ராமானுஜரைப்பற்றி திரு.கருணாநிதி வசனம் எழுதி ஒரு திரைக் காவியம் வர இருக்கிறது. என்ன செய்வது ? மாநில முதல்வராக இருந்த போதே திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர். இப்போது வேறு வேலை ஒன்றும் இல்லை. குடும்பத்தைப் பார்க்கலாம் என்றால் ஒரே குளறுபடி. வீட்டின் ஒவ்வொரு அங்கத்தினரும் நவக்கிரஹம் போல் ஒவ்வொரு திசை நோக்கி இருக்கின்றனர்.
என்ன தான் செய்வார் மனுஷன் ? கதை எழுதத் துவங்கிவிட்டார்.
விரைவில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய மெகா தொடர் காணீர், காணீர், காணீர்.
இதை சிலர் எதிர்க்கின்றனர். அதுதான் புரியவில்லை. இராமானுசரைப் பற்றி திரு.கருணாநிதி எழுதினால் என்ன ? ‘நான் இராமானுசரின் ஆன்மீகத்தையும், அவரது இறைக் கொள்கைகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பிராமண வகுப்பினராக இருந்தாலும் அவரது சமூக நீதிக் கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையே’, என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.கருணாநிதி. நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் அவர். அவரது அச்சுவையை இராமானுசர் பற்றிய அவரது எழுத்தில் விரைவில் காணலாம்.
அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் எனது ‘நான் இராமானுசன்’ நூலிற்கு திரு.கருணாநிதியின் இந்த வசன நாடகம் ஒரு நல்ல விளம்பரமாக அமையும் என்று எண்ணுகிறேன். இரண்டையும் ஒப்பீடு செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.
இறை அருள் இருப்பின் நூல் வெளி வரும்.
இப்போது வேறு வேலை ஒன்றும் இல்லை…// இதுதான் நிஜம்.. ஏதாவது ஒன்றை செய்து மக்கள் கவனத்தை ஈர்க்க முயலுகிறார்.. அவ்வளவுதான்.. திமுக செத்த கட்சியாகிவிட்டது.. எங்கள் ஊரில் திமுக காரன் என்று சொல்ல இளைய தலைமுறையினர் கூசுகின்றனர். திருடனைப் போல மக்கள் பார்க்கத்துவங்கியதாக நண்பர்கள் கூறுகிறார்கள்..
LikeLike
Very true.
LikeLike