்கள்.

என்ன நினைவு இது ? என்ன அருகில் யாரையும் காணோம் ? இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது ? நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே ? இராமானுசர் எங்கே? தேசிகர் எங்கே ? திருக்கச்சி நம்பிகள் எங்கே ? மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்களா ? அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா ? எந்த நூற்றாண்டு இது ?

திடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.

மெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.

கூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.

ஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ ?

கோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்
சேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…

சே, என்ன ஒரு ஹலூசினேஷன்.

 
4 Comments

Posted by on January 3, 2015 in Writers

 

Tags: , , , , ,

 
%d bloggers like this: