சங்கப்பலகை அமர்வு 11 – நிகழ்வுகள்

சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 11வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. பேரா. ஞானம் கணபதி ‘சங்கத் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பிலும், திரு.கண்ணன் சேஷாத்ரி ‘கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்’ என்னும் தலைப்பிலும் பேருரையாற்றினர். நான் வரவேற்புரையும் நன்றியுரையும் அளித்தேன்.

விழா தொடர்பான காணொளிகள்

சங்கத்தமிழர் வாழ்வியல்

 

கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்

காட்சி ஊடகம் காணேல்

நண்பர்களே,

குப்பையில் விட்டெறிந்த எச்சில் சோற்றை யாரும் விரும்பி உண்பதில்ல. அதன் ருசியைப் பாராட்டுவதில்லை.

அச்சோற்றை வேண்டுமென விரும்பி, உண்டு, பின்னர் சோறு சரியில்லை, உடலில் உபாதை வருகிறது என்று புலம்புவதில்லை.

குப்பையில் இருந்து எடுத்து உண்ணும், உடலில் பல நோய்களைக் கொண்டிருக்கும் தெரு நாய்களை யாரும் அணுகி, அவற்றின் உணவைப் பங்கு போட்டுக் கொள்வதில்லை.

குப்பைத்தொட்டியில் உள்ள சோற்றை உண்ணும் தெரு நாய்களிடம் யாரும் போட்டிக்கு நிற்பதில்லை. விலகியே செல்வர்.

தொட்டியில் உள்ள சோற்றை உண்ணத் தங்களுக்குள் சண்டையிடும் உடல் முழுவதும் புண்கள் உள்ள நாய்களை மதித்து, அவை குரைப்பதைக் கேட்டு, அதன் பின் ‘நாய் குரைப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று யாரும் புலம்புவதில்லை. முடிந்தால் அதிலிருந்து விலகுவர்.

வீதி = தனியார் தொலைக்காட்சி
தொட்டி = விவாதத் தலைப்புகள்
நாய்கள் = மதம், சாதி, மொழி, நிற வெறி கொண்டு பேசுவோர்

தனியார் தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களின் அரசியல் வாழ்விற்கு நமது நேரத்தையும், பணத்தையும், மன நிம்மதியையும் நாமே விரும்பி விலையாகக் கொடுக்கலாமோ?

ஆக, நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

மத நல்லிணக்கம் அற்ற, அனைவரையும் ஒன்றிணைக்காத, மனித மனங்களை மேம்படுத்தாத பேச்சுக்கள், அவற்றைப் பேசுவோர், அவற்றை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்கள், அவற்றைத் தாங்கி வரும் ஏடுகள், இவற்றிற்கு ஆதரவளிக்கும் விளம்பரதாரர்கள் முதலியோரைப் புறக்கணிப்பது.

Boycott – பஹிஷ்கரிப்பு – இது காந்தியடிகள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஒவ்வாதனவற்றை விலக்குவது. அருகில் செல்லாதிருப்பது. ‘செய்யாதன செய்யோம்’ என்று ஆண்டாளும் சொல்கிறாள்.

இதைச் செய்யாமல், டிவி.விவாதம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, நெறியாளர் மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறார், விவாதம் செய்வோர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர் என்று வருத்தப்படுவது ஏனோ?

செய்ய வேண்டியவை:

  1. மத, சாதி, மொழி நல்லிணக்கம் இல்லாத தொலைக்காட்சி ஒளிவழிகளையும், எழுத்து ஊடகங்களையும் புறக்கணிப்பது.
  2. அவற்றுக்கான சந்தா செலுத்தாமல், பஹிஷ்கரிப்பது.
  3. அவற்றுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்காதிருப்பது.
  4. இவ்வாறு செய்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்வது.

சரி, பொழுது போக என்னதான் செய்வது?

  1. நூலகம் செல்லுங்கள்.
  2. நல்ல இசையைக் கேளுங்கள்.
  3. Podcast என்று ஒரு அபாரமான வழிமுறை உள்ளது. அறிஞர்களின் பேச்சுக்கள், ஆராய்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
  4. (முடிந்தால்) அரசின் காட்சி ஊடகத்தைப் பாருங்கள் / கேளுங்கள். தற்போது All India Radio செயலி வந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பு உள்ளது.

நம்மைக் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டில் தொலைக்காட்சி இல்லை என்கிறார். அவர் என்ன குறைந்து போனார்? என் நண்பன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன் வீட்டிலும் அப்படியே.குறையொன்றுமில்லை.

பி.கு.:

  1. தெரு நாய்கள் என்பது ஒரு குறியீடே. அவற்றை அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை.
  2. நான் தனியார் காட்சி ஊடகம் எதையும் பார்ப்பதில்லை.

Welcome to the Tamil Mind

The most unworthy seek the most attention. Worst part is, they get it.
People flock to such unworthy humanoids that are funded by hatred and avarice. Real worth gathers dust in the remote corners of the society.
This applies to literature as well. A brief look at the topics that are debated in literary societies prove this beyond doubt. Not considering the current political, economic and societal situations, the debates and celebrations talk about imaginary situations and those that are not even worth a mention. In this way, the literary committees are ‘staying clear’ of controversies, it seems.
The topics don’t encourage intellectual vigour, evidence based analysis or anything even remotely connected with basic human intelligence.Any normal intellect based discourse or debate is becoming extinct. Either it is for or against a topic.By all these, the literary societies are progressively marching towards intellectual oblivion and are becoming irrelevant, to say the least.
This degradation of intellectual discourse extends to normal conversations too. Either you are pro-Modi or anti. Either you support Nehru and are willing to build temples for him or you want to dump him in the drains of India. Either you a ‘Periyarist’ ( what ever that means) and hence have to oppose any progressive activity in the state or you are not and, by virtue of you not opposing a developmental activity, you automatically become a brahmin – the new-age Jew- and hence you automatically become despicable and sub-human instantly.
Once a topic trends, the visual media in the Tamil Land would gravitate towards two sets of intellectuals – movie actors and unknown fringe rabble-rousers. The issue could be anything – a rocket launch, mars mission robot, artificial intelligence’s impact on human employment, machine learning and deep learning. It could even be as simple as a depressed student’s attempt on his life or as complicated as the anti-money laundering case against the CEO of a large bank. It could be a movie star’s wardrobe malfunction or BASEL regulation. The topic doesn’t matter. The panelists on TV remains the same – movie producers, disgruntled and failed political activists and evangelists. The panel’s
ratio varies but the composition remains the same.
One cannot say ‘ India is a secular nation’ before being branded ‘Nehruvian Hypocrite’ or ‘India is a Hindu-majority nation’ (a truth though) before being branded ‘Hindutva hate monger’. There is no middle ground, no mixture, no acceptance of alternate ideas.
That India is a Hindu-majority nation is in itself a reason for secularism to exist till now. This fact cannot be told. If you want to state this fact, either do it during your morning ablutions in the bathroom.
If the talk is on ‘Sterlite’ and if you speak Tamil, you are expected to oppose it, and, as an add-on, express anti-Modi sentiment in the same breath. It doesn’t matter that Modi or even the party he belongs to, did nothing to bring the company to India and did nothing to ensure the company’s existence in the country. If the discussion is on ‘Sterlite’, the only way to not be abused is to say ‘No to Sterlite’. Same goes for any other project. If it is the Salem- Chennai highway, then it has to be ‘opposed’, for if you don’t do so, you would end up bullied or ridiculed when you are in a group. While ‘opposing’ an airport expansion in India, you ought to praise a new terminal recently commissioned in say, Dubai (
substitute with any country other than India).
You could own two cars in your family, go to hill stations on week-ends in the same car, but would have to sound ‘anti-Methane’ or ‘anti-ONGC’ at every given opportunity. For you are a Tamil and hence you can’t sound otherwise.
You could own several posh apartments in the OMR area of Chennai that was once a conglomerate of coconut, mango and casurina groves, but you would still speak and write, with fervor, to save agricultural lands from ‘corporate’ influence. It doesn’t matter that the OMR apartments live on water sourced from near by agricultural wells.
You would have migrated to the US of A and become a citizen after going through several tests, you could have put your children through SAT to make them enter the elite US universities, but, as a Tamil, you would still hold placards in support of ‘Say No To NEET’ (the medical entrance
exam in India).
You would be only too willing to flash your SSN to get your drivers’ license, your telephone connection, your apartment lease, your bank accounts in the US, but when such a number is mandated in India (AADHAAR), you tweet, ‘Say No to AADHAAR’. You could only be too willing to pay a differential pricing for homes bought in countries such as Singapore, without murmuring equality, but when there is even a semblance
of perceived and imagined inequality in India, you would start shouting from the roof-tops ‘Inequality’.
This eternal double standard is the new normal. Choose to be ridiculed and reviled, if you opt out of this game.
Welcome into the ‘Tamil Mind’.

ஓலாவில் ஒரு உழைப்பாளி

‘தம்பிக்கு எந்த ஊரு?’ ஓலா ஓட்டுனரைக் கேட்டேன்.
‘ஏன் கேக்கறீங்க?’ வியப்புடன் கார்த்தீசன்.
‘இல்லை, வீவிதி அளவு மெட்றாஸ் மாதிரி தெரியல, அதான்.’
‘சரிதாங்க. நான் மெட்றாஸ் வந்து ரெண்டு நாளாகுது. எனக்குத் திருத்துறைப் பூண்டி.’
‘அதான பார்த்தேன். ஊரு பிடிச்சிருக்கா?’
‘இல்ல சார். உண்மையா சொன்னா இல்ல. கடுப்பா வருது.’
‘ஏன் அப்டி சொல்றீங்க?’
‘என்னமோ தெரியல. இந்த ஊர் மட்டும் அப்டிதான் இருக்கு.’
‘அது சரி. வேற எங்க இருந்தீங்க?’
‘துபாய்ல. ஆனா அங்க டிரைவர் இல்ல. சூப்பரவைசர்.’
‘ஓ, இப்ப ஏன் ஓட்டறீங்க?’
‘வேலை முடிஞ்சு போச்சு. ஆபீஸ்ல பாலிடிக்ஸ் தாங்கல. முடிச்சுக்கிட்டு வந்துட்டேன்’
‘வேற வேலை செய்யலாமே?’
‘தெரியாதே. ஹெவி வெஹிகிள் லைசன்ஸ் இருக்கு. லாரி வரைக்கும் ஓட்டுவேன். இப்ப ஓலால ஓட்டறேன்’
‘…’
‘சார் ப்ராமினா?’
‘ஆமா. என்னா விஷயம்?’
‘இல்ல வீவிதி பத்தியெல்லாம் கேக்கறீங்களே. பேச்சும் காட்டுது’
‘வேற வேலை தெரியாதுன்னீங்களே, ஊர்ல என்ன வேலை செய்யறாங்க?’
‘நாங்க விஸ்வகர்மாங்க. சிலை செய்யறவங்க. ஆனா நான் கத்துக்கல. இப்ப பீல் பண்றேன்.’
‘ஏன் தம்பி கத்துக்கல?’
‘விதி சார். எவ்ளோ பெரிய கலை? ஒவ்வொரு கோவில்ல போகும் போதும் சிலை, கோவில் இதெல்லாம் பார்த்தா அழுகையா வரும். ஓரளவு தெரியும். ஆனா செய்யத் தெரியாது. பெரியவங்களோட போச்சு. இனிமே கத்துக்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா? நாங்களும் பூணூல் போடுவோம்.’
‘கேள்விப்பட்டிருக்கேன்.’
‘ஆமா சார். பாட்டி சொல்லும். நாமும் பாப்பாரவங்களும் ஒண்ணு. அவுங்க வேதம் படிப்பாங்க. நாம வேதம் வழி சிலை செய்வோம். தினமும் காலைல சிற்ப புஸ்தகத்தையும் தொழில் கருவி உளி இதெல்லாம் வெச்சு கும்புடுவோம். இப்ப எல்லாமே கனவாப் போச்சு..’
‘இப்ப கத்துக்கலாமே’
‘எங்க சார். வயத்துப் பொழைப்பே பெருசா இருக்கு.’
‘…’
‘நீங்க வேதமெல்லாம் சொல்லுவீங்களா?’ யாரோ தலையில் அடித்தது போல் உணர்ந்தேன்.
‘இல்லப்பா. அதுக்கு பாக்கியமில்ல. அதுக்கான படிப்பு படிக்கல.’ குற்ற உணர்ச்சியில் குறுகினேன்.
‘அப்டியா சார். என்ன செய்யறது? எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும் சார்.’
‘…’
‘பூணுல் எதுக்கு சார் போடறாங்க? தெரிஞ்சுக்க கேக்கறேன். தப்பா நெனச்சுக்காதீங்க.’
‘வண்டி ஓட்றதுக்கு முன்னாடி எதுக்கு லேர்னர்ஸ் லைசன்ஸ் எடுக்கறாங்க? அது மாதிரி தான் இதுவும். படிக்கறதுக்கு ஒரு ஆரம்பக் குறியீடு.’
‘ஓ ஆமாம். எங்கள்ள சில்ப சாஸ்த்ரம் படிக்கறதுக்கு முன்ன போடுவாங்க. ஆனா நான் படிக்கல்ல. நான் போடல. வருத்தம் தான் அதுல.. நீங்க சொல்லுங்க சார்..’
‘அது ஒரு அடையாளம் தம்பி. இனிமே நீ குருகுலவாசம் பண்ணனும், குரு சொல்றதக் கேட்டு படிக்கணும், பிரம்மச்சாரியா இருக்கணும், ஞானம் மட்டுமே வேணும்னு ஒரு தாகம் ..’ இப்படின்னு ஒரு குறியீடு’
‘புரியுது, மேல சொல்லுங்க..’
‘எல்லாத்துக்கும் மேல ஒழுக்கமா இருக்கணும். ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ வள்ளுவர் சொல்றாரு. வேதம் சொல்றத மறந்தாலும் பரவாயில்ல, ஆனா பார்ப்பான், பிராம்மணன் தன்னோட ஒழுக்கத்த விடக் கூடாது’ ங்கறார். அதுக்கு முன்ன ஒரு நாடு நல்லா ஆளப்படுதான்னு பார்க்கறதுக்கு பார்ப்பான் வேதம் ஓதறானா? அந்த ஊர் மாடுகள்கிட்ட பால் வளம் இருக்கா? இருந்தா அந்த அரசன் நல்லா ஆட்சி பண்றான்னு சொல்றார். ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்’ இதுவும் வள்ளுவர். வேதம் ஓதறது முக்கியம்னு சொல்றார். ஆனா அதே சமயம் ஓதாட்டாலும் மன்னிக்கலாம், ஆனா ஒழுக்கம் தவறினா சர்வ நாசம் அப்படிங்கறார்.’
‘உண்மைதான் சார். ஆனா ஒண்ணு. பார்ப்பான்னு சொல்றீங்களே. பரவாயில்லியா?’ அப்பாவியாய்க் கேட்டார் கார்த்தீசன்.
‘தம்பி, பார்ப்பாங்கறது நல்ல வார்த்தை. வள்ளுவரே பயன் படுத்தறார் பார்த்தீல்ல. ‘பார்ப்பு’ பறவை. ‘அனன்’ போன்றவன். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். முட்டைக்குள்ள ஒரு உயிர், முட்டைய உடைச்சுட்டு வந்தா இன்னொரு உயிர். ‘த்விஜன்’ அப்டீன்னு சம்ஸ்க்ருதத்துல சொல்வாங்க. இரு பிறப்பாளன் – இது தமிழ். பூணூல் போடறது முட்டை ஓட்டை உடைச்சுட்டு வர்றது. அஞ்ஞானம் உடைஞ்சு ஞானம் அடையறதுன்னு பொருள்’
‘இவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு இல்லியா சார்? நாம ஒண்ணுமே தெரியாம இருக்கோமேன்னு நினைச்சா வெறுப்பா இருக்கு சார்..’
‘அதிருக்கட்டும் தம்பி. மேல என்ன செய்யப் போறீங்க?’
‘நல்ல வேலை தேடிக்கிட்டு இருக்கேன் சார். ஹெவி வெஹிக்கிள் ஓட்டுவேன். சொந்தக்காரங்க சிங்கப்பூர்ல இருக்காங்க. ஆனா போயி கேக்க மனமில்லை. நானே சொந்தமா பெரியாளா ஆகணும் சார். உழைச்சு சாதிக்கணும் சார். துபாய்ல விட்ட பணத்த மீட்டணும்..’
உழைக்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ள இளைஞர்கள் இருக்கும் வரை நாட்டிற்கு எந்தக் கேடும் இல்லை. நாடு சுபிட்சமாகவே இருக்கும் என்னும் எண்ணம் தோன்றியது.
‘நல்லது தம்பி. உங்க நம்பர வெளியிடறேன். யாராவது வேலைக்கு எடுத்துக்கிட்டாங்கன்னா அவங்ககிட்ட சேர்ந்து வாழ்க்கைல முன்னுக்கு வாங்க’ என்றேன்.
‘ரொம்ப நன்றி சார்’ என்ற கார்த்தீசனின் கைப்பேசி எண்: +91-9197914-87783

பி.கு.: அவர் தற்போது ஊபரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

தமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம்

தமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம் அவசியம் என்பது குறித்து ‘ஒரே நாடு’ ஆசிரியர் திரு.நம்பி நாராயணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
வேலையில் உள்ள போது எங்கெல்லாமோ இருக்கவேண்டியுள்ளது. ஆனால், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவ்வண்ணமே இருக்க வேண்டிய தேவை என்னவென்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
சென்னை, மும்பை, முதலிய பெருநகரங்களில் புறாக்கூடு வாழ்க்கை ஓய்வு பெற்ற பின்னரும் தேவையா? வசதிகள், மருத்துவம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு 75 வயது வரையாவது பூர்வீகக் கிராமங்களில் வசிப்பது நமது முன்னோர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் அல்லவா?
60-70 களில் வேலை நிமித்தம் வெளியேறிய மக்கள் மீண்டும் குடியேற வேண்டும். கைங்கர்யங்கள் நிறைய உள்ளன. ஊரில் சனாதன, சம்பிரதாயக் கூட்டம் அதிகமாகும், நங்கைநல்லூர் போன்ற புதிய நகரங்களில் நடக்கும் நித்யப்படி உற்சவங்கள் பூர்வீகக் கிராமங்களில் நடக்க வேண்டும்.
இந்த மீள் குடியேற்றத்திற்குத் தமிழகத்தில் உள்ள சமூக அமைப்புகள் துணை நிற்க வேண்டும். தாம்பிராஸ், வன்னியர் சங்கங்கள், தேவர் அமைப்புக்கள், இன்னபிற சமூக அமைப்புகள் முனைந்து செயல்பட வேண்டும் என்று எழுதமுடியவில்லை. அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான அமைப்புகள் முனைந்து செயல்பட வேண்டும்.
கிராமங்கள் தற்போது முன்னேறியேயுள்ளன. மின்வசதி, செல்போன் வசதி, இணையம், வங்கி என்று பலதும் ஏற்பட்டுள்ளன. பிரயாண வசதிகளும் அப்படியே.என்ன இருந்தாலும் சென்னை,மும்பைபோன்ற வசதிகள் இரா.அதேசமயம் அவ்விடங்களில் உள்ள அவலங்களும் இரா. நெருக்கடி,  விபத்துக்கள், மரியாதை குறைந்த பேச்சுக்கள் முதலியன.
கிராமங்களில் சென்று செய்வதென்ன என்னும் கேள்வி எழலாம்.கிராமங்களில் சென்று வசிப்பது என்பதேநாம் செய்யும் பெரும் சேவைஎன்று சொல்வேன்.நகரங்களில் உள்ள வசதிகளைக் கிராமங்களில் ஏற்படுத்த சிலராவது முயல்வர்.அவ்வழியாகக் கிராமங்கள் முன்னேற்றம் அடையும். தற்போது ஏ.டி.எம். வசதிகள் கூட வந்துவிட்டன.அப்துல்கலாம்’ PURA – Providing Urban Amenities in Rural Areas’என்று கனவு கண்டார். ஓரளவு மெய்யாகி வருகிறது.
முன்னெல்லாம் தேரழுந்தூர் செல்லும் போது மெழுகுவத்திக் கட்டு வாங்கிச் செல்வதுண்டு.எப்போதாவது மின்சாரம் வரும் என்பதால்.தற்போது அதற்கான தேவையே இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, கிராமங்களில் உள்ள பாரம்பரியக் கோவில்கள்  பயனடையும். சிவன்களும்,பெருமாள்களும்,குலதெயவங்களும் மகிழ்ச்சியில் திளைப்பர்.
உதாரணம் சொல்கிறேன்:50களில் தேரழுந்தூர் உற்சவத்தில் கோவிலில் இருந்து சன்னிதித் தெரு வழியாகத் தேரடிக்கு எழுந்தருளப் பெருமாளுக்கு 2:30மணி நேரம் ஆகும்.தற்போது 8 நிமிடங்கள். இந்த திவ்யதேசத்தில் உற்சவங்கள் நடக்கின்றன.பலதில் பெருமாளுக்கு அன்னம் கூட இல்லை.
வில்லிவலம் என்றொரு கிராமம்.பரம வைதீகர்கள் வாழ்ந்த பூமி.என் தாயாரின் சொந்த ஊர்.அங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் என தாய்வழிப் பாட்டனார் தினமும் ஆராதனம் செய்தார்(தனது போஸ்ட் ஆபீஸ்,மணியம் வேலைக்கு இடையில்).பின்னரேஉணவு.தற்போது கோவிலில் தினமும் ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. விளக்கு மட்டும். கைங்கர்யத்துக்கு ஆள் இல்லை. ஆள் இல்லையென்பதும் உண்மை, மனதில்லை என்பதும் அப்படியே.
நாவல்பாக்கம் முதலான ஊர்களில் இருந்து ‘இது வில்லிவலம் பெருமாளுக்கு’, ‘இது இன்ன பெருமாளுக்கு’ என்று டப்பாவில் சாதம் கொண்டு வந்து கண்டருளப் பண்ணிய காலமும் உண்டு. இப்போது மாலை வேளையில் ஒரே ஒரு விளக்கு. ‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்பது போக, ஆதிகேசவன் ஒருவேளை சோற்றுக்காகக் காத்திருக்கிறார்.  
இந்த மீள் குடியேற்றம் காலத்தின் கட்டாயம். கிராமமே நமது ஆன்மீகத்தின் வேர். ‘நான் 106திவ்யதேசம் சேவிச்சுட்டேன்’ என்பது பெருமை தான். ஆனால் அதைச் சென்னை, மும்பையில் அமர்ந்து கொண்டு சொல்வது நிச்சயம் பெருமையன்று. ‘திவ்ய தேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு வாழ வேண்டும்’ என்பது எம்பெருமானாரின் கட்டளை.
மீள் குடியேற்றம் குறித்துப் பண்பாட்டு அமைப்புகள் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
‘இதற்காக நீ என்ன செய்தாய்?’ என்று கேட்கலாம்.  என்னால் பலதையும் பொதுவெளியில் சொல்ல முடியவில்லை. அனைவருமாக என்ன செய்யலாம் என்று வார இறுதியில் பேஸ்புக் கான்பரன்ஸ் பண்ணலாம்-உங்களுக்கு விருப்பம் இருந்தால். (www.facebook.com/amaruvidevanathan)

ஓலாவில் ஒளிரும் ஞானம்

‘என்ன தம்பி, ஊரா, வெளியூரா?’ தாடி வைத்த ஓட்டுனரின் இறுக்கமான முகத்தைத் தளர்த்த Ice-Breaker.
‘வெளியூர்.’
‘எந்தப் பக்கம்?’
‘சிதம்பரம்’
‘அட, நம்ம பக்கம் தான். எனக்கு தேரழுந்தூர், மாயவரம் பக்கம்.’ அவர் முகத்தில் லேசான புன்முறுவல்.
‘வந்து எவ்ளோ நாளாச்சு?’
‘நாளீல்லீங்க. வருசம் 10 ஆச்சுது’
‘அப்ப சரி. நீங்க மெட்ராஸ் காரர் தான்.’
‘இல்ல சார். என்ன இருந்தாலும் சிதம்பரம் மாரி வராது..’ இது அமல்ராஜ்.
‘அது சரி. சொந்த ஊர் எப்பவுமே அப்படித்தான்.’
‘அதில்லீங்க. வந்து 10 வருஷம் ஆச்சு. ஆனா, எதுக்கு ஓடறேன், ஏன் ஓடறேன்னே தெரியல்ல. ஊர் என்ன சேர்த்துக்க மாட்டேங்குது. அன்னியமாவே இருக்கு சார்.’
‘அப்டியா சொல்றீங்க?’
‘அட ஆமாங்க. காலைல ஏழு மணிக்கு ஓட்ட ஆரம்பிச்சா, சோறு தண்ணி நேரத்துல கிடையாது. நேரங்கெடைச்சா சாப்பாடு, இல்லாட்டி டூட்டி கிடைக்காத போது சாப்டுக்குவேன். ஒரு வகைல நானும் இந்தக் காரும் ஒண்ணுதான். காருக்கும் எங்க போறோம்னு தெரியாது, ஏன் போறோம்னு தெரியாது. எனக்கும் அப்டித்தான்.’ அடுத்த வேதாந்த பாடம் துவங்கியது போன்று உணர்ந்தேன். அவரைப் பேச விட்டு அமைதியானேன்.
‘ஊர்லேர்ந்து பிரண்டு பேசினான். ஒரு பத்து மணி இருக்கும். ‘என்னாடா சாப்டியான்னான்?’ ‘இல்ல’ன்னேன். ‘காலைல என்ன சாப்டே’ன்னான்.’இனிமேதான் சாப்டணும்’னேன்.’டேய் பாவி, இப்டியே போனா செத்துடுவ டா. வேளைக்குத் தின்னமுடியாமா அப்டி என்னடா வண்டி ஓட்றது?’ன்னான். ரொம்ப பயமாயிடுச்சு.’ என்றார்.
‘பிரண்ட் என்ன பண்றார்?’
‘பெருசா ஒண்ணும் இல்லை. காலைல ஆறு மணிக்கு எந்திரிக்கறான். எட்டு மணி வரைக்கும் வயலுக்குப் போயி மாடு கன்னு மேயவுட்டு, வயலப் பார்த்துட்டு பத்து மணிக்கி கார்ப்பெண்டர் கடை வெச்சிருக்கான்ல, அங்க போயிருவான். மதியம் ஒரு மணிக்கு வீடு. சாப்பாடு, ஒரு மணி நேரம் தூக்கம். மறுபடியும் மரவேலை, அஞ்சு மணிக்கு வயல், ஏழு மணிக்கு டீக்கடைல ஊர் பிரண்ட்ஸ்ஸொட அரட்டை, எட்டு மணிக்கு வீடு, பத்து மணிக்கு தூக்கம். வாழ்க்கைன்னா இது தான் சார் வாழ்க்கை’
‘அப்ப ஊருக்குப் போகலாம்ல?’
‘அது இப்ப முடியாது சார். ஊருக்குப் போனா வேலை ஒண்ணும் தெரியாது. விவசாயம் செய்யத் தெரியாது. அங்கயும் வண்டி ஓட்டணும்னா பிரயோஜனமில்லை. அப்பாரு ஐ.டி.ஐ. படிடான்னு சொன்னாரு. நான் ஊர் சுத்தினேன். இப்ப கைவேலை ஒண்ணும் தெரியல்ல. வண்டி ஓட்றது மட்டும் தான் வழி.’
‘எத்தனை நாள் வண்டி ஓட்டுவீங்க?’ சுயத் தாழ்ச்சிப்பேச்சைக் குறைக்க நடுவில் ஊடுறுவினேன்.ராஜாஜியின்தொழிற்கல்வியைப் புறக்கணித்த தமிழ்ச் சமூகத்தின் மீதிருந்த வருத்தம்அதிகமானது.
‘முப்பத்தஞ்சு வயசாச்சு. அம்பது வயசு வரைக்கும் வண்டி ஓட்டணும். அதுக்குள்ள புள்ளைங்கள்ளாம் படிச்சுடும். அம்பது வயசுல சேர்ந்தது போதும்னு ஊருக்குப் போயி ஒக்காந்துடணும். இதான் என் பிளான்,’ என்ற அமல்ராஜின் கண்களில் தீவிரம் தெரிந்தது.
‘இப்ப ஏதாவது சேர்த்திருக்கீங்களா?’
‘ஒண்ணும் இல்லை சார். நிறைய சம்பாரிக்கறேன். ஓலா புண்ணியத்தில நிறைய காசு வருது. ஆனா ஒண்ணும் நிக்க மாட்டுது. இந்த ஊரு எல்லாத்தையும் புடுங்கிக்குது,’ என்ற அமல்ராஜ் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
‘ஊர்ல இவ்வளவு சம்பாரிச்சேன்னு வெச்சுக்குங்க, நான் தான் ராஜா. ‘
எல்லாத் தொழில்களுமே அப்படித்தான் என்ற ஞானம் உள்ளிறங்குவதை உணர்ந்தேன். ஊரும் நாடும் வேறுபடலாம், ஆனால் அடிப்படை உண்மைகள் வேறுபடுவதில்லை என்று அசரீரி ஒலிக்கக் கேட்டேன்.
‘முன்னாடியெல்லாம் ரொம்ப கோவம் வரும் சார். போட்டு ஒடச்சுடுவேன். இப்ப, கார் ஓட்டறதுல ரொம்ப பொறுமை வந்திருச்சு. முப்பத்தஞ்சு வயசுல வாழ்க்கையே கண்ணு முன்னால தெரியற மாதிரி இருக்கு. சட்டுனு உள்ள பூர்ற டூ வீலர் காரனப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. முன்னெல்லாம் அவன் சட்டையப் புடிப்பேன். இப்பலாம் ‘போயிட்டுப் போறான், அவனுக்கு என்ன அவசரமோ’ன்னு தோணுது. ‘இங்க மெட்றாஸ்லதான் எல்லாரும் ஓடணும். ஊரு தான் அவன் உள்ள பூந்து ஓட்றதுக்குக் காரணம். அவன் என்ன செய்வான்’னு நினைச்சு மன்னிச்சு விட்டுடறேன்.’
நான் மவுன விரதம் அனுஷ்டித்தேன்.
‘எனக்கு அம்பது வயசுக்குள்ள ஊருக்குப் போகணும். அந்தப் பையனுக்கு இன்னும் முன்னாடியே ஊருக்குப் போகணுமோ என்னவோ. போயிட்டுப் போறான். அதோ டூ-வீலர்ல ஒட்டிக்கிட்டுப் போவுதே ஒரு பொண்ணு, அது வாழ்க்கை பெசகாம நல்லா வரணுமேன்னு தோணுதுங்க. வண்டி ஓட்ற தா*ளி அவளைக் கல்யாணம் பண்ணி நல்லா வெச்சுக்கணும்னு மனசு ஏங்குது. எனக்குப் பொட்டப்புள்ள இருக்கில்ல?’ என்ற அமல்ராஜ் பொறுப்பான, சமூக அக்கறையுள்ள தந்தையாக  நின்றார்.
 
இறங்குமிடம் வரவே, ‘தம்பி, எல்லாம் நல்லா நடக்கும். உடம்பப் பார்த்துக்குங்க. உங்கள நம்பி பிள்ளைங்க இருக்காங்க. வேளைக்குச் சாப்பிடுங்க. சீக்கிரம் சிதம்பரம் போயி சந்தோஷமா இருங்க,’ என்றவனை வித்தியாசமாகப் பார்த்தார் அமல்ராஜ்.
கனவு மெய்ப்பட வேண்டும்.
ஓலா என்னும் ஞான ரதம், அதில் உலா வருகையில் கிடைப்பது ஞான தரிசனம்.