சிறையில் இருக்கும் கவிராஜசிம்ஹம்

கவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா?’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)

ஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  • அவதாரம்: பொ.யு. 1268
  • திருநாடு: பொ.யு. 1369
  • பிறந்த ஊர்: தூப்புல் ( காஞ்சிபுரம்)
  • சென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்
  • தெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்
  • எழுதிய நூல்கள் : சுமார் 125.
  • பட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி
  • சாதனைகள்:
    • மாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது
    • பன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது
    • சுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது
    • 125 நூல்கள் எழுதியது
    • ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது
    • உஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது
    • பரகால மடம் ஸ்தாபித்தது

இன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம்.  தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார்.  நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை? தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

தனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.

வேதாந்த தேசிகன்
வேதாந்த தேசிகன்

தேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி கேட்ட ஏழை பிரும்மச்சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.

‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா?’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).

மந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.

திருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.

மாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.

துருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:

கலிப்ரணிதிலக்ஷணைகலிதஶாக்யலோகாயதை:
துருஷ்கயவநாதிபிஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |
ப்ரக்ருஷ்டநிஜஶக்திபிப்ரஸபமாயுதைபஞ்சபி:
க்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||

அந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :

स्वस्ति श्रीः बन्धुप्रिये शकाव्दे (शकाव्द १२९३)
i. आनीयानीलश्रृङ्गद्युतिरचितजगद्रञ्जनादब्जनाद्ने .
चेञ्चयामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुप्कान् तुलुष्कान् ।
लक्ष्मीक्ष्माभ्यमुभाभ्यां सह निजनगरे स्थापयन् रङ्गनाथं

सम्यग्वर्या सपर्या पुनरकृत यशोद

र्पणो गोप्पणार्यः ||
विश्वेशं रङ्गराजं वृषभगिरितटात् गोप्पणक्षोणिदेवो
नीत्वा स्वां राजधानी निजबलनिहतोत्सिक्तौलुष्कसैन्यः ।
कृत्वा श्रीरङ्गभूमिं कृतयुगसहितां तं च लक्ष्मीमहीभ्यां
संस्थाप्यास्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्या सपर्याम् ||

‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

தான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது சன்னிதியை விட்டு வெளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.

காரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.

அற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.

தேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.

1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.

அவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

பி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.

இணைப்பில் இருக்க : https://facebook.com/aapages

10 thoughts on “சிறையில் இருக்கும் கவிராஜசிம்ஹம்

  1. நம் தூப்புல் ஸ்வாமி ஶ்ரீ வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றாண்டு இரும்… ஸ்வாமி தேசிகனைப் பற்றி அருமையான பதிவு… நன்றி ஆமருவி தேவநாதன் ஸ்வாமி… HAPPY SWAMI DESIKAN THIRUNAKSHATRAM SIR

    Like

  2. Timely tributes to Sri Vedantha Guru were eloquently elucidated by you. It was Swamy Desikan who bridged the gap between intellectual pursuits and spiritual pursuits at a converging point to attain PARAMAATHMA SAAKSHAATKAARAM. That was lucidly confirmed by Dr Francis Clooney, School of Theology, Harvard University. I was fortunate enough to have had an interaction with him last month through Sri T K Parthasarathy. Dr Clooney has a portrait of Sri Desikan on his table Desika-consciousness in him is something we Sri Vaishnavites take pride in. He adores Vedantha Aachchaaryan every day and for ever.

    Like

    1. திரு.க்ளூனி மற்றும் ஶ்ரீ.உ.வே பார்த்தசாரதி ஸ்வாமி இருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

      Like

  3. பிச்சை எடுத்து வாழ்வது ஒரு பெருமையா? உஞ்சவ்ருத்தி செய்து ஜீவனம் செய்தது ஒரு சாதனையா? இப்படி ஒருவர் வாழ்வார், அதையும் பெருமை அடித்துக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துதான் வள்ளுவர், ‘நல்லாறெனினும் கொளல் தீதே’ என்று சம்மட்டியால் அடித்தது போல் எழுதி வைத்தார் போலும்! நுண்மாண் நுழைபுலம் மிக்க பரிமேலழகர் இந்த இடத்தில் உரை எழுதத் திணறுகிறார். வீட்டுலகம் செல்லும் உபாயம் என்று யாரேனும் சொன்னாலும், இரந்து வாழாதே என்று வள்ளுவர் கூறியதை இங்கு நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை.

    ராமானுஜர், தேசிகர் போன்றவர்களுக்கு, ஸ்ரீமந்நாராயணன் என்ற ஒரு obsession. தங்கள் கொள்கைக்கு மாறுபடும் மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தும் ஒரு vanity. சததூஷணி, பரமதபங்கம், சங்கல்ப ஸூர்யோதயம் போன்ற நூல்களில் நம்மோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அத்வைதிகளையும், சைவர்களையும், பௌத்தர்களையும் எப்படியெல்லாம் இழிவாகப் பேசுகிறார் தேசிகர்? சைவர்களின் தலையைத் தன் இடதுகாலால் மிதித்து அழுத்தவேண்டும் என்று ஆவேசப்படுகிறார். பரமசிவனை, மந்தமதி படைத்தவன் என்று ஏளனம் செய்கிறார்.

    பரமதபங்கம் என்ற சொல்லே தவறல்லவா? ஏதோ இவர் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை எதிர்த்து எழுதியுள்ளார், நம் மதத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பார் என்றெல்லாம் எண்ணி, இவற்றைபடித்தேன். கடைசியில் இந்த வீராதி வீரர், நம் சகோதரர்களையே கேவலப்படுத்தி இருக்கிறார். அதென்ன ‘பங்கம்’? இன்னொருவரின் கொள்கையை அவமானப்படுத்துவதற்கு தேசிகருக்கு என்ன உரிமை?

    Like

    1. Apologies for replying in English as I am not fluent in writing Tamil ! I can read but writing is difficult !!

      To understand the nuances, subtleties and complexities of Sanaathana Dharma (Eternal Religion), which we now call as Hinduism, one needs maturity, patience, good grasp & understanding of Scriptures or their translations. It requires one to unlearn wrong information & history that is taught in Schools, Colleges, Media and also through some books.

      One has to fathom the length of time in our system.

      1 Kali Yuga = 4,32,000 human years approximately
      Dwapara = twice that of Kali
      Treta = thrice that of Kali
      Satya / Krita = four times that of Kali

      1 Chatur Yuga = 6.8 Million human years
      1000 Chatur Yuga = 1 Kalpa = 6.8 Billion human years

      1 Kalpa = 1 morning of Brahma deva
      Another one Kalpa equals night of Brahma deva

      When 100 years of Brahma deva is over, Maha Pralayam comes and the next Brahma takes over. There are many Pralayas (destruction) that happen with in a Kalpa.

      Creation, Protection and Destruction of the Leela Vibuthi (all the 3 / 7 / 14 Worlds) keeps happening in a cyclic basis. As Swami Vivekananda said, the Creator and Creation are like 2 parallel lines. They are there forever !

      So many paths to realize the Supreme Brahman (param porul) have come and will be coming. Many Acharyas and Maha Purushas (including women) have come to teach humans so that they can Evolve and get liberated from the Bhava Saagara (samsaaram), which is very difficult for any Atman to transcend on its own.

      3 main Siddhanthas (perspectives) or Darshanas (lens) stand out amongst the paths – Dvaita, Advaita and Vishista-Advaita !

      Bhagavad Ramanujar laid the bridge connecting Madhwa’s Dvaita and Adi Shankara’s Advaita philosophies. Hence Vishista-Advaita is also called as Ghataka (connecting bridge) Sruthi !!

      Every Siddhantha is like a “step” taking the Atman near to God. We say that Vishista-Advaita is the most evolved & complete one. But one is free to choose any Siddhantha of his / her choice, there is no compulsion. That is why we are so “diverse” in everything we do in our culture. There is so much liberty and freedom to choose one’s own path or any path of one’s liking.

      Many paths like Jainism, Buddhism etc emanated from Sanaathana Dharma but they were NOT Vedic religions. You should also know the atrocities committed by the followers and leaders of these religions and how they threatened the very fabric of this great Bhaaratha Varsha. Acharyas from all the 3 main Siddhanthas debated intellectually, defeated them and brought the people to Vedic fold.

      As you mentioned, Sriman Narayanan was NOT an obsession for Sri Vaishnava Acharyas and Azhwars, but the very REALITY (param porul) itself !

      They debated at the intellectual level and pointed out the differences / anamolies in other Siddhanthas, which were against Vedas and Upanishads. They were vehement & critical against only those people who were arrogant, stubborn and obstinate, who were ready to go to any length to convert people who opposed their philosophies and views. We all know what Krimikanda Chozhan did to Sri Ramanujar & his disciples. He eventually had to leave Srirangam & settled in Melkote for 12 years.

      For your information, Desikar had a very good Dvaita friend called Vidyaranyar during his times.

      I am not here to argue or debate about the supremacy of Sriman Narayan over other Devathas or the completeness of Vishista-Advaita against other philosophies & paths.

      I recommend Mr. Ravi Kumar to familiarize with the concepts of these philosophies before making adverse comments on Bhagavad Ramanujar or Desikar or any Vishista-Advaita Acharya.

      Like

  4. ஸ்ரீ ரவிக்குமார் இங்கே விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருளுக்கும் ‘length of time’ – க்கும் என்ன தொடர்பு? சநாதன தர்மம், விவேகானந்தர், இதெல்லாம் எதற்கு? இங்கே விவாதப்பொருள் ‘வேதாந்த தேசிகர் போன்றவர்கள் சித்தாந்தம் என்ற பெயரில் சக இந்துக்களை இழிவுபடுத்துவது சரியா?’.

    ‘கலியுகம் 4,32,000 வருடங்கள்’ – அதென்ன கஞ்சத்தனம்? 4,32,00,000 வருடங்கள் என்று கூட சொல்லிக்கொள்ளலாமே! வேதாந்த தேசிகர், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், 21-வது கதிவிசேஷாதிகாரத்தில், 500 அழகிய அப்ஸரஸ்கள் ப்ரபன்னனுடைய திவ்ய சரீரத்திற்கு மாலை, மை, வாசனைப்பொடி, ஆடை மற்றும் ஆபரணம் அணிவித்து அழைத்துச் செல்வர் என்று எழுதியிருக்கிறார். 44-வது பட்டம் அழகியசிங்கர் வேடிக்கையாகக் கேட்பார்: ‘தேசிகனுக்கு என்ன கஞ்சத்தனம் பாருங்கள், 50,000 அப்ஸரஸ்கள் என்று எழுதவேன்டியதுதானே’ என்று. நம்மாழ்வார் சாதாரணமாக ‘மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே’ என்று எழுதியதை, தேசிகர் 500 ஆக்கிவிட்டார். நம் நண்பர் 5000 என்று ஆக்கி, என்னே சநாதன தர்மம் என்று பூரிப்படையாலாம்.

    இங்கு எழுதுபவர்கள் யாரும் சததூஷணி, பரமதபங்கம், சங்கல்ப சூர்யோதயம், தத்வமுக்தகலாபம் முதலான தேசிகரின் க்ரந்தங்களை கண்ணால் கூடக் கண்டதில்லைபோலும். பரமசிவனுக்கு ஏன் மந்தபுத்தி என்பதற்கு தேசிகர் கூறும் காரணத்தைப் படித்தால், அப்படியே புல்லரித்துவிடும். ஸ்ரீமந்நாராயணனே ப்ரும்மம் (ஆதாவது, பரம்பொருள் அல்லது பரமாத்மா) என்று ஒப்புக்கொள்ளாதவனுடைய பிறப்பு சந்தேகத்துக்குரியது, அவனுடைய தாயார் ருது காலத்தில்…………… என்று ஸ்ரீ ராமாநுஜர் எழுதியிருப்பது அருவருப்பின் உச்சம். இதையெல்லாம் ‘obsession, vanity’ என்று எழுதுவதில் என்ன தவறு?

    ‘I can read (tamil)’ என்பதே ஒருவருக்குப் பெருமையாக இருக்கிறது. இதில், மற்றவர்களுக்கு என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? தமிழ் நன்கு கற்று, பல வருடங்கள் ஸம்ஸ்க்ருதமும் கற்று ஸ்ரீ பாஷ்யம் முதலான க்ரந்தங்களை காலக்ஷேபம் மூலம் கற்று, பின் ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற நிலையை அடைந்தவர்களை அணுகி, மேற்சொன்னவைகள் உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ளவும்.

    சாலை, தெரு முனைகளில் நின்றுகொண்டு, ‘பாவிகளே, ஏசுவை சரணடையவில்லை என்றால் நரகத்திற்குத்தான் செல்வீர்கள்’ என்று கூப்பாடு போட்டு, இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி, நம் கையில் அச்சடித்த காகிதத்தைத் திணிக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ராமாநுஜர், தேசிகர் போன்றவர்களுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. முன்னவர்கள் பிற மதத்தவர் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்; பின்னவர்கள் தம் மதத்தவர்களையே தகாத சொற்களால் ஏளனம் செய்கிறார்கள்.

    கூரத்தாழ்வானின் கண்களைப் பறித்தவன் பௌத்த மதத்தவனா அல்லது சமணனா? ஒரு சைவன்தானே. இந்து மதத்தவன்தானே! சமீபத்தில் பூணூலை அறுத்தவன் க்றிஸ்துவனா அல்லது முஸ்லிமா? ஒரு இந்துதானே? அதுதான் நாம் பீற்றிக்கொள்ளும் சநாதன தர்மம்.

    பௌத்தர்களுக்கு இந்துக்கள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா? நாகப்பட்டினத்திலிருந்த புத்தரின் பொற்சிலையைக் வஞ்சகமாகக் களவாடி, சுக்கு நூறாக்கி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கைங்கர்யம் செய்த திருமங்கை ஆழ்வாரை என்ன சொல்வது? அதுவும் எப்போது செய்தார்? ‘நாராயணா எனும் நாமம்’ கண்டுகொண்ட பின்னரே! என்னே நாரயண நாமத்தின் மகிமை? குருபரம்பராப்ரபாவம் எடுத்துப் படித்துப் பருங்கள். இவையெல்லாம் தெரிந்தால், திராவிட கழகத்தினர் “ஆழ்வானின் அயோக்யத்தனம்” என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்துவார்கள்.

    த்வைத சித்தாந்தத்தைச் சார்ந்தவரின் தேசிக ஸ்னேஹத்தைப்பற்றி எழுதியிருக்கிறார், யாருக்குமே தெரியாதது போல. அவருடைய வேண்டுகோளின்படித்தான், சததூஷணியில், த்வைதத்தைத் தூஷிக்கும் 34 தூஷணைகளை தேசிகனே நீக்கி விட்டார்.

    அத்வைத்ததுக்கும் விஸிஷ்டாத்வைதத்துக்கும்தான் குத்து வெட்டு சண்டை. த்வைதத்தோடு ஒரு சிறு பிணக்குதான். இவையெல்லாம் இங்கு எழுதினால் பெருகும்.

    எழுப்பிய வினாவுக்கு நேரான பதில் எழுதத் தெரியாமல், விவேகானந்தர், சநாதன தர்மம், பரமாத்மா என்றெல்லாம் எழுவது நேர்மை இல்லை.

    Like

  5. நன்றி, திரு ஸ்ரீநிவாசன். நேர்மையாக சிந்திப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று அறியும்போது மனம் அமைதி அடைகிறது.

    Like

Leave a comment