அமரர் ஷின்சோ அபே முந்தைய முறை 2006ல் பிரதமராக இருந்த சமயத்தில் நான் தோக்கியோவில் பணியில் இருந்தேன். ஆகவே அவரது செயல்பாடுகளை உற்றுக் கவனித்தவன் என்கிற தகுதியில் இதை எழுதுகிறேன்.
ஜப்பானுடன் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா கூட்டாக அமைத்துள்ள க்வாட் (QUAD) அமைப்பிற்கு மூல காரணமாக அபே ஸான் அவர்களைச் சொல்லலாம். க்வாட் அமைப்பிற்கு முன்னதான ட்ரைலாடரல் அலையன்ஸ் (Trilateral Alliance) அமைவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.
சீனாவின் பிஆர்ஐ (Belt Road Initiative) முயற்சிக்குத் தடையாக இருந்த சில நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதற்கான மூல சக்தியாகத் திகழ்ந்தவர் அபே ஸான்.
இந்தப் படுகொலையை ஜப்பான், இந்தியா, அமெரிக்கா கூட்டாக விசாரிக்க வேண்டும். சீனக் கை இருப்பது தெரியவரலாம்.
தற்சமயம் அவர் பதவியில் இல்லை என்றாலும், ஜப்பானிய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சீனா செய்திருக்க வாய்ப்புண்டா என்பதையும் அறிய வேண்டும்.
க்வாட் அமைப்பைச் சேர்ந்த மற்ற நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
பிரதமர் ஷின்ஸோ அபே ஸான் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
இந்தியாவின் நண்பர் மறைந்தது சோகமே. ஓம் சாந்தி.
LikeLike