செக்யூலரிஸ்டாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்தைத் துவக்கியவர் நேதாஜியுடன் இருந்த அபித் ஹாஸன் தான் என்று சொல்வது துரதிஷ்டவசமானது. செண்பகராமன் தான் துவக்கினார் என்று ரகமி எழுதுகிறார்.
முதல் உலகப்போர் காலத்தவரான செண்பகராமனை அபித் ஹாஸன் ஜெர்மனியில் சந்தித்திருக்கலாம் என்பது ஒரு ஊகம். அவரும் அவ்வாறு சொல்லியிருக்கலாமே தவிர, செண்பகராமன் சொல்லவில்லை என்று சொல்வது எந்த வகையிலும் முற்போக்கன்று. இப்படிச் சொல்வது, உளுத்துப்போன நேருவிய செக்யூலரிஸத்தின் விழுதுகளைப்பிடித்துத் தொங்க உதவுமே தவிர, உண்மையை வெளிப்படுத்த உதவாது. அபித் ஹாஸன் சொல்லியிருக்க முடியாதா என்று கேட்கலாம். அவரும் சொல்லியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர் நேதாஜியுடன் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர், தேசபக்தர். ஆனால், முதலில் ஏற்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்னும் தமிழரே என்பதை உணர்வோம்.
தேசத்தின் உயிர் நாடியானவற்றுக்கு மாநிலஅரசை ஆளும் கட்சி எதிரானதாக இருக்கலாம். அவர்கள் மரபணு அப்படியானது. 2ஜி சிகிச்சை முடிந்தபின் மரபணு மாற்றம் நிகழும். ஆனால் அதுவரை, காற்றில் வாள் சுற்றுபவர்களையும், அடிப்பொடிக் கட்சிகளின் ஆட்களையும் விட்டு உளறிக்கொண்டிருப்பது அவர்களது உரிமை. பேசியவர் சட்டசபைக்குள் பேசினார் என்பதையும் நினைவில் கொள்க. சபைக்குள் பேசியதற்கு வெளியில் நடவடிக்கை எடுக்க வழியில்லை.
எல்லாம் சரி. காங்கிரஸ் க்ட்சியில் எம்.எல்.ஏ.க்கள் என்னவானார்கள்? அக்கட்சியின் தலைவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்கிற கேள்வி அடிப்படை அறிவில்லாதவர்கள் கேட்பது. ஏனெனில் பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுத்து உண்ண முடியாது. கிடைப்பதை உண்ண வேண்டும் என்கிற உண்மையை உணர்ந்தவர்கள் அவர்கள். தேசத்தின் மாட்சிமையை விட, தேச பக்தர்களின் தியாகத்தை விட அவர்களுக்கு அன்றாட உணவு முக்கியம். அவர்கள்து தேச பக்தி எல்லை தாண்டியது. இத்தாலி எல்லையில் இருந்து துவங்குகிறது.
கம்யூனிஸ்டுகள் தேசியக் கட்சிகள் அன்றோ என்று கேட்பவர்கள் சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும். தேசிய கம்யூனிஸ்ட் கட்சி என்று என்றும் இருந்தது இல்லை. இருப்பது, கேரள கம்யூனிஸ்ட், அது காங்கிரஸை எதிர்க்கும். மேற்கு வங்க கம்யூனிஸ்ட், அது காங்கிரஸுடன் கூட்டு. தமிழகக் கம்யூனிஸ்ட் , அதற்குச் சோறு கண்ட இடம் சொர்க்கம். தற்போதைய சரணாலயம், அது அறிவாலயம். ஏ.கே.கோபாலன், நம்பூதிரிபாட், டாங்கே, ராமமூர்த்தி ஆகியோர் மார்க்ஸிஸ்ட சொர்க்கத்தில் திரும்பிப் படுத்துக் கொள்வார்கள்.
இது தமிழகம். விஷக் கிருமிகள் பரவிவிட்டன என்று 1967ல் பக்தவத்ஸலம் சொன்னார். அவர் கொரோனாவைச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. #ஜெய்ஹிந்த்#JaiHind