சங்கப்பலகை – 10

சங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வு (10) 28-மே-2018 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தொல்லியலாளர் விஜயகுமார் ‘சிலையறிதல்’ என்னும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். சோழர் கால, பல்லவர் காலச் சிலைகளைக் கண்டறியும் முறைகள், நமது சிலைகள் காணாமல் போன விபரங்கள், கடத்தப்பட்டு சிறையில் உள்ள விபரங்கள் என்று பல நிகழ்வுகளை விளக்கிச் சொன்னார். பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. 20 பேர் பங்குகொண்டனர்.

நிகழ்வு தொடர்பான காணொளிகள்:

வரவேற்பு – ஆமருவி

சிலையறிதல் – விஜயகுமார்

கேள்வி பதில்

 

अस्तु – ( So Be It ) – Movie Review

What a movie! 

‘Asthu’ (अस्तु), a Marathi movie that revolves around an Alzheimer  patient excels in many spheres and takes mainstream cinema to a different level. 

Dr.Chakrapani Sastry, a retired Sanskrit scholar, afflicted with dementia, forgets even his daughter’s names, yet is able to recall relevant verses from ancient texts that suit the occasion. He gets lost, follows an elephant and is taken care of by the mahout’s family for a day. The struggles that Sastry’s daughter Irawati undergoes to find him forms the crux of the story.

astu-so-be-it-marathi-movieSastry’s slow descent into dementia is well captured. The scenes where the mahout’s wife takes care of the scholar have deep philosophical undertones bordering on Karma and the like. These scenes are bound to bring tears to the viewer.

The transitions from one scene to the other, through the eyes of the daughter, are well made , with an object or verse in the preceding scene acting as the connector to the succeeding one. Eg – The miniature elephant souvenir in a scene followed by the one that shows the actual elephant Lakshmi.

Irawati Harshe plays Irawati, daughter of Sastry. Her controlled and graded emotional outbursts are a treat to watch. Milind Soman plays a supporting husband and an understanding son-in-law. 

The mahout and his wife (Amruta Subash) glitter in their performances, the latter stealing all the scenes effortlessly. 

Dr.Mohan Agashe, a real life Psychiatrist, plays Dr.Chakrapani Sastry and anchors the film all the way through. A man that doesn’t remember anything, following an elephant that is supposed to remember everything, is an interesting aspect of the film.

I particularly liked the steady stream of jingling noise made by Irawati’s bangles. The Kannada-Konkani-Marathi lullaby that the mahout’s wife sings is bound to anchor you to the seat. The lullaby makes all the characters sleep, and that includes the elephant.

The mahout’s daughter is a silent performer. She never spoke a word, but captured my heart.

It is an honour to watch the film. I honoured myself twice.

தமிழகப் ‘போராட்டங்கள்’- தீர்வு என்ன ?

காரணிகள்:
1. ஜெயலலிதா மாறைவு
2. கறுப்புப் பணவொழிப்புக்கான பண மதிப்பிழப்பு
3. ஹவாலாக்காரர்களின் வேலை / பணம் இழப்பு
4. பதுக்கப்பட்ட புலிப்பணம்
5. சினிமா வழியாக இனி மாற்ற முடியாத கறுப்புப் பணம்
6. 2-5ல் தொடர்புடைய மதமாற்று, மத அடிப்படைவாத என்.ஜி.ஓ.க்கள்
7. எல்லா இந்திய எதிர்ப்புக்கும் துணை போகும் உதிரி இடதுசாரிகள்
8. கறுப்புப் பணத்தை மாற்ற முடியாமல் செய்த ஆதார் திட்டச் செயலாக்கம்
9. நீட் தேர்வால் வருவாய் இழந்த தனியார் பல்கலைக்கழகங்கள் / பள்ளிகள்
 
பங்கேற்பாளர்கள்:
1. மூளை மழுங்கடிக்கப்பட்ட ஐ.டி.ஊழியர்கள்
2. சினிமா தவிர எதுவும் அறியாத சிந்தனையாளர்கள்
3. மார்க்கெட் இழந்த நடிகர்கள் + புதிய அவதாரப் போராளிகள்
4. வெளி நாட்டில் இருந்து கொண்டு 2,3க்குப் பண உதவி செய்யும் மூடர்கள்
5. மேற்சொன்ன அனைவரிடமும் தங்களை அடகு வைத்த ஊடக வியாபாரிகள்
6. வணிகர் சங்கங்கள்
 
பாதிப்பு:
1. தமிழகம்
2. அப்பாவித் தமிழர்கள்
3. தமிழ்க் குழந்தைகள்
4. தமிழக அறிவியல் (நியூட்றினோ)
 
பயனடைவது:
1. மற்ற மாநிலங்கள் (தொழில் துறைத் தேக்கம், தொழில் இடம் பெயர்வு)
2. சீனா ( சாகர் மாலா எதிர்ப்பு, இணையத் துறைமுகம் எதிர்ப்பு..)
3. சவூதி அரேபியா (ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எதிர்ப்பு)
 
தேவை:
1. முதுகெலும்பு (மத்திய,மாநில அரசுகளுக்கு)
 
நம்பமுடியாதது:
1. 1999ல் சீனாவில் பாகிஸ்தானின் தூதரகத்தில் முஷரப்பின் போனை ஒட்டுக் கேட்டு வெளியிட்ட உளவுத்துறை, பிரிவினைவாதிகளின் எண்ணங்களை அறியமுடியாதிருப்பது போல் இருப்பது
 
நடக்கக் கூடியது:
1. ஓய்வுபெறும் வயதுடைய நடிகர்களுக்கு அரசியலில் புனர்வாழ்வு
2. விருதுகள் திரும்ப வாங்கும் விழாக்கள
 
ஸ்டெர்லைட் பிரச்னை தீர:
1. ஸ்டெர்லைட்டை அனில் அகர்வால் பில் கேட்ஸிடம் விற்பது
2. ஸ்டெர்லைட் வளாகத்துக்குள் எஸ்றா சற்குணத்துக்கு அலுவலகம் கட்டிக் கொடுப்பது
3.இதனால் அங்கு ஏற்படும் சமாதானம்
#TheStateofTamilNadu #sterlite

பாலா

‘Sir, you have disappointed me. Why did you do this? Why didn’t you write about this? I am crying daily. Can’t overcome the loss. Never expected this from you..’

இப்படி ஒரு வாட்சப் அனுப்பியிருந்தார் நண்பர்.

வழக்கம் போல் நேரம் கழித்தே பர்த்தேன். புரியவில்லை. ‘What is this about?’ என்று கேட்டு அனுப்பினேன்.

சரியாக 2 நிமிடங்கள் கழித்து என் முன் தோன்றினார் அவர். ‘இல்ல புரியலையா. பாலா தான். நீங்க ஒண்ணுமே எழுதலையே. எல்லாம் முடிஞ்சு போச்சு சார். நான் போயிட்டேன். இனி எப்ப வெளில வருவேன்னு தெரியல..’ சொல்லிக்கொண்டே அவர் சென்றுவிட்டார். உடனிருந்த மற்றொரு நண்பர் சொக்கநாதன் ‘என்ன விஷயம்?’ என்றார். ‘பாலகுமாரன்’ என்றேன் நான்.

2 மணி நேரங்கள் கழித்து அழைத்தவர் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டே பேசினார்.

‘எங்கப்பா சார் அவர். பத்து அப்பா அவர். எங்கப்பா செத்திருந்தா கேட்டிருப்பீங்கல்ல? பத்தப்பா போனதுக்கு நீங்க கேக்கல, எழுதவும் இல்லை. நான் செத்து சுண்ணாம்பா போயிருப்பேன் சார். சீரழிஞ்சு கம்யூனிஸ்டா போயிருப்பேன். பாலாவால இன்னிக்கி நிக்கறேன் சார்.

‘இத்தன வருஷத்துல போய் பார்த்ததும் இல்லை. வருஷாவருசம் இந்தியா போகும் போதும் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, போகமாட்டேன். போயிட்டார்னு சொன்னவுடனே டிக்கெட் புக் பண்ணிட்டேன். பாஸ்போர்ட் நம்பர் கேட்டப்பதான் எம்பஸில ரின்யூவல்ல இருக்குன்னு ஞாபகம் வந்தது. நான் மட்டுமில்ல சார், எத்தனையோ லட்சம் பேர் இன்னிக்கி டிரக் அடிக்ட், வழி தவறினவங்களா இல்லாம இருக்கறதுக்கு அந்தாள் தான் காரணம்.

‘ஆயிடுச்சா ஆயிடுச்சான்னு வாட்சப்புல கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனப்புறம் பாயசத்தோட சாப்டேன். எங்கசார் போயிட்டார் அவர்? இங்கதான் சார் இருக்கார். ஆனா முடியல சார், போயிட்டாரே சார். எங்கப்பா போயிட்டாரே சார்.’

5 நிமிடப் பேச்சு, மிச்சதெல்லாம் அழுகை. ஐரோப்பிய வங்கியில் உயர்ந்த நிலையில் இருக்கும் நண்பர், பால குமாரனின் இழப்பைத் தாங்க முடியாமல் இன்னமும் கதறிக்கொண்டிருக்கிறார்.

‘நீங்க ஏன் இன்னும் எழுதல?’ என்ற கேள்வி துளைத்துக் கொண்டிருந்தது. அவருக்குச் செய்யப்பட்ட ஒரு அநீதி மனதில் தணலாய்க் கனன்றுகொண்டிருக்கிறது. அதை நிவர்த்தி செய்வதே நான் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும் என்று சொன்னேன்.

balaபாலகுமாரன் – கல்லூரி நாட்களில் அறிமுகமானவர். அவரது இரும்புக் குதிரையையும், தி.ஜானகிராமனின் மரப்பசுவையும் நண்பர்கள் மத்தியில் ஒப்பிட்டுப் பேசியுள்ளோம். அவரது மெர்க்குரிப் பூக்கள் அளித்த அதிர்ச்சியைப் பல நாட்கள் கழித்தும் உணர்ந்திருக்கிறேன். உடையார் தொகுதி மேக்னம் ஓபஸ் என்னும் வகைக்குள் அடங்கும். அவர் அறிமுகப்படுத்திய பாலா திரிபுர சுந்தரியைப் பல நாட்கள் கனவில் கண்டு பேசியுள்ளேன்.

1999ல் ஒரு முறை எல்டாம்ஸ் சாலை சிக்னனில் நிற்கும் போது அவர் ஸ்கூட்டரில் அடுத்தபடி நின்றுகொண்டிருந்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் ‘நமஸ்காரம் சார்’ என்றேன். ‘ராம் சூரத் குமார் உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று சொன்னார்.

உறங்காவில்லி தாசர் பற்றிய பாலகுமாரனது படைப்பை நான் இருமுறை படித்து அனுபவித்திருக்கிறேன்.

எனக்கும் அவருக்குமான விலகல் அவரது ஆன்மீகப் பாதை என்னிலிருந்து வேறுபட்டதில் துவங்கியது.

தேசிய அளவில் புகழப்படாத, மாநில அளவில் பல்லக்கில் சுமக்கப்படாத எழுத்தாளராகவே இருந்து மறைவார் என்ற எண்ணம் வலுவாகவே இருந்து வந்தது. காரணங்கள்:

  1. மனதில் இருப்பதை எழுதுவார்.
  2. நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ராஜராஜன், ராஜேந்திரன் பற்றிய பேச்சு எப்போது வந்தாலும், பாலகுமாரன் என்றுமே நினைக்கப்படுவார் என்பது மட்டுமே நிரந்தரம்.

அவர் காலமான மறு நாள் அலுவலகத்தில் ‘பாலகுமாரன் காலமாயிட்டார்’ என்றேன். ‘ஆமாம். டி.வி.ல சொன்னான். ரஜினி கூட வந்தாராம். பாட்சா டயலாக் இவருதாமே. கமல் போகல்லியாமே, அவருக்கு இவர் ஒண்ணுமே எழுதல்லியா?’ என்றார் செல்போனில் நோண்டிக்கொண்டிருந்த அந்த நபர்.

நமக்கு வைரமுத்து, மனுஷ்ய புத்ரன் போன்ற “சிந்தனைச் செல்வர்கள்” போதும் என்று நினைத்துக் கொண்டேன்.

முதல் பக்கம்

வாசுதேவன் நம்பூதிரி, பெயருக்கு ஏற்றாற் போல், உயர்ந்த சாதியில் பிறந்தவர். ரொம்ப உயர்ந்த சாதியாதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாதம் மட்டும் உண்டு. அந்த ஒரு வேளைக்காக மற்ற வேளைகள் பட்டினி இருக்கும் குடும்பம். இருக்கும் என்ன இருக்கும்? இருந்து தான் ஆக வேண்டும். செந்தமிழில் சொல்வதானால் ‘சோத்துக்கு சிங்கி அடிப்பது’ – நேயர்களுக்குப் புரியலாம்.

பெரிய ஞானஸ்தன் இல்லை என்றாலும் பி.காம் இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் அளவுக்குப் படிப்பு வந்தது. கொஞ்ச நாள் கூட்டுறவு வங்கியில் தாற்காலிக பியூன் வேலை. பின்னர் அதற்கான தகுதிகள் இல்லையென்று சொல்லி அனுப்பிக் குஞ்சு கிருஷ்ணன் கோவிலில் வேலை கொடுத்தார்கள். குஞ்சு கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யத் தகுதி உண்டு என்று பொருள் கொள்க.

ஒரு பெண்ணும் ஆணுமாக இரு தங்க விக்கிரகங்கள் பிறந்தன. சோறிருந்தால் மட்டுமே விக்கிரகமானாலும் பளபளக்குமாதலால் விக்கிரகங்கள் வதங்கியேயிருந்தன. அறிவு மட்டும் பிரகாசமாயிருந்தால் போதும் என்று குஞ்சு கிருஷ்ணன் நினைத்தான் போல. குழந்தைகள் படிப்பில் பிரகாசித்தனர்.

பாலக்காட்டையர் மனையில் சமையல் செய்யக் கூப்பிட்டார்கள். சாரதைக்குப் போக இஷ்டம். ஆசாரக் குறைவென்று சொல்லி நம்பூதிரி சமூகக் கட்டுப்பாடு தடுத்ததால் அந்த வருமானமும் இல்லை.

தரித்ரம் பின்னாலேயே வரும் என்பதை நிரூபிக்க வேண்டி, நேராகச் சென்ற லாரி தானாகத் திரும்பி, தெருவோரம் சென்றுகொண்டிருந்த நம்பூதிரியின் காலைக் காவு கொண்டது. கையில் வீட்டில் சமைத்த சாதம் இருந்ததைக் கண்டுபிடித்த சமூகம், குஞ்சு கிருஷ்ணனுக்குக் கோவிலில் நீராடியே சமையல் செய்து நைவேத்யம் செய்யவேண்டிய நம்பூதிரி வீட்டில் இருந்து சோறு கொண்டு சென்று நைவேத்யம் செய்ததைக் கண்டு பிடித்துப் பணி நீக்கம் செய்தது.

இருந்த வேலையும், இலவச இணைப்பாய் ஒரு காலும் போன நம்பூதிரி, சாரதையின் நகையை வைத்து ஒரு பெட்டிக் கடை வைத்தார். நாற்சந்தியின் அருகில் இல்லாததாலும், உத்தமோத்தம வைசிய வியாபார யுக்திகள் கைவரப் பெறாத நம்பூதிரியின் கடையும் நொடித்து, உள்ளதும் போனது.

குடும்பம் குடியிருக்கும் சாரதையின் பூர்வீக வீட்டை விற்கலாம் என்றால் அதற்கு அவள் உடன்படவில்லை. ‘பிதுரார்ஜிதம் ஏதாவது ஒன்றாவது இருக்கட்டும், பெண் குழந்தை வேறு இருக்கிறதே’ என்ற சாரதையின் கெஞ்சலில் இருந்த நியாயம் நம்பூதிரிக்குப் புரிந்தது.

நம்பூதிரி, ஒற்றைக் காலுடன், ஊர்ப் பெரிய மனிதரான எம்.எல்.ஏ.யின் இரு கால்களிலும் விழுந்ததால் அவரது குடும்பக் கோவிலில் பட்டனானார். 200 ரூ சம்பளம்.

குழந்தைகளின் பள்ளிப் படிப்பில் நல்ல முன்னேற்றம். படிப்புச் செலவிலும் தான். நம்பூதிரி வீட்டை விற்றுவிடும் படி சாரதையிடம் கெஞ்சினார். வீடும் போனால் நடுத் தெருதான் என்பதால் சாரதை ஒப்புக்கொள்ளவில்லை.

‘வெள்ளிக் கிழமைக்குள் பணம் கட்ட வேண்டும்’ என்று பிள்ளைகள் இருவரும் சொல்ல, ‘இன்னிக்குள்ள முடிஞ்சுடும்’ என்று சொல்லிச் சென்ற நம்பூதிரி ஆசாரியின் கடையில் நல்ல மாம்பிடி போட்ட கத்தியை வாங்கினார்.

‘அப்பா வந்துட்டார்’ என்று வந்து நின்ற மகளின் கழுத்தில் கத்தியைச் சொருகிய நம்பூதிரி, இரண்டே வெட்டில் மகனையும் சாரதையையும் சாய்த்தார். மனைவி போகும் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தன்னை விளக்கேற்றினார்.

‘பிச்சை எடுக்க விடமாட்டேன்’ என்று சொன்னபடியே அவர் எரிந்ததாக மறு நாள் பேப்பரில் செய்தி வந்தது, ஐந்தாவது பக்கத்தில்.

‘அரசு வேலையில் இட ஒதுக்கீடு தொடரும்’: பாஸ்வான் அறிவிப்பு. முதல் பக்கத்தில்.

——————————————–

20-10-1997 அன்று டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதிய கதை.

குழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்

2017-ஜூன்
10ம் வகுப்புத் தேர்வில் அந்தக் குழந்தை 500ற்கு 480+ எடுத்திருந்தாள். தமிழகத்தின் நகராட்சி சார்ந்த ஊர். ‘என்ன படிக்கலாம்?’ என்று கேட்டிருந்தாள். அவளுக்கு அறிவியலில் நாட்டம் இல்லை என்று சொல்லியிருந்தாள்.
வணிகவியல், சமூகவியல் படிக்க அறிவுறுத்தினேன். பின்னர் சி.ஏ. ஏ.சி.எஸ். (அ) முனைவர் பட்டப் படிப்புகள் பயில வாய்ப்பு என்று 2 மணி நேரம் சொல்லியிருந்தேன். மொழிகளில் அதிக நாட்டம் இருந்ததால் ‘தமிழ் படி, நல்ல தமிழாசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் சொல்லியிருந்தேன். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடும்பம் அது என்பதால் இயல்பாகவே ரத்தத்தில் தமிழ் உள்ள பெண் அவள்.
பள்ளிக்குச் சென்றவளிடம் தலைமை ஆசிரியர்,’ 10வதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்துட்டு காமர்ஸ் போறியா? பயாலஜி குரூப் போ. படிச்சு ஸ்கூலுக்கு ரேங்க் எடுத்துக் குடு’ என்று சொல்ல, குழந்தையும் சரியென்று தலையாட்டிவிட்டது.
கெமிஸ்றி புரியவில்லை, பிசிக்ஸ் ஆசிரியருக்குச் சொல்லித் தரத் தெரியவில்லை->புரியவில்லை,தமிழும் கணிதமும் மட்டும் விரும்பிப் படித்தாள்.
+1ல் சரியாகப் பயிலாததால் ஆசிரியர்களிடம் திட்டு. ’10வதுல எப்படி மார்க் வாங்கின?லக்கா?’என்பது போன்ற கேலிப் பேச்சுக்கள்.
சொல்லமுடியாமல் தவித்துள்ள குழந்தைக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. ஓட்டை மருத்துவர்கள் அனாசின் முதல் அமிர்தாஞ்சன் வரைகொடுத்துள்ளார்கள்.மைக்ரேன் என்று சொல்லி அதற்கும் மருந்துகள்.
தலைவலி குறையவில்லை.
யோகாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகி, ஶ்ரீஶ்ரீ யோகாமையத்தில் சேர்ந்தாள்.அந்த மையத்தின் தலைவி குழந்தையைப் பூரணமாக ஆராய்ந்து, இவள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாள் என்று தோன்றுகிறது எனச் சொல்ல, அடுத்து அக்கு பிரஷர் மையம். சிகிச்சை பலனின்றி மன நல மருத்துவர்.
தீர ஆராய்ந்த மருத்துவர் குழந்தைக்கு உடல் உபாதைஒன்றுமில்லை. மனம் சார்ந்த அழுத்தம் என்று விளக்கியுள்ளார்.அதுவரையாரிடமும் பேசாத அப்பெண் குழந்தை,மருத்துவரிடம் பள்ளி, படிப்பு, தேர்வு, இவை சார்ந்த அழுத்தங்கள் என்று சொல்லியுள்ளது.
‘உங்களுக்குக் குழந்தை முக்கியமென்றால் பாடத்தைத் திணிக்காதீர்கள்’ என்னும் அறிவுரையுடன்,விளையாட்டு,பொழுதுபோக்கு, விருப்பமான பாடம்,இசை-என்று இருக்கும்படிச் சொல்லியுள்ளார் மருத்துவர்.
குடும்பம் பெரும் கவலையில் உள்ளது.
ஆசிரியர்களே/பள்ளித் தாளாளர்களே/பெற்றோரே:
  1. குழந்தைகள் இன்னது படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள்.
  2. முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தால் வழி காட்டுங்கள்.
  3. உங்கள் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டிப் பிள்ளைகளைப் பலியாக்காதீர்கள்.
தமிழ் நாட்டுப் பிள்ளைகள் அபிமன்யூவைப் போல் ஒரு வியூகத்தில் சிக்கியுள்ளார்கள். எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள். வெளிவர வழி தெரியாமல் பிள்ளைகள் திணறுகிறார்கள். பள்ளிகள் தங்கள் சுய லாபத்திற்காகவும், பெற்றோர் தத்தமது சுய பெருமைக்காகவும் பிள்ளைகளின் ரத்தத்தையுறிஞ்சுகிறார்கள்.
2018 – மே
குழந்தையை ஒரு வாரமாகப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அவளது தாய் சொன்னார். தலைவலி குறைந்தபாடில்லை. வேறு ஊருக்குச் சென்று வரலாமே என்று பேசிப்பார்த்தேன்.
‘அடுத்த வாரம் வீக்லீ டெஸ்ட் இருக்கே. மார்க் வரல்லேன்னா?’ என்கிறாள் குழந்தை.
தெய்வம்தான் துணைநிற்க வேண்டும். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

ஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்

சொல்லொணாத் துயரம் வரழைத்த நிகழ்வு. கடும் கண்டனமும் தண்டனையும் அளிக்கப்பட வேண்டிய செயல். கன்னியாஸ்திரீகள் ஶ்ரீரங்கம் கோவிலுகுக்குள் சென்று ஜெபம் செய்ய முயன்றுள்ளார்கள் என்னும் செய்தி உண்மையெனில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டின் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.சமூக,மத நல்லிணக்கம் ஒருபோதும் ஒருகை ஓசையன்று.

சென்ற வாரம் தஞ்சையில் பெருவுடையார் கோவில் உற்சவத்தில் கலகம்,இன்று இவ்வாறு ஒரு நிகழ்வு.எஸ்றாசற்குனம் முதலான அரசியல் ஆட்கள் எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.அப்பேச்சுக்களைஉண்மையென நம்பி சாதாரண மக்கள் செயலில் இறங்கினால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கே.

கோவிலில் யாராகிலும் இவர்களிடம் (உணர்ச்சி மேலீட்டால்)வன்முறையில் இறங்கியிருந்தால், பெண்களிக்கெதிரான வன்முறையென்ற பழி ஏற்படுத்த வேண்டும் என்று சமூக விரோதக் கும்பல்கள் நினைத்திருக்கலாம்.கலகத்தால் குளிர் காயும் கயவர் நிறைந்த பூமியாகத் தமிழகம் மாறிவருவது வேதனையே.

32085064_211754902962830_4386972728205246464_nஶ்ரீரங்கம் நிகழ்வில் கோவில் என்று தெரியாமல் வந்துவிட்டோம் என்பதாக அப்பெண்கள் சொல்லியிருக்க மாட்டார்களாஎன்று ஒரு பக்கம் மனம் விரும்புகிறது.ஆனால் எஸ்றாசற்குணம் முதலான சமூக விரோத நபர்களைத் தலைமைப் பீடத்தில் கொண்ட சமூகம் ஆழம் பார்க்கப் பயன்படுத்தப் படுகிறதோ என்கிற எண்ணம் உள்ளத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சமய நல்லிணக்கம் தேவையென்பதால் கன்னியாஸ்திரீகள் கோவிலின் உள்ளே சென்றால் என்ன என்று பகுத்தறிவாளர் கேட்கலாம்.துலுக்க நாச்சியார் சன்னிதி இருப்பது உண்மைதான்.ஆனால் அது பக்தியால்,தியாகத்தால் ஏற்பட்ட சன்னிதி.அதற்கு நெடியதொரு வரலாறு உண்டு. துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் கைலி உடுத்திக்கொண்டு,ரொட்டி கண்டருளப் பண்ணுவது என்று ஒரு உற்சவமும் உண்டுதான்.ஆனால் அதில் தன்னைஅர்ப்பணித்த தியாகம் உள்ளது,ஆச்சாரியர்களின் அனுமதியுடன் ஆயிரம் ஆண்டுகளாக அது நடந்து வருகிறது.

இன்றைய கன்னியாஸ்திரிகள் செயல் அவ்வாறானதன்று. மதத் தலைவர்கள்,மிகுந்த பொறுப்புடனும்,எச்சரிக்கையுணர்வுடனும்,சமூக நலனில் அக்கறைகொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இது.

பல்சமய சகிப்புத் தன்மையைச் சோதித்துப் பார்க்கும் நேரம் இதுவன்று.

சிங்கப்பூரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு-Racial harmony was not attained in a day. பல தலைவர்கள் பல்லாண்டுகள் உழைத்து மக்களிடம் ஒற்றுமையையேற்படுத்தினார்கள்.ஆனால் சிறு பொறியும் பெரும் தீயாகப் பிடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு என்பதால் பெரும் பதவிகளிலும்,அதிகாரத்திலும்,சமயத் தலைமைஇடங்களிலும் இருப்பவர்கள் அளப்பரிய பொறுப்புடன் பேசுவார்கள்,நடந்துகொள்வார்கள். ஏனெனில் ஒற்றுமை,அமைதி இல்லையெனில் பெரும் வீழ்ச்சியேஏற்படும் என்பதைஅனைவரும் உணர்ந்திருப்பதால்.ஒரு சமூகம் முன்னேற இதுபோன்ற அணுகுமுறைஅவசியம்.இது தமிழகத்திற்கும் பொருந்தும்.

மாநிலத்தையும் தேசத்தையும் முன்னேற்றுவதற்குச் செய்ய வேண்டிய செயல்கள் பலதுண்டு.கலகம் விளைவிக்க ஓரிரு செயல்களே போதுமானது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,நம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவர்க்கும் தாழ்வு.

Buddha in a traffic jam – my review

Disclaimer: I don’t watch movies. I watch documentaries. Hence my opinions about a movie could be farther away from the mainstream movie review industry.

‘BITJ’ is a lone right wing movie that has all the right content and intent.

BITJ speaks the truth about urban naxals, their methods and their infiltration in the mainstream world. While it is the obvious truth in India, one wouldn’t have heard of this being spoken in the public space. For, the space is occupied by the urban naxals themselves.

BITJ speaks truth to the untruthful world, but does a lack lustre job of painting a cohesive picture.

The film looks at the dichotomy in the world through the eyes of a management student. The student gets to know about tribals, naxalites, government forces out to destroy the naxalites, some lessons on socialism, academic infiltration by the naxalites, love, middlemen who prevent genuine development of the tribals and many other things. The film is all over the place.

The movie shows elite, ever-smoking, ever-boozing students in an even more elite business school. Probably, the only time the guys and girls don’t smoke is when they sleep.

BITJ is a valiant attempt at portraying truth, but seems to meander around with lectures and pontifications.

In any case, the director Vivek Agnihotri deserves praise for his avant garde effort to speak a truth that is not spoken at all, for the repercussions from Bollywood, academia and media would be too heavy to bear. He withstood the media onslaught, physical violence unleashed on him due to the film, and a general exorcism by the media-academia-industry establishment.

His soon to be released book by name ‘Urban Naxals’ is expected to speak on the trials and tribulations that the director had to undergo prior to and after the release of the film.

Kudos to the director-author Vivek Agnihotri.

 

Are authors any good in contemporary analysis?

Ravi Velloor is the author of ‘India Rising’ – a book on India from a Singapore perspective. It is a well researched book and showed the author’s efforts.

But the author is also an Associate Editor with The Straits Times.

It was Doklan crisis time. Ravi Velloor wrote an extremely below-standard article that said the following:

  1. China would attack India.
  2. Pakistan would join China in attacking India.
  3. Singapore Air Force, that has its training facilities in India’s Kalaigunda Air Base, should look at other options for its training. 

None of the above happened. The article was under-researched, alarmist and lacked details. 

How could the author, who writes a great book, write such an article that reeks of arm-chair analysis and advertises lack of clear thought processes?, I thought.

I got the answer. Arun Shourie, author of many exemplary books, and importantly of a book on China that brought out how and why Nehru prostrated to China and allowed the 1962 disgrace to happen, said during the same Doklam crisis, that India was preparing to get yet another slap on the face. And we know what happened in Doklam.

I got my lesson – Authors are good at hindsight, but, are not pragmatic and not worthy of contemporary analysis.

May be I am wrong. Point me to journalist-authors who are right in both roles at the same time.

Here is the article that I had referred to.

To Anna or not to Anna

ஜூலை 2016.
‘அங்கிள் நீங்க அம்மாவோட ஸ்கூல்ல படிச்சீங்களாமே. உங்க கிட்ட பேசச் சொன்னா’ தளிர் தமிழில், நிறைய ஆங்கிலம், கொஞ்சம் தமிழ் என்று மத்தியக் கிழக்கு மாணவன் அழைத்தான்.
‘சொல்லுப்பா. SATல செம மார்க்காமே? கங்கிராட்ஸ்’
‘இல்ல மாமா. கொஞ்சம் கொறைஞ்சு போச்சு. 2340 / 2400. இந்த வருஷம் DASAல கிடைக்கறது கஷ்டம் தான்’
‘DASAல எந்த காலேஜ் கேக்கற?’
‘Top 2 NITsல மெக்கானிக்கல் வேணும்.’
‘JEEல நல்ல மார்க் தானே?’
‘ஆமாம்.NIT Bhopal கெடைச்சிருக்கு.ஆனா JEE( Advanced) கொஞ்சம் கொறைஞ்சுடுத்து.அதால நல்ல IIT கெடைக்காது.’
‘ஓஹோ.அப்ப SAT வெச்சுண்டு US போலாமே’
‘கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு.கேக்கறது கிடைக்காது.செலவும் கொஞ்ச்ம் அதிகம்.அதால இந்தியாதான்’
‘NRIகோட்டால அண்ணாயுனிவர்சிட்டி கிடைக்குமே.SAT நல்ல மார்க் இருக்கே?’
‘வாண்டாம் மாமா.அண்ணா வாண்டாம்.’
‘இல்லப்பா.நல்ல காலேஜ் தான்.உன்னோட ஸ்கோருக்கு மெக்கனிக்கல் கிடைக்கும்’
‘தெரியும்.But, வேண்டாம் மாமா.Not inclined towards any southern college’
‘But why?’
‘AID கிடைக்கும்னாஇப்பவேUS போயிடுவேன். Canadaல Toronto யூனில கெமிக்கல் கிடைக்கறது.ஆனாஎனக்கு IIT / Top NITல Mechanical வேணும்.அப்புறம் MSகு US போய்க்கறேன்.’
‘அது சரி.அண்ணாயூனி பத்தி என்ன?ஊருக்குப் பக்கத்துல இருக்கு.நல்லயூனி.UG முடிச்சுட்டுப் போலாமே..’
‘இல்லடா, he is not inclined towards TN. Doesn’t even want to go to NIT Trichy. Some aversion as he spent his childhood in north india and in the gulf,’ அவன் அம்மாபேசினாள்.
‘But Anna University is better than a remote NIT or a second grade IIT. Don’t you think so?’ பேசிப் பார்த்தேன்.
‘That you and I say.நாம படிச்ச காலத்துல அப்பிடி இருந்தது.ஆனா the university doesn’t even figure among his cohorts’ என்றாள்.
9ம் வகுப்பில் இருந்து JEEக்காகப் படித்து வருகிறவன் தான் கேட்ட IIT கிடைக்கவில்லையென்பதால் தலைசிறந்த NITல் சேர்ந்துவிட்டான் . அப்போது எனக்கு வருத்தம் தான்.
சமீபமாக,அந்தப் பையன் எடுத்த முடிவு சரியானதுதான் என்று தோன்றுகிறது.
பி.கு.:DASA – Direct Admission for Students Abroad – SAT என்னும் உலகளாவிய தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை.
CBSE மாணவர்கள் பெரும்பாலும் SAT, JEE என்று பலவற்றையும் எழுதுகிறார்கள்.சிலர் +1படிக்கும் போதேSAT எழுதி,+2 முடித்தவுடன் சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,அமெரிக்கா என்று செல்கிறார்கள். உலகின் சில பல்கலைகள் JEEயைஅங்கீகரிக்கின்றன. தமிழக மாணவர்கள் இத்தேர்வுகளையெல்லாம் எழுத வேண்டும்.நல்ல நிலையை அடைய வேண்டும். ஓம்.