
பண்பாடில்லாத மனிதர்களின் கதைகள் வரலாறுகளாய்ப் பரிமளிக்கும் போது வரலாறாய் வாழ்ந்தவர்களின் நினைவுகள் நம் எண்ணங்களில் இருந்து மறைந்தன. அவை எழுதப்படாமலேயே அழிந்து போன அறியாத வரலாறுகள்.
அகமும் புறமும் ஒன்றாய் வாழ்ந்து மறைந்து போன வரலாற்று மனிதர்கள் அவர்கள்.
இதை வரலாறாய்ப் படிக்க வேண்டாம்; நன்றாய் வாழ்ந்து வாழ்வில் குறைந்து அழிந்து போன மனிதர்களின் வாழ்க்கைக் கதை என்று கொள்ளுங்கள்.
பெரு நில முதலாளிகளாகவும் அறிவாளிகளாகவும் ஞானவான்களாகவும் இருந்த ஒரு சமூகம், ஓட்டாண்டிகளாகவும் பேராசைக்காரர்களாகவும், அறிவிலிகளாகவும் கரைந்து போய்ப் பின்னர் சிறு நிலங்களை வாங்கவும் அவதிப்படும் அடிமைகளாய் ஆன கதை.
மூன்று தலைமுறைகள் பட்ட பாட்டினால் நான்காம் தலைமுறை பெற்ற பலன் பற்றிய கதை இது.
மனிதனின் கீழ்மையைக் காட்டும் அதே நேரத்தில் மனிதத்தின் மகோன்னதத்தையும் விளக்கும் கதை இது. மேலேறிக் கீழிறங்கிப் பின் மேலேறும் அலைகள் போல மேலும் கீழும் ஏறி இறங்கிய ஒரு குடும்பத்தின் கதை இது.
இக்கதையில் வரும் குறியீடுகள் எந்தக் குடும்பத்தையும், பரம்பரையையும் குறிக்கலாம்.
சமூக நிலையிலும் அறிவிலும் உயர்ந்தும் பொருளியலில் தாழ்ந்தும் இருந்த ஒரு சமூகத்தின் கதை இது.
இந்த வரலாறு மறக்கப்பட்ட வரலாறு; மறுக்கப்பட்ட மக்களின் மண்டு போன வரலாறு; மாண்டுபோன மக்களின் மறுக்கப்பட்ட வரலாறு . இவ்வரலாற்று மாந்தர்களின் வாழ்வுகள் வெளிச்சத்துக்கு வராமலேயே மறைந்து போனவை. அந்த மறைந்துபோன வாழ்வுகளின் தேடிப்பிடித்த மறு பதிவு இது.
படித்துப்பாருங்கள். ஒருதுளி கண் பனித்தால், வாழ்ந்தவர் வாழ்த்துவர்.
வரும் வாரங்களில் இவர்களை சந்திப்போம்.
சார்.. இது புத்தகமா, கட்டுரையா.. புத்தகம் எனில் எழுதியவர், மற்றும் விபரங்கள் வேண்டும்.. ஆன்லைன் எனில் லிங்க் தரவும்..
LikeLike
The new series I am writing
LikeLike