விஜயதசமி நன்னாளில் சக்ரவியூகம் என்னும் ஒளிவழி துவக்கம் காண்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறிய உரை இடம்பெறும். கலை, இலக்கியம், இசை, சிற்பம், கல்வி, சட்டம் என்று பல தலைப்புகளில் பேச உள்ளனர்.
ஒவ்வொரு வெள்ளி அன்றும் ‘நூல் வாசிப்பு’ என்னும் தலைப்பில் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட நூல்கள் / அதிகம் அறியப்படாத நூல்கள் வழியாக நம்மை நாமே அறிந்துகொள்ளுதல் என்னும் கருப்பொருளில் பேசுகிறேன். வாசகர்கள் இந்த ஒளிவழியில் இணைந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.