வெற்றிகரமாக மூன்றாவது முறையாக என்னை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளனர்.
முதல் முறை ‘உ.வே.சா’வின் ‘என் சரித்திரம்’ நூலை அணுஅணுவாக வாசித்து, அனேகமாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் பற்றிய சிறு குறிப்புகளை எழுதி வந்தேன். நிகழ்காலத் தமிழ்ச் சூழல், தமிழில் இருந்து ஆன்மீக உணர்வை வெற்றிகரமாக நீக்கி, தமிழை மலடாக்கி வைத்துள்ள கல்விப்புலம் என்று பலதையும் ஆதாரங்களுடன் சிறு குறிப்புகளாக எழுதி வந்தேன். ரூ 200 பெற்றுக்கொண்டு பணியாற்றும் திராவிட போலிப் பகுத்தறிவுக் கூலியாட்கள் மூலம் தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த சமூக ஊடகப் பிரிவு அதிகமான புகார்களை அனுப்பி, என் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பக்கத்தை முடக்க வைத்தது. சில கேள்விகளுக்குப் பின் தடை நீக்கம் பெற்றேன்.
இந்த நேரத்தில் ‘ஆசிரியர் பக்கம்’ (Author Page) ஒன்றை நிறுவியிருந்தேன் (ஆமருவிப்பக்கங்கள் என்பது பெயர்). எதற்கும் இருக்கட்டும் என்று இன்னொரு ப்ரொஃபைல் பக்கத்தை நிறுவி அதனை அந்த ஆசிரியர் பக்கத்திற்கு அட்மின் பொறுப்பு கொடுத்திருந்தேன். என் கட்டுரைகள் அனைத்தையும் அந்த ஆசிரியர் பக்கத்திலேயே எழுதியும் வந்தேன். என் நூலான ‘நெய்வேலிக் கதைகள்’ அத்தளத்திலேயே வெளியானது.
தொடர்ந்து என் ஆசிரியர் பக்கத்தில் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. நேற்று அந்தக் தளத்தையும் முடக்கியுள்ளனர். சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளின் தமிழ் வடிவத்தைப் பகிர்ந்திருந்தேன் என்று நினைவு.
ஒரு 200 ரூபாய் செய்யும் வேலை என்று தெரிகிறது. இந்த முடக்கம்-நீக்கம்-முடக்கம் விளையாட்டு வேண்டாம் என்று முடிவெடுத்து முடக்கத்தில் இருந்து வெளிவர விருப்பம் இல்லை என்னும் எண்ணத்துடன் அத்தளத்தில் இருந்து விலகிவிட்டேன்.

சிறந்த அரசியல் ஊடகவியலாளரான மாரிதாஸ் எழுதிய ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தேன். அந்த மொழிபெயர்ப்புப் பகுதியின் சுட்டியை என் பேஸ்புக் ப்ரொஃபைல் பக்கத்தில் வெளியிடிருந்தேன். திடீரென்று அந்தப் பதிவு பற்றிப் புகார்கள் வந்தன என்பதால் ப்ரொஃபைல் முடங்கியது. விளக்கம் கேட்டனர். கொடுத்தேன். முடக்கம் நீக்கினர். பின்னர் நானே அந்தப் ப்ரொஃபைல் பக்கத்தை முடக்கிவிட்டேன். ( ஒருவாறு விலக முடிவெடுத்துவிட்டேன்).
கருத்துரிமை, ஊடக உரிமை என்று வாய் கிழியும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதலிய எந்தப் புறம்போக்குகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்பதை அறிவேன்.
வாசகர்கள் என் ட்விட்டர் தளமான https://twitter.com/amaruvi ல் இணைந்து தொடர்ந்து வாசிக்கலாம்.
ஆமருவி பக்கங்கள் தொடரை தொடருங்கள் சார். அதனை முடக்க வேண்டாம். ஆனாலும் டிவிட்டரை அவ்வாறு யாரும் அப்படி எளிதாக முடக்குவதில்லை.
LikeLike