ரங்கா 17 வருஷங்கள் முன்பு அமெரிக்காவிலிருந்து இநதியா திரும்பிவிட்டார்.சென்று 5 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ‘போரும்பா . இங்க பண்றதுக்கு நிறைய இருக்கு. வந்துட்டேன்,’ என்றார். எச்.1பி.க்காக நாட்கள் கணக்கில் சாப்ட்வெர் மக்கள் அமெரிக்க கான்சுலேட் முன்னர் நின்றிருந்த காலம் அது. ‘ரங்கா கொஞ்சம் எக்ஸண்ட்ரிக்’ என்று பேசிக்கொண்டவர் உண்டு.
சி++ல் அசகாய சூரர். ஜாவாவை அவ்வளவாக விரும்பாதவர். ஆனால் ஜாவாவின் தேவையை உணர்ந்திருந்தார். ‘ஆப்ஜக்ட் ஓரியண்டட்நெஸ் தான் சாப்ட்வெரை எளிமையாக்கும். காலத்தின் தேவை அது’ என்பதில் உறுதியாக இருந்தார். ஜி.எம். பதிவியில் இருந்தாலும் காட்டுத்தனமாய் கோட் அடிப்பார். ஜப்பானில் ஜப்பானியரை விட அதிக நேரம் விழித்திருந்து பல ப்ராஜக்டுகளில் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தினார்.
திடீரென்று புதிய கம்பெனி ஒன்று துவங்கினார். சரியாகப் போகவில்லை. தன்னை நம்பி வேலைக்கு வந்த அனைவருக்கும் வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்தார். எல்லாரையும் கரை ஏற்றிவிட்டுப் பின்னர் கம்பெனியை மூடினார். அமெரிக்காவில் சம்பாதித்தது அனைத்தையும் இழந்தார்.
சில வருடங்கள் முன்பு பஞ்சக்கச்ச வேஷ்ட்டியும் நெற்றியில் பெரிய திருமண்ணுமாக முகத்தில் தாடியுடனும் டி.வி.யில் கோவில் விஷயமாக காரசாரமாக விசாதித்துக் கொண்டிருந்த அந்த முகத்தில் இருந்த பார்வை தீடசண்யம் கட்டிப்போட்ட்து.
பெயரைப் பார்த்தேன். ரங்கராஜன். அவர் அமெரிக்காவில் இருந்து வந்த காரணம் புரிந்தது.
சில நாட்களுக்கு முன் அவருக்கு ஈ-மெயில் அனுப்பியிருந்தேன்.’உங்க ஏரியா இப்ப நல்லா சூடு பிடிக்குது. பிக்.டேட்டாவுக்கெல்லாம் இப்ப ஜாவா அடிப்படையிலான வேலைகள் நிறைய வருகின்றன.’ என்று எழுதியிருந்தேன்.
‘நான் இப்போது மாணவனாக இருக்கிறேன். கலாச்சாரத்தின் மாணவன் ‘ என்று பதில் அனுப்பியிருந்தார்.
வாழ்க நீ எம்மான். ஆளுமைகள்