RSS

Monthly Archives: May 2016

அமெரிக்காவுக்குப் புரியுமா?

முட்டாளாக இருப்பது என்பது அமெரிக்காவுக்குக் கை வந்த கலை போல. ரொம்ப நாட்கள் கோமாவில் இருந்து திடீரென்று எழுந்து,’ இந்திய முஸ்லீம்களைப் பாராட்டுகிறோம். அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை,’ என்று சொல்லியுள்ளது.

உண்மை தான். அவர்கள் ஆதரிப்பதில்லை. இது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்வது? அமெரிக்காவிற்கு இப்போதுதான் புரிகிறது.

புரிந்தவரை சரி. ஆனால் அது என்ன இந்திய முஸ்லீம்கள்? இந்தியக் கிறித்தவர்கள், இந்திய இந்துக்கள் என்று உண்டா என்ன?

ஒன்று தான் உண்டு. இந்தியர்கள். அவர்களில் சிலர் இந்துமதம், சிலர் கிறித்தவம், சிலர் இஸ்லாம் என்று பின்பற்றுகிறார்கள். ஆனால் கலாச்சாரத்தால் ஒன்றானவர்கள். முன்னெப்போதோ ஒரே முன்னோர்களைக் கொண்டவர்கள்.

அது மட்டும் அல்ல. அடையும் இடம் ஒன்றே; வழிகள் மட்டுமே வேறு என்பதை உணர்ந்தவர்கள். ‘ஸர்வ தேவ நமஸ்கார: ஶ்ரீகேஸவம் பிரதிகச்சதி’ என்பதை உணர்ந்தவர்கள். வானத்தில் இருந்து விழும் மழை நீர் அனைத்தும் இறுதியில் கடலில் சென்று சேர்வதை உணர்ந்தவர்கள். அதையே பிரும்ம தத்துவம் என்று தெரிந்தவர்கள்.

இவர்கள் இந்தியர்கள். பிரும்மம் என்னும் ஓருண்மையினைப் பல பெயர்களில் அழைக்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள். மதமும் மொழியும் இரு சிறு அடையாளங்களேயன்றி வேறில்லை என்று உணர்ந்தவர்கள்.

இவர்கள் ஒரு தாய் மக்கள் என்பதைப் புரிந்தவர்கள்.

அமெரிக்காவுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை.

 
2 Comments

Posted by on May 27, 2016 in Writers

 

Tags: , ,

வெள்ளை யானை – நூல் மதிப்புரை

vellai yaanaiஜெயமோகன் ‘வெள்ளை யானை’ என்னும் பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். தாது வருஷத்துப் பஞ்சம் பற்றிய இந்தக் கதையில், உண்மையும் பல புனைவுகளும் நிரம்பி எது உண்மை, எது புனைவு என்று தெரியாத வண்ணம் உள்ளது.

பஞ்சம் வந்தது உண்மை. மக்கள் பட்டினி கிடந்து மடிந்தது உண்மை. தாழ்த்தப்பட்டோர் பெரிய அளவில் மடிந்தது உண்மை. அதே சமயம் அனைத்து மக்களும் அவதிப்பட்டு அவர்களிலும் பலர் மடிந்தது உண்மை. தாதுக் கும்மி என்று தஞ்சை பக்கம் இப்போதும் பாடக் கேட்கலாம்.

கதை: ஒரு ஐரிஷ் அதிகாரி பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகச் சென்னை வருகிறான். அவன் பார்வையில் பஞ்சம் விரிகிறது. மக்கள் துயர் அவன் பார்வையில் எழுதப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டி வரவழைக்கப்பட்டு இந்தியாவின் கனவான்களுக்கு மது அருந்த வழங்கப்படுவது ஒரு தொழில். அதற்கு அந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் எப்படிப் பட்டினியால் அவதிப்படுகின்றனர், சாதி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்று அந்த அதிகாரியின் பார்வையில் விரிவதாக நாவல் பயணிக்கிறது.

நெஞ்சை உலுக்கும் பஞ்சக் காட்சிகள், சாதி அமைப்பின் கொடூரம் எல்லாம் மிகைப்படுத்தல்களுக்கிடையே வெளிப்படுகின்றன. கதை மாந்தர்கள் சிலர் நாடகப் பாணியில் பேசுகின்றனர். சில உண்மை வரலாற்று நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்ட கதையும், செனேட் ஹால் கட்டப்பட்ட கதையும் இந்தச் சோகச் சித்தரிப்பில் இடம்பெறுகின்றன.

ஐஸ்கட்டியை ‘வெள்ளை யானை’ என்று ஒரு படிமமாகச் சொல்வது அருமை. இங்கு ஜெயமோகன் ஜொலிக்கிறார். ஆனால் முரஹரி ஐயங்கார் பாத்திரம் கதையில் ஒட்டவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. ஷெல்லியின் வரிகள் கதை ஓட்டத்திற்கு மெருகு சேர்க்கிறது.

பஞ்சம் அறியாத நமது தலைமுறையினருக்கு அது பற்றி அறிந்துகொள்ள இது ஒரு நல்ல தொடக்கம். மதுஸ்ரீ முகர்ஜீ எழுதிய Churchill’s Secret War: The British Empire and the Ravaging of India during World War II என்ற நூலை இதை அடுத்து படிக்கலாம்.

அந்த நூல் பற்றிய எனது மதிப்புரை இங்கே.

 

Tags: , ,

படைப்பூக்கம் பெற என் உத்தி

”அந்த குறளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன்.

‘சம்பந்தம் இருக்குண்ணா குறளை எல்லாரும் சொல்லுகானுக? குறள்னாக்க ஞாபகம் வாற எடத்துல சும்மா எடுத்து போடறதுக்குண்டான ஒண்ணாக்கும். எனக்க கிட்ட கேக்கேரே கருணாநிதிட்ட கேப்பேராவே?’

‘அறம்’ தொகுதியில் ‘பூமேடை’ கதையில் பூமேடை ராமையா என்னும் தியாகி சொல்வதாக வரும் ஒரு பேச்சு. சம்மட்டி அடி என்றால் இது தான். இக்கதையைக் கருணாநிதி படித்திருப்பாரா தெரியவில்லை.

அதே போல் இன்னொன்று. பூமேடை சொல்வதாக வருவது: ‘அன்னைக்குள்ள தியாகியெல்லாம் இன்னைக்குப் பிக்பாக்கெட்டாக்கும். அப்ப அன்னைக்குள்ள பிக்பாக்கெட் இன்னைக்குத் தியாகி தானே?’ இது ஒரு சுத்தியல் அடி.

இன்னொன்று: ‘இது நம்ம சுதேசி கோர்ட்டு. மேலே சீலிங் ஃபேனெல்லாம் உண்டு. காந்தி படம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு.. மத்தபடி அதே டவாலி, அதே பளைய பேப்பரு. அதே சட்டம். ஒரு ஐயராக்கும் ஜட்ஜு. பழைய தண்டனைய பாக்காரு. பிரிட்டிஷ் சர்க்காரு நடைமுறைகளை அப்பிடியே ஃபாலோ பண்ணணுமுன்னுல்லா சுதேசி சர்க்காருக்க சட்டம்?’ விடுதலை பெற்ற பின் நமது சட்டத்தின் நிலையை இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

தியாகி பென்ஷன், மொழிப்போர் பென்ஷன் வாங்கியிருக்கலாமே என்னும் கேள்விக்குப் பூமேடை சொல்வது: ‘அது செத்தவனுக்குப் போடுற வாய்க்கரிசில்லா? நான் இப்பமும் சீவனோட இருக்கறவனாக்கும் வே. காந்திக்கு பென்ஷன் குடுத்தா வாங்கிட்டிருப்பாரா?’

‘பூமேடை’ கதையில் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஜெயமோகன் ஜொலிக்கிறார்.

எத்தனை முறை படித்தாலும் ‘அறம்’ தொகுப்பு திகைப்பை ஏற்படுத்தும் படைப்பு. சுமார் 8 முறை படித்திருப்பேன். புதிய படைப்பு ஏதாகிலும் செய்ய முயலும் போது ஒரு மன ஒருமை ஏற்பட நான் நாடுவது ‘அறம்’ தொகுப்பை.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

 
1 Comment

Posted by on May 23, 2016 in Writers

 

Tags: , ,

Tamil Rumba Easy, Sir

Sanjay RoyI was getting ready to sleep on the iron chairs arranged in the form of a cot in the reception area of Madras Medical Mission Hospital as my mom was in the ICU for an ailment. The lights were being dimmed and then I heard a quaint voice in Tamil Neenga night list receipt vaangitteengalaa? Have you got the receipt for staying for the night?

More than the question, his Tamil interested me. I could see he was from the north east. The writer in me woke-up and began a conversation with him.

He was Sanjay Roy from Assam who was fluent in Bengali, Assamaese, Hindi, English and now, Tamil. Having been a security guard in Chennai for the last four years, his natural affinity for languages made him learn Tamil. And here he was, talking to me in a slow yet steady Tamil. He spoke better than many of the TV announcers.

What I learnt from him that night :

  1. He was a Bengali, settled in Assam who was working in Chennai.
  2. It took 3 days for him to go home by train.
  3. There was no development in Assam.
  4. Tarun Gogoi and ULFA – both are goons who extracted money from the ordinary folks.
  5. BJP was the only hope and he was hoping for the party’s win.

My final question to him: How did you learn Tamil so fast?

He said,’Indian language thaane sir, rumba easy. Interest venum, avlodhan’ It is another Indian language and hence it is very easy to learn. You should have an interest to learn the language.

Only if the Tamil chauvinists were like Sanjay !

 
2 Comments

Posted by on May 22, 2016 in Writers

 

Tags: , , , ,

'நான் இராமானுசன்'-நூல் வெளியீடு

naan raamaanusanஇறையருளும் குருவருளும் ஒருங்கே இணைந்ததால் ‘நான் இராமானுசன்’ நூல் வெளியீடு இன்று இனிதே நடந்தேறியது. ஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல ஆன்றோர்கள் பேசினர். பெரியவர் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ, ஸ்தாணுமாலயன், சதுர்வேதி சுவாமி, திரு.கலாநிதி முதலானோர் பேசிய சிலர்.

கலாநிதி அவர்கள் வெளியிட, திரு தடா.பெரியசாமி நூலைப் பெற்றுக்கொண்டார். பெரியசாமி அவர்கள் தலித் மாணவர்கள் நலனுக்காக ஆற்றி வரும் சேவைகள் பற்றி எழுத ஒரு தனி பதிவு வேண்டும்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த வாசக சொந்தங்களுக்கு என் வந்தனங்கள். முக நூல் வழியாக மட்டுமே தொடர்பில் உள்ள பல நண்பர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

சிங்கங்கள் கர்ஜித்த அந்த விழாவில் இந்த எலியும் பேசியது. அதன் காணொளி இங்கே.

 
1 Comment

Posted by on May 10, 2016 in Writers

 

Tags: ,

நான் இராமானுசன் – நூல் வெளியீடு

நான் இராமானுசன்ஆப்த வாக்யம்’ – கருச் சொற்றொடர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’. இந்த சொற்றொடர் மனதில் வந்து புகுந்தது 2013 என்று தோன்றுகிறது. விஷ்ணுபுரம் படித்தபோது இருக்கலாம்.

ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை.

ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.

விடாமல் துரத்திய அச்சொல் ஒரு நாள் ‘அங் மோ கியோ’ நூலகத்தில் மனதில் விரிந்து விளங்கியது. பாதை புரிந்து பணியைத் துவங்கினேன்.

பெருவியப்பளிக்கும் நூல்களை அது காட்டிக்கொடுத்தது. மறைந்தொழிந்த ஆசான்கள் பலரை அது எனக்கு மட்டுமாகத் தோன்றச் செய்தது. எங்கும் எப்பொழுதும் அந்த நினைவே சூழ்ந்து நிறைந்தது.

பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது ‘நான் இராமானுசன்’ உருக்கொண்டு துலங்கி நிற்கிறது.

ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, ்நூல் உருக் கொண்ட கதை இதுவே.

 
1 Comment

Posted by on May 4, 2016 in Writers

 

Tags: ,

 
%d bloggers like this: