திருமழிசையாழ்வார் தென்கலை சம்பிரதாயத்தை வலியுறுத்துகிறார் என்று சொல்கிறேன். கொஞ்சம் கொளுத்திப் போடலாம் என்று எண்ணம். எதிர் வினைகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம் என்று தோன்றியது.
நான்முகன் திருவந்தாதி என்னும் பாடல் தொகுப்பை எழுதினார் திருமழிசையாழ்வார். அதில் ஒரு அந்தாதிப் பாடல் :
“வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து”
இறைவன் பக்தி உழவன். அவனது நிலத்தில் நாம் ஒரு விதையையும் இட வேண்டாம். அவனே நம்மைப் பார்த்துக் கொள்வான். இவ்வாறு இப்பாசுரத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது. வடிவேலு பாஷையில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்கிறார்கள்.
ஜீவாத்மாக்களான நாம் இறைவனை அடைய எந்த முயற்சியையும் செய்ய வேண்டியதில்லை. அவனே நம்மை அழைத்துக்கொள்வான். அது அவனது கடமை என்பதாகப் பொருள் படுகிறது.
இதனை மார்ஜால நியாயம் என்று சொல்கிறார்கள் – அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதன் தாயே அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச் செல்லும். தென்கலை சம்பிரதாயம் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பது தென்கலையாரரின் மார்ஜால நியாயம்.
வடகலையார் மர்க்கட நியாயம் என்னும் நியதியின் அடிப்படையில் இருப்பவர்கள் – அதாவது குரங்கின் நியாயம். குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக்கொள்ள வேண்டும். தாய் குட்டியைத் தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்காளன நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை என்பதாக வடகலையார் நெறி உள்ளது.
திருமழிசை ஆழ்வார் சொல்வது கொஞ்சம் தென்கலையார் பக்கம் இருப்பது போல் தோன்றவில்லை ? என்ன நினைக்கிறீர்கள் ?
குரங்கோ பூனையோ, இரண்டும் இன்று சாஃப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்ஸனம்
என் வேலை முடிந்தது. ஸ்டார்ட் மீஸிக்.
பி.கு.: திருமழிசை ஆழ்வார் 5-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர். தென்கலை வடகலை பேதங்கள் இராமானுசருக்குப் பின் 13-ம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்த இரு பிரிவுகளின் முன்னோடிகளாக முறையே மணவாள மாமுனிகளும் வேதாந்த தேசிகரும் இருந்தனர் என்பது வரலாறு.
சரி தான்… இதில் எவ்வித சந்தேகமும் இல்லை…
LikeLike
வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவு உண்டு
இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும் – தென்கலை
இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை – வடகலை.
தென்கலையில் மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை.
LikeLike
Please dont fan disturbances amongst both the sects.Your intention may be to bring people into faith rather than causing disturbances. But unfortunately thanks to the vitriolic differences those in fringes rather run away. Because of these sectarian differences so many temples and divya desams have suffered.
Adiyen knows of many Srivaishnavas who belong to Desika Samprathaya who bad mouth Sri Ramanujar (under the wrong impression that Swami Ramanujar represents Thenkalai Samprathayam – He is the Emperumanar who united the different sampradhyams and differences). They resist going to even Divya Desams and other local temple which belong to Thennachayara Samprathayam. Instead they choose to have a small mutt temple and patronize the same. When there is a divided house none prospers. What was once a flourishing religion like Jainism or Buddhism has been reduced to a small sect driving away faithfuls.
Both Samprathayams have to do some soul searching. Answer one question – Are we a caste or a religion. Because if we are the Brahmans or knowledge seekers plus the priestly class who are we preaching to. If we are the equivalent of Bishops and Imams – where are the bulk of faithful whom we should be guiding in spiritual matters. And as pointed out in your article neither of us are doing the theological duties.
LikeLike
To answer the question raised the Cat Vs Monkey came into play to explain the differences to colonialists who already had a template of Calvinism Vs Arminanism.
However there are two approaches in our samprathayam – Sahethukam and Nirhethukam. Let us say you are rich, have very educated family and are inherently talented. So come top in your school exam. There is another child with an extremely disadvantaged background who inspite of adversities score a decent 80%.
In the annual award ceremony it is prerogative of the school principal to overlook the privileged childs 99% and give away the winning shield to poor child. He or She could choose either one. Same principle applies in Sahetukam vs Nirhetukam. Sahetukam is a subsect of Nirhetukam as the Sriman Narayana who is the purushothaman can select a thief or a brigand to directly bless him with Thirumanthiram. Can all the other saints and azhwars go and demand to God saying “Oh God – this is not fair. You have given the Mantra Upadesam to a Thief, overlooking me in seniority whilst I have been working so hard praying you day and night”.
But then does Nirhetukam a form of inculcating laziness. It is meant to show to the world that due to our Karma palan we are born in well bodied or disabled (in mental faculties, moral faculities, with all greed lust and bad qualities exemplified). It is Lord’s choice to break us free from the shackles. A Sahetukan realises the importance of Nirhetukam where he goes to his Boss and says it is upto you now. That is what Azhwar means in the above pasuram.
Thirumazhisai azhwar is also considered a Nayanmar – described as Pugazh Mazhisai Ayyan by Mamunigal He is a true theologian who explores sanatana and outside sanatana tents. Both Buddism(Sakya religion which is said to predate Gautama Buddha) and Jainism (Mahaveera being the last tirtankara) encourage a monastic way of life for serious adherents. Whereas in ours just surrender to His will and carry on with life as usual. And the pinnacle of the subjugation to Divine Will is Nirhetukam.
Conclusion: Azhwar is a Sahetukan he explores various options and realises the true potential of Nirhetukam.
LikeLike
ம்……… சாமான்யர்களான (ஸ்மார்த்தன் அப்படீன்னு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரிடம் சொல்லப்போக நாங்களும் ஸ்மார்த்தர் தான் என்று அவர் வ்யாக்யானம் கொடுத்து அசத்தி விட்டார் :-)) நாங்கள் வடகலை தென்கலை என்ற சித்தாந்த வித்யாசங்களன்னியில் (விளக்கமாகத் தெரியாத படியால்)…………
இரண்டு சம்ப்ரதாய பெரியோர்களுடைய உபதேசாதிகளையும் அதில் உள்ள பாவத்தை மட்டிலும் ரசித்து ருசித்து வந்திருக்கிறோம். மேலும் மிகவும் உறுதியான (என்று பெரியோர்கள் சொல்லியபடிக்கு) சம்ப்ரதாய பலம் உள்ள படிக்கு வாழையடி வாழையாக இரண்டு சம்பரதாயங்களும் வளர்ந்து ஒட்டு மொத்த மானுட குலத்திற்கும் நன்மை பயக்க வேண்டும் என்பது வைஷ்ணவாபிமானியான என் போன்றோரது பெரிய அபிலாஷை.
சமீபத்தில் தரணீபதியான பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன் உறையும் ஒப்பிலியப்பன் கோவிலில் வைஷ்ணவ சான்றோர்களிடையே அபிப்ராய பேதம் என்றும் …….. அதற்குப்பிறகு சில ஃபேஸ்புக் பக்கங்களில் பெருமாள் கோவில் என்றறியப்படும் பேரருளாளனுடைய விண்ணகரத்தே கலை பேதங்கள் கச்சேரி வரை சென்ற விபரமும் வாசித்தது மனக்லேசம் தந்தது என்றால் மிகையாகாது.
ஸ்ரீ ஆரியத்தமிழன் என்ற ஸ்ரீ வைஷ்ணவர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் முதல் விஷயத்தைப் பற்றி கிட்டத் தட்ட கத்தி மீது நடப்பது மாதிரி விளக்கம் கொடுத்திருந்தார்.
கலைகள் இரண்டும் வாழையடி வாழையாகத் தழைக்க வேண்டும். வரும் தலைமுறைகள் அவரவர்களது சிஷ்டாசாரத்தை ச்ரத்தாபூர்வமாக யதோக்தமாக அனுஷ்டிக்க வேண்டும். ஆயினும் கசப்பு குறைய வேண்டும் என்பது என் போன்றோர் அபிலாஷை.
இரண்டு கலைக்கும் வெளியே………
ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு ……….
த்ருணாதபி ஸுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா
அமானினா மானதேன கீர்த்தனீய ஸதா ஹரி:
என வைஷ்ணவ லக்ஷணத்தைச் சொல்லியும்
காது நிறையப் பலமுறை பால்யத்தில் முக்கூர் உ.வே . ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாசார்ய ஸ்வாமி அவர்கள் வாயால்
கொக்கைப் போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப்போல் இருப்பான் என ஒரு வைஷ்ணவோத்தமர் வைஷ்ணவ லக்ஷணம்கேட்ட வ்ருத்தாந்தத்தையும் கேட்டுப் பழகிய படிக்கு……….
வைஷ்ணவ ஸஜ்ஜனங்கள் கசப்பிலாது ப்ரேம பூர்வமாக பழக வேணும் என நப்பின்னை மணாளனான யமுனைத்துறைவனைத்தான் இறைஞ்சவேணும்.
ம்……… இன்னிக்கு ஆஷாட ஏகாதசியும் அதுவுமா ……….. நேத்தியிலேந்து வாரகரி யாத்ரை போன வைஷ்ணவோத்தமர்களைப் பார்த்ததுலேந்து……… இன்னிக்கு காலையில் விட்டலனை பாத்ததுலேந்து……….ஒரே வைஷ்ணவ ஸ்மரணம்.
ஸந்ததம் தவ நாம கீர்த்தனேன
ஸாது ஸமாகம ஸேவனேன
ஸத்கதாஸார ச்ரவணேன
ஸரஸம் கச்சது ஜீவனம் ஸுகேன
வந்தனமஸ்துதே கோவிந்தா ப்ருந்தாவனப்ரிய பரமானந்தா.
(வைஷ்ணவம் பற்றி நீங்கள் எழுதிய வ்யாசங்களை ஒரு ஃபோல்டரில் தொகுத்து வைத்தால் வாசிக்க விழைபவர்களுக்கு சௌகர்யமாக இருக்குமே)
LikeLike
Thank you sir
LikeLike