நடிகர் துத்தார்த் – வணக்கம்.
பிறப்பு நம் கையில் இல்லை. வளர்ப்பு, கல்வி முதலியவை நம்மைச் செதுக்கலாம். வாய்ப்புள்ளது.
கல்வி பற்றித் தேடிப் பார்த்தேன். எஸ்.பி.ஜெயின்.ல் எம்.பி.ஏ. அறிவு உள்ளது தெரிகிறது. ஆனால் குதர்க்கம், வெறுப்பு, கொனஷ்டை இதெல்லாம் உள்ள அளவு கல்வியால் பெற்ற விநயம் தெரியவில்லை. ஆனால், காசு பார்க்க உதவும் கல்வி மட்டுமே என்பதால் மனித நேயம், வாக்கில் நளினம், மரியாதை முதலியன உங்களிடத்தில் இல்லை என்று புரிந்துகொள்கிறேன்.
சரி. அப்படியென்றால் வளர்ப்பில் குறையோ என்று தோன்றுகிறது. சூரியநாராயணன் சரியாக வளர்க்கவில்லையோ என்னவோ.
ஆனால், ஒன்று, உங்கள் அறிவு பளிச்சிடுகிறது. தமிழ் நாட்டில் என்ன பேசினால் காசு பார்க்கலாம் என்பதைத் தெரிந்து வைத்துள்ளீர்கள். அதுவும் ஓடாத சினிமாவில் நடித்துவிட்டால் வரும் பாடும் இந்திய எதிர்ப்பு / மாநில சுயாட்சி / இந்தி எதிர்ப்பு / நீட் எதிர்ப்பு இன்னபிற ஒப்பாரிகள். சிகப்பு அசுரன் நிறுவனம் குளிர்ந்திருக்கும். ரொட்டித்துண்டுகள் கிடைக்க வாய்ப்புண்டு.
சரி. போகட்டும்.
டி.எம்.கிருஷ்ணா பாழாக்கம் உண்டோ ? இல்லாவிட்டால் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் கரடியாகக் கத்தினாலும், அப்பா பெயரை மாற்ற முடியாது. கழகங்கள் மயிலாப்பூரில் நிற்க வைத்தாலும் ஜெயிக்க வழியில்லை. முதலில் அவர்கள் சீட் கொடுப்பதே சிரமம் தான். அப்பா பெயர் காட்டிக் கொடுத்துவிடுமே.
பெண்களை இழிவாக எண்ணினாலே கூட கனிவிழி, கயல்மொழி, சாரதி டாஸ்கர், தருள்மொழி, தண்ணிலா என்று பெண் போராளிகளும், அறுமாதளவன், மா.பஞ்சித், தரு. கழநியப்பன், விருமுருகன் சாந்தி என்று ஆண் போராளி மறவர்களும், சாரதிகூஜா முதலிய இனிமா கிரகங்களும் மூச்சு நின்றுவிடும் அளவிற்கு கத்தும் தமிழகத்தில், உங்கள் பேச்சிற்கு இந்த போர்-இலிகள் யாரும் வாய் திறக்கவில்லை என்பதால் இவர்களை நம்பி தேர்தலில் நிற்கலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள். சூரியநாராயணன் மகன். அவ்வளவுதான்.
என்னதான் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு கொன்ஷ்டையாக எழுதினாலும், நீங்கள் தமிழகத்தின் தஷி ஷரூர் ஆக முடியாது. ஜோதி அம்மணி ஆதரவும் கிடைக்காது. அப்பா பெயர். நினைவிருக்கட்டும்.
ஆமருவி என்னும் வேலையில்லாதவன் ‘இலக்கியம், பொருளாதாரம், அந்நிய தேச உறவுகள்’ பற்றி விவாதிக்கத் தயாரா என்று கேட்டுள்ளது உங்களுக்கு இருக்கும் வேலைகளில் உங்கள் கண்ணில் பட்டிருக்க வழியில்லை. Amaruvi’s Aphorisms ஐ விட்டுத் தள்ளுங்கள். நமக்கு இலக்கியம், பொருளாதாரம் இதெல்லாம் என்ன தண்ணி பட்ட பாடு? சினிமாவில் நடித்த ஒரே காரணத்தால் நுழைவுத் தேர்வு முதல் ராக்கெட் விடுவது வரை அனைத்தும் அறிந்த மேதாவிகள் நிறைந்த துறையில் அல்லவா உழல்கிறீர்கள் ? 40 வருஷ அனுபவம் பெற்ற பைலட்டுகள் சில ஆயிரம் மணி நேரங்களே பிளேனில் பறந்துள்ள நிலையில், பல மில்லியன் மணி நேரங்கள் வானத்தில் பறந்த நிதி மந்திரிகள் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் நாட்டில் இலக்கியமாம் இலக்கியம்.
தமிழ் நாட்டுப் பெண்களுக்கு எதோ ஒன்று இல்லை என்று சுஷுப்பு என்பவர் சொல்ல, அறுமாதளவன், அறுத்துவர் ஐயா என்று கூட்டணி சேர்ந்து வீர மரபின் இலக்கணமாம் விளக்குமார் + துடைப்பைக்கட்டை + பாத ரக்ஷய்களுடன் அன்னாரின் வீட்டின் முன் வீரப் போர் தொடுக்கத் தயாரானார்கள். அவ்வளவு வீரம் செறிந்த காவலர்கள் இன்று வாய் மூடி நிற்பது கண்டு மயங்காதீர்கள். தேர்தல் இப்போது தான் முடிந்துள்ளது. (அதைப் பற்றி) எண்ணும் வேலையில் மும்முரமாக இருப்பார்களாக்கும். அவர்கள் பேசாமல் இருப்பது உங்களுக்கு ஆதரவு என்று மதி மயங்காதீர்கள். அப்பா பெயர். நினைவிருக்கட்டும்.
ஆகவே, டி.எம்.கிருஷ்ணா நட்பில் இருப்பது அவசியம். கம்யுனிஸ்ட் கட்சியில் சேர உதவும். அப்பா பெயர் கட்சியில் மேலே செல்ல உதவும். எச்சுரி, ராம், கோபாலன், நம்பூதிரிபாட், வரதராஜன், ரங்கராஜன் வரிசையில் சேர முடியும். தமிழ் அய்யங்காராக இருந்தால் இன்னும் விசேஷ கவனிப்பு உண்டாம். ஆராவமுதன், ஸ்ரீநிவாஸன் என்று பெயரையாவது மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்சிஸ்ட் கட்சிக்கு உகந்தது. பொலிட் பியூரோ வரை போக ஹேதுவாக இருக்கும்.
பி.கு.: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் (எ) சுஜாதா சிபாரிசில் பாய்ஸ் படத்தில் ஹீரோவாகத் தோன்றினீர்கள் என்பதை மறக்காமல் மார்க்சிஸ்ட் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடவும். கட்சியில் நல்ல எதிர்காலம் உண்டு.
இப்படிக்கு,
உங்கள் நலனில் எள்ளளவும் அக்கறை இல்லாத,
அசட்டு அம்மாஞ்சி.
மிக அருமையான பதிவு
LikeLike