உருவாய் அருவாய்

*திருமதி.சுபா செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜைக்கு சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றார். 15 பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.
ஒரு தம்பதி பூஜைக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்று எண்ணிவிட்டுக் கோவிலின் நிர்வாகியான மூத்த பெண்மணியிடம் ‘எல்லாரையும் கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க, நான் இதோ வரேன்’ என்று சொல்லிச் சென்றார்.பூஜை முடிந்து பெண்கள் அமர்ந்திருந்தனர்.
‘ரொம்ப நேரம் ஆயிட்டா, ஆமாவா?’ என்றபடியே வெளியில் சென்ற தம்பதிகள் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் வந்தனர். கையில் பெரிய பை.
‘பூஜைக்கு வந்தவங்கள்ளாம் வரிசையா வாங்க,’ என்று அழைத்து, வந்திருந்த ஒவ்வொரு சுமங்கலிக்கும் ஒரு புடவை, வெற்றிலை, பாக்கு, பூ என்று வைத்துக் கொடுத்துள்ளார். 15 பெண்களுக்கும் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி.
கொடுத்து முடித்தவுடன் அந்தப் பெண், மூத்தபெண் நிர்வாகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார். ‘நல்லா இருப்பீங்க,’ என்றவாறே அவரது நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து ஆசீவத்தித்த அந்த மூத்த நிர்வாகி,’ ஏதாவது நேர்த்திக் கடனா? உங்க பேர் என்ன?’ என்று கேட்க, காலில் விழுந்த பெண், ‘அம்மன் கிட்ட ஒரு வேண்டுதல். ஒண்ணொண்ணா நிறைவேறிக்கிட்டே வருது. அதான் நேர்த்திய செலுத்தலாம்னு வந்தோம்,’ என்றார். கண்கள் பனிக்க.
‘அம்மன் கடாட்சம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு. உங்க பேரென்னம்மா?’ இது மூத்த நிர்வாகி.
‘பாத்திமா அஹமது’
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
மதம் வேறுபடுத்துகிறது. பண்பாடு இணைக்கிறது. பண்பாடு மதங்களைக் கடந்தது. சிங்கப்பூர் அதை நமக்கு உணர்த்துகிறது.
*பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் எங்கள் பகுதியில் வசிக்கும் இந்தியர்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

5 thoughts on “உருவாய் அருவாய்”

  1. கற்பனைக்கு மட்டுமே சாத்தியமான ஒரு நிகழ்வு! நேரில் கண்டு எழுதுகிறீர்கள். அருமை ஆமருவி!

    Like

  2. சிங்கப்பூர் நல்ல இடம் போல் உள்ளது.
    உருவாய் அருவாய்……மிகச்சரியாய் பொருந்துகிறது.

    Like

  3. ஒரு முஸ்லிம் பெண்மணி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி ஆசி பெற்றது உங்களுக்கு இனிக்கிறது. பண்பாடு, அது, இது என்று அந்த வேற்று மதத்தவரின் செயலை மனமாரப் பாராட்டுகிறீர்கள். நல்லது.

    ஆனால், அதேபோல் நம் கர்னாடக சங்கீத வித்வான்களில் சிலர் வேற்று மத கடவுளர்களைக் குறித்துப் பாடியிருப்பதைப் பற்றி [நான் அவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்] வேறொரு பதிவில் தூற்றியிருக்கிறிர்கள். என்னே உங்கள் பண்பாடு! புல்லரிக்கச் செய்கிறது.

    தொடரட்டும் உங்கள் ஆன்மீகப்பணி.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: