வைஷ்ணவத் தமிழ் என்று ஒன்று உண்டு. ‘பரிபாஷை’ என்றும் சொல்வர். வேறு மொழி கலப்பில்லாத சுத்தமான தமிழ். அன்றாட வாழ்வில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
‘ரஸம்’ என்பது ‘சாத்துமுது’ ( தக்காளி, புளி முதலியவற்றின் சாறுகளின் அமுது, சாற்றமுது). ‘பாயசம்’ என்பது ‘திருக்கண்ணமுது’ ( திரு+கண்ணன்+அமுது). ‘பொரியல்’ என்பது ‘கறமுது’ ( கறி + அமுது ). ‘கூட்டு’ என்பது ‘நெகிழ்கறமுது’ ( நெகிழ் + கறி + அமுது ). அதுபோல ‘அக்கார அடிசில்’ தற்கால சர்க்கரைப் பொங்கலின் ஒரிஜினல் உருவம். பாலும், அரிசியும் நெய்யும் வெல்லமும் சேர்த்து செய்வது. ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் செய்து கண்ணனுக்குப அளிப்பேன் என்று சொல்கிறாள். தடா என்பதும் அளவு முறை. பெரிய படி என்று சொல்லலாம்.
பெருமாள் உண்ட மீதம் என்பதால் எந்த உணவையும் ‘அமுது’ சேர்த்துச் சொல்வது மரபு.
‘படைத்தல்’ என்று சொல்வது கிடையாது. படைப்பது இறைவன் செயல். எனவே ‘அம்சே பண்ணுதல்’ என்பது பயன்பாட்டில் உள்ளது. இறைவனுக்கு அமுது செய்யப் பண்ணுவது என்பது ‘அம்சே’ பண்ணுவது என்று டுவிட்டர் பாஷையில் வருகிறது. அது போல ‘ஏள்ளப்பண்ணுதல்’ ( எழுந்தருளப் பண்ணுதல் ), ‘திருமேனி பாங்கா ?’ ( உடல் நலம் எப்படி இருக்கிறது ?), ‘தளீப்பண்ற உள்’ ( தளிகை பண்ணுகின்ற உள் அதாவது சமையல் அறை ) என்று இன்னும் பல.
அது போல் ‘சாம்பார்’ என்பதும் கிடையாது. ‘குழம்பு’ தான்.
சில வைஷ்ணவர்கள் ‘இன்னிக்கி கிச்சன்ல என்ன சமையல்? பாயசம் வாசனை வறதே’ என்று கேட்டால் தடா சட்டத்தில் பிடித்துப் போடலாம். .
சிறப்பை அறிந்தேன்… நன்றி…
LikeLike