சமீபத்தில் சிங்கப்பூர் வசந்தம் ஒளிவழியில் அமைச்சர் ஈஸ்வரன் அவர்களுடன் ‘ஊடகங்களினால் ஏற்படும் பாதிப்புகள்’ என்னும் தலைப்பில் நான் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதன் காணொளி இதோ 😦 நம்மைப்பற்றி நம்மைச்சுற்றி )
http://video.toggle.sg/en/series/nammai-patri-nammai-sutri-s2/ep9/333865
பலன் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைவிட, பலன் தரும் யோசனைகளை வெளியாக்க இந் நிகழ்ச்சி பெரிதும் உதவுகிறது. ஊடக வளர்ச்சியே , உலக மயமானது என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய ஊடகத்தின் நோக்கமே அதிக உலக மயமாக்குவதை உறுதிப் படுத்துவதுதான். இந் நிலையில் அந்தந்த நாட்டின் நிலைமைக்கேற்ப சட்டங்களை கடுமையாக்குவது – வலுவாக்குவது நாட்டை ஆளும் எந்தக் கட்சிக்கும் ஒத்து வரக் கூடியதல்ல. வேலைக்கு அதிக ஊழியர்களை இறக்குமதி செய்து நாடு பெரிய பலன் அடைவதையே எதிர்க்கும் உள்நாட்டு மக்கள், இன்றைய அரசுக்குச் சவாலாக இருக்கின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.. அதனால் ஊழியர் வருகையைக் குறைத்து, உள்ளூர்காரர்களுக்கு திறனை போதித்து, முதியோரை வேலைக்கமர்த்தி …இப்படியெல்லாம் நிலைமையை இன்றைய அரசு சமாளிக்கிறது என்பது தான் உண்மை. இப்படி இருக்கும்போது, ஊடகக் கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வருவது சாத்தியமில்லாதது. ஆமருவி சொன்னதுபோல், சுய கட்டுப்பாட்டை மக்களுக்குப் போதிப்பது தான் சிறந்த வழி. புரிந்து படித்துப் படிப்பில் முன்னேறி நிற்கும் இன்றைய இளைய சமுதாயத்தினரின் புரியாத் தனங்களையும் தெரிந்து செயல்படும் நுட்பம் இன்று பெற்றோருக்கு மட்டுமல்ல , அரசுக்கும் தேவைப்படுகிறது.
. மொத்தத்தில், முகம்மது அலியின் நிகழ்ச்சி அளிப்பு சிறப்பாக அமைந்தது.
LikeLike