இன்னா மாமு, இப்ப இன்னான்ற நீயி ?
மாடு புடிக்கவா மாணாமா? நல்ல மன்ஷாளுக்கு ஒரு சொல்லு. புடிக்கவா மாணாமா?
சர்தான் சாரே, புடிக்கல. ஜீவ இம்ஸ மாணான்ற. அத்தான? அப்டி வா வளிக்கி.
ஜீவ இம்ஸ மாணாம்பா. அப்ப டிவில சீரியல் ஓடுதுல்ல அது இன்னா? இம்ஸயா இல்லியா?
ஒரு பொண்ணு. அதுக்கு ஒரு புருசன். அவனுக்கு ஒரு தொடுப்பு. அத்தோட புருசனுக்கு மொத பொண்ணோட ரூட்டு. கட்சீல ஒண்ணுக்கொண்ணு அண்ணன் தங்கெங்குது. இத்த மூணு வருசமா இளுக்கறானுங்க. இத்தவுட இம்ஸ இருக்கா சொல்லு கண்ணு?
அத்த வுடு. ராமானுசர்னு ஒரு கத சொல்றானுங்கோ. இன்னா இளு இளுக்கறாரு கலீங்கரு? அடியேன், அடியேன்னு வேற சொல்றாரு. ஆர அடிக்கறதுன்னு சொல்ல மாட்றாரு. ஒரே இம்ஸையா கீது வாத்யாரே.
பேஸ்புக்கு, வாட்சப்பு கால்த்துல ராமான்ஸர்னு ஒரு சாமியார் இத்த சொன்னாரு, அத்த சொன்னாருன்னு கலீங்கரு உட்டுக்குனேகறாரு பாருங்க. இது வரிக்கும் சாமி இல்லன்னு சொல்லிட்டு, இப்ப அடிக்கறாரு பாருங்க பல்டி. அப்பா! இலங்கை பல்டிய வுட இது இன்னா பேஜாரான பல்டி தெரிமா? இந்த பல்டி இம்ஸய வுடவா ஜீவ இம்ஸ பேஜாருன்ற நீயி?
கோயிலுக்கு போனா வேட்டி கட்டுன்னு சொன்னியே நைனா, கோயிலுக்குள்ள சைட் அடிக்கற மாதிரி படம் எடுக்காதேன்னு சொன்னியா நீயி? அத்த வுடு. இப்பல்லா படம் எடுக்கறானுங்களே. பாக்க முடியுதா உன்னால? அத்தவுட ஜீவ இம்ஸ உண்டுன்றியா நீயி?
வைகோன்னு ஒரு தலீவரு. நல்லவருன்னானுங்கோ. தொண்ட கிழிய கத்துறாரு. அட இன்னாடா சொல்றாருன்னு பாத்தா விஜியகாந்த வரச்சொல்றாரு. தமிளு, ஈளம், ஈயம்னு போணியாகாம இப்ப விஜிகாந்து கிட்ட உளுந்து கும்புடுறாரு.
மரம் வெட்டினா சிங்கப்பூர்ல பைன் போடுறாங்களாமே! இங்க மரம் வெட்டியே ஒத்தரு டாக்டராயிட்டாரு. அவரு பையன மொதலமைச்சராக்காம உட மாட்டேங்கறாரு. தெனம் தெனம் ஒரே இம்ஸ. இது ஜீவ இம்ஸ இல்லாட்டா வேற இன்னா?
ஆளாளுக்கு மொதலமைச்சருன்றானுங்கோ. கடைல கத்திரிக்கா கணக்கா மொதலமைச்சர கூவி கூவி விக்குறானுங்கோ. இந்த இம்ஸய இன்னாபா பண்ணப்போற நீயி?
திருமா, குருமா, கிச்சாமின்னு இன்னும் சில உருப்படியும் மொதலமைச்சராகணும்னு சொல்லிக்கிறாங்கோ. தமிளு நாட்டுல எத்தினி மொதலமைச்சருங்க இருக்கலாம்னு சொல்றீங்களா சாமீ?
நேத்து பாருங்க, எம் பையன்ட்ட ‘பெருசானா இன்னாடா ஆவப்போற’ந்னு கேட்டா ‘மொதலமைச்சருன்றான்’. இன்னா தெனாவட்டு இருக்கணும் அவுனுக்கு.
தம்மாத்தூண்டு பய அல்லாரும் மொதலமைச்சராகணும்கறானுங்க பாருங்க.
இன்னும் சில வஸ்தாதுங்க கூட திரியுதுங்க. சரத்துகொமாரு, இமானு, இப்பிடி பலதுங்க. முடியல சாமீ.
எத்த எத்தயோ ஜீவ இம்ஸன்றீங்க. இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரீல்ல பாருங்க.
ஒண்ணு செய்யுங்க. இனிமே யாராவுது மொதலமைச்சருன்னா நூறு வாட்டி எளுதச் சொல்லுங்க’ நா இனிமெ சொல்ல மாட்டேன்’. அத்தோட நூறு தோப்புகர்ணம் போடச் சொல்லுங்க.
அல்லாரும் மொதலமைச்சருன்னா அப்ப ராஜாஜி, காமராஜு, பக்தவத்சலம் இவுங்கள்ளாம் ஆரு? ஸ்கூட்டர் மெக்கானிக்கா?
அத்தால, இந்த ஜீவ இம்ஸயெல்லாம் நிறுத்துங்க. பொறவு மாடு புடிக்கறது, மாங்கா அடிக்கறதுன்னு எறங்குங்க.
இன்னா வாத்யாரே நான் சொல்றது? வர்ட்டா?
ப்ராம்ண பாஷையிலிருந்து மெட்ராஸ் தமிள் வரை வெளுத்துக் கட்டுகிறீர்கள்! வாழ்க!
LikeLike
Thanks Sir.
LikeLike
சார், இது நீங்களா..? மலைச்சிப் போயிட்டேன்.. என் roots ஓட பேச்சு வாசனை இப்பவும் மாத்த முடியாம தவிக்கும்போது.. நீங்க வெளுத்து வாங்கிட்டங்க சார் மெட்ராஸ் பாஷையிலே..!
LikeLike
Thanks Major.
LikeLike