அன்பான ஆமருவி, ‘பழைய கணக்கு’ பற்றிய புதிய கணக்கை நான் சொல்கிறேன். நீங்களே எழுதி, நீங்களே உங்கள் நூல் வெளியீட்டு விழாவைப் பற்றி எழுதுவதை விட , அந்நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு, உங்கள் அன்பான வேண்டுகோளுக்கிணங்கி முதல் நூலைப் பெற்றவன் என்ற முறையில் சில வார்த்தகள் எழுதுகிறேன். இத்தனை எழுத்து ஆற்றலும், மொழி ஞானமும் உள்ள நீங்கள் ,முதன் முதலாக இங்கே இந்த நூலை வெளியிடுவது பெருமைக்குரியது. இந்திய எழுத்துலகில் புகழ்பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்த்தோடும், ஆசியுடனும் நூலை வெளியிட்டது என்றும் நினைவிற்குரியது. உள்ளே கதைகள் ஒவ்வொன்றும் ரத்தினங்களாக ஜொலிக்கின்றன. நேற்றிரவே எல்லாக் கதைகளையும் படித்து முடித்த என் மனைவி, , நெஞ்சு நிரம்பிய சொற்களால் உங்களைப் புகழ்ந்து மகிழ்ந்தாள். நல்லாசிகள். நிறைய எழுதுங்கள். ஏ.பி.ராமன். ,