பூணல், கல்யாணம், சீமந்தம் – சிறு குறிப்பு

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ?

பிரியமான சொந்தங்கள் / நண்பர்கள் / வாசகர்களே, வணக்கம். 

பூணல் போடுங்கள், அமோகமாக இருக்கட்டும் பிள்ளைகள். கல்யாணம் பண்ணுங்கள். சதாபிஷேகம் பண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், எல்லா பூணலையும் ஏப்ரலில் இருந்து ஜூலைக்குள் போட்டே ஆக வேண்டுமா ? இந்த மூன்று மாதத்தை விட்டால் பூணல் போட வேறு மாதமே கிடைக்காதா ? அதென்ன சார் எல்லாரும் இந்த மூன்று மாசத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள் ? தலை ஆவணி அவிட்டத்திற்கான ஏற்பாடா ? 

கல்யாணமும் அப்படியே. திங்கள் முதல் வெள்ளி வரை கல்யாண வைபோகமாகவே இருக்கிறது. சனி, ஞாயிறு ஈ காக்காய் இல்லை. ஒரு கல்யாணம், சீமந்தம் ஒன்றும் இல்லை. சொல்லி வைத்த மாதிரி திங்கள் காலை முஹூர்த்தம் என்கிறார்கள். போனோம் என்று பேர் பண்ணிவிட்டு ஆஃபீஸ் போகலாம் என்றால் 9:00 மணிக்கு மேல் முகூர்த்தம் என்கிறார்கள். ராகு காலம் முடிய வேண்டுமாம். அதற்கு மேல் கல்யாணத்தில் பங்கு பெற்று ஆஃபீஸ் போக முடியுமா ? போனால் அங்குள்ள ராகு காலம் விடுமா ? 

சரி. அப்படியே போகலாம் என்றாலும் சென்னை டிராஃபிக் விடுமா? திங்கள் காலை தான் ‘ஆமருவி எங்கே ? எங்கே ?’ என்று ஆலாய்ப் பறக்கும் ஃபோன் கால்கள். மிச்ச நாள்களில் சீந்துவார் இல்லை. 

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ? ஆஃபீஸ் அவசரத்தில் எது கல்யாணம், எது பூணல், எது சீமந்தம் என்று தெரியாமல், பூணல் முஹூர்த்தத்திற்கு புடவை வேஷ்டியும், சீமந்தத்திற்கு நாலு முழம் வேஷ்டியும், கல்யாணத்திற்கு அலாரம் டைம்பீசுமாக கிஃப்ட் கொடுத்து அசடு வழிய வேண்டியதாக இருக்கிறது. 

இத்தனைக்கும் எல்லா பத்திரிக்கையும் வாட்ஸப்பில் அனுப்பி, ‘பத்திர்க்கைய நீங்க பார்க்கவே இல்லியே?’, ‘பார்த்தீங்க, ஆனா பதில் போடல்லியே” ரெண்டு டிக் மார்க் வரல்லியே’ என்று ஃபோன் கால் வேறு. 

மனுஷன் திங்கள் காலை ஆஃபீஸ் பிரச்னையை நினைப்பானா, இல்லை சீமந்தம், மணையில் வைத்துப் பாடுவது, காசி யாத்திரை பார்ப்பது என்று போவானா? இப்படியெல்லாம் போனால் காசி யாத்திரை போக வேண்டியது தான். 

நிஜமாகவே புரியவில்லை ஸ்வாமி. எப்படி இத்தனை கல்யாணங்களையும், பூணல்களையும், சதாபிஷேகங்களையும் சமாளிப்பது ? 

இப்படிக்கு,
ஒரு கல்யாண மண்டபத்தில் காத்திருக்கும்,
அசட்டு அம்மாஞ்சி ஆமருவி.
03-05-2023 

சிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018

சிங்கப்பூர் தக்ஷிண பாரத ப்ராம்மண சபா(SDBBS) வழக்கம் போல் இந்த ஆண்டும் யஜுர் உபாகர்மாவுக்கென்று மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நான் மூன்றாவது கோஷ்டியில் (10 மணி) பங்கு பெற்றேன். 900 பேர் வந்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்கு முன்னர் 2 கோஷ்டிகள் முடிந்துவிட்டிருந்தன. காமோகார்ஷீ ஜபம் முதல், காண்டரிஷி தர்ப்பணம், இறுதியில் வேத ஆரம்பம் வரை நிறுத்தி நிதானமாக சபா வாத்யார் மைக் மூலம் நடத்தி வைத்தார். சங்கல்பம் செய்து வைக்கும் போது பூர்ணா புஷ்களாம்பா ஸமேத தர்மஸாஸ்தா துவங்கி, இனி ஒரு ஸ்வாமி இல்லை என்னும் படியாக அனைவரையும் வேண்டிக்கொண்டு செய்துவைத்தார். பரமேஸ்வரப் ப்ரீர்த்தியர்த்தம் சொன்னவுடன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் சொல்லத் தவறவில்லை. தலை ஆவணி அவிட்ட வடுக்கள் ஹோமம் செய்தனர். சில வாண்டுகள் ஹோமம் செய்யும் அண்ணன் அருகில் கள்ளப்பூணுல் போட்டுக்கொண்டு வால்த்தனம் செய்துகொண்டிருந்தன. சின்ன வேஷ்டி கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்து பஞ்ச பாத்திரங்களில் விஷமம் பண்ணிக்கொண்டிருந்த சின்னக் கண்ணனைத் துரத்திக் கொண்டு அவன் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். சபாவில் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், ருத்ரம், சமகம் வகுப்புகள் துவங்குகிறார்கள். பாரதி வேதம் வளர்த்த தமிழ் நாடு என்று பாடினான். இப்போது இருந்தால் சிங்கப்பூரைப் பாடியிருப்பான். சிங்கப்பூரில் யஜுர் உபாகர்மா இன்னும் எனக்கு எத்தனை முறை வாய்த்திருக்கிறது என்று தெரியவில்லை. சிரத்தையுடன் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.

Avani Avittam Singapore

சிங்கப்பூர் ஆவணி அவிட்டம் – ஓரிரு எண்ணங்கள்

எத்தனை பேர் !

விபூதி தரித்து, கோபி சந்தனம் இட்டு, திருமண் தரித்து ( இரு கலையும் ) எல்லா உருவ அமைப்புகளிலும் வந்திருந்தனர். 8 – 80 எல்லா வயதினர் யஜுர் உபா கர்மா என்னும் ஆவணி அவிட்ட நிகழ்ச்சிக்கு இன்று தெண்டாயுதபாணி கோவிலில் கூடியிருந்த கூட்டம் பலவாறு சிந்திக்க வைத்தது.

வயது விபரம் இவ்வாறு இருக்கலாம் : 8-15 — 10%,  20-60 — 80%,

வந்திருந்தவர்கள் பெரும்பாலும் வங்கிகள், மென்பொருள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவற்றில் பணிபுரியும் உயர் வருவாய்ப் பிரிவினர். இன்னும் பலர் சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்கலில் படிக்க வந்துள்ள தமிழக மாணவர்கள். படித்து முடித்தபின் ஒன்று சிங்கையிலேயே பணிபுரிவார்கள், குடியுரிமை பெறுவார்கள் அல்லது அமெரிக்கா சென்றுவிடுவார்கள்.

பெரும்பாலான  நடுத்தர வயதினர் சி.ஏ.வாக இருப்பார்கள். இந்திய சி.ஏ.வுக்கு இங்கு ஏக கிராக்கி. மிகப்பலரும் வங்கிகளில் மேலாண்மைத்துறையில் வேலையில் இருப்பார்கள்.

வருடம் தோறும் நடக்கும் நிகழ்ச்சி தான் என்றாலும் இந்த ஆண்டு பல புதிய முகங்கள் தென்பட்டன. அவர்கள் அனைவரும் பல்கலை மாணவர்கள் என்பது தெரிந்தது. முக்கால்வசிப்பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

சென்ற வருடம் இப்படி ஒரு மாணவர் குழுவிடம் பேச்சுக்கொடுத்திருந்தேன். அவர்கள் அனைவரும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள். மென்பொருள், மின்னணுவியல், ரோபோடிக்ஸ், பொருளாதாரம் முதலியவற்றில் ஆராய்ச்சி. ஒரு ஆர்வம் காரணமாக இம்முறை அக்குழுவைத் தேடினேன். தட்டுப்படவில்லை. இந்தக்குழுவும் அமெரிக்கா சென்றிருக்கலாம்.

இவ்வளவு பெரிய கூட்டத்தின் ஆற்றல் இந்தியாவிற்கு இல்லாமல் ஆகிறது என்பது வருத்தமே.

இந்நிகழ்வு பற்றிய இரண்டு வருஷ பழைய பதிவு இங்கே.

ஐயங்கார் பூணல் இருக்கா ?

தலை ஆவணி அவிட்டம்
தலை ஆவணி அவிட்டம்
avani avittam
ஆவணி அவிட்டம் சிங்கப்பூர்

தலைப்பில் உள்ள கேள்வியைக் கேட்க நேர்ந்தால் நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளவும்.அதுவும் ஆவணி மாதம் ஸ்ரவண நட்சத்திரம் அன்று ( ‘ரக்ஷா-பந்தன்’ என்றால் நமக்குப் புரியலாம் ). ஸ்மார்த்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் தத்துவத்தில் மட்டும் அல்ல பூணூலில் கூட வித்யாசம் உள்ளது. வைஷ்ணவர்கள் பூணூல் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.

வேதக் கல்வி துவங்கும் நேரத்தைக் குறிப்பது இது. ஒவ்வொரு வருடமும் வேதம் பயிலத் துவங்கும் நாள் இது.

பிரும்மாவிற்கு வேதம் கிடைத்த நாள் என்றும் சொல்கிறார்கள். வேதத்தின் பிறந்த நாள் என்று சொல்லலாம் போல் தெரிகிறது. 

ஆனால் தற்போது வெறுமெனே பூணூல் மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்வாக இந்தியாவில் மாறியுள்ளது. இருப்பினும் சிங்கையில் முறையாக இன்று வேதாரம்பம் என்று கொண்டாடப்பட்டு, புதிய பூணூல் அணிந்தபின் வேத பாடம் துவங்கியது.

மிகவும் சிரத்தையாக நடந்தது இன்று. வாத்தியார்கள் ரயில் வண்டியைப் பிடிக்க ஓட வில்லை. நிறுத்தி, நிதானமாக, உச்சரிப்புக்கள் சரியாக ஒரு மணி நேரம் நடந்த நிகழ்வு. மொத்தம் மூன்று கோஷ்டிகள். காலை 6 மணிக்கு , 8 மணிக்கு,  9 மணிக்கு என்று மூன்று. அது தவிர உப-நயனம் ஆன முதல் வருடம் நடக்கும் ‘தலை ஆவணி அவிட்டம்’ ( இதற்கும் திரைப்பட நடிகருக்கும் தொடர்பில்லை) கொண்டாடப் பல குழந்தைகள் வந்திருந்தனர்.  ( படம் மேலே ).

வேதக் கல்வி பற்றிச் சொன்னேன். பழைய காலத்தில் கல்வித்திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பருவங்களாகக் கொண்டிருந்தனர். செமெஸ்டர் என்று நாம் அறிவது அது தான். முதல் செமெஸ்டர் ஐந்து மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உபாகர்மம்’ என்று பெயர். இரண்டாவது செமெஸ்டர் ஏழு மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உத்ஸர்ஜனம்’ என்று பெயர். 

இன்று ‘யஜுர்-உபாகர்மம்’ துவங்கும் நாள். அதாவது யஜுர் வேதக் கல்வி துவங்கும் நாள். அடுத்த ஐந்து மாதங்கள் வேதம் பயில வேண்டும். பின்னர் ‘உத்ஸர்ஜனம்’ என்று வேதக் கல்வியை விட்டு விட வேண்டும். அதாவது வேதம் தவிர்த்து மற்ற கல்விகள் கற்கத் துவங்க வேன்டும். மஹாபாரதத்தில் துரோணர் முதலான முனிவர்கள் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தது இப்படி ‘உத்ஸர்ஜன’ காலத்தில் அவ்வித்யைகளைக் கற்றுக் கொண்டபடியால் தான்.

ஒரு மாதிரியாக ‘சகல-கலா-பண்டிதர்களாக’ ஆக்குவதற்காக அக்காலத்தில் கல்வி முறை இருந்துள்ளது. 

நாளை முதல் வெற்றுப் பாடம் தான் – அதான் ஸார் – வயிற்றுப் பாடம், ஆபீஸ் வேலை. வெறும் சோற்றுக் கல்வி என்று ஆன பின் வேறு என்ன செய்வது ?

 சென்ற ஆண்டு நடந்த ஆவணி அவிட்டம் பற்றி நான் எழுதிய பதிவு இதோ.

காதில் விழுந்தவை..

“பிரும்மச் சாரிகள் இந்தப் பக்கம ஒரு வரிசையா உக்காண்டுக்கோங்கோ “.

“தீர்த்தம், பஞ்ச பாத்தரம் எல்லாம் இருக்கா?”

“ஆசமனம் பண்ணியாச்சா?”

“Dude, where do I get some water from?”

“மாமா, தீர்த்தம் வேணுமா?”

“என்னடா, உத்திருணி இல்லையா? ஓ நீ ஐயங்காரா?”

“yes, am in NUS for my doctorate in Bio-Inforrmat

ics”

“ஓம் பூ ஹூ பண்ணுங்கோ ”

“யாருக்கெல்லாம் அய்யர் பூணல் வேணும்? ஒண்ணா ரெண்டா? ”

“மாமா இங்கே மூணு பூணல். ”

“அப்பா, why is his பூணல் so thick?”

“உஷ், he seems to be an ஐயங்கார். That’s why”.

“இன்னிக்கி Scott Bruce Lecture 9 மணிக்கு. அதுக்குள்ளே ஆயிடுமா?”

“முன்னை போகணும்னா First batch 5:30க் கே வந்திருக்கணும் மாம்ஸ்”.

“Ph.D Thesis Sumbit பண்ணின உடனே ஜகா வாங்கிடணும் டா. இல்லே P.R. குடுத்துடுவான்”.

“ஸ்ரீ பகவ தாஞியா .. பரமேசுவரப் ப்ரீர்த்தியர்த்தம்…”

“பாவமே, வாத்தியார் ஐயர் சாஸ்திரிகள். நாராய

ணப் பிரீர்த்தியர்த்தம்  சொல்லுங்கோ ..”

“மாத்வாளுக்கும் இந்த சங்கல்ப மந்த்ரம் உண்டா?”

“ஐங்கார் எல்லாம் ஸ்ரீமன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் னு சொல்லுங்கோ”

“நாளைக்கி NTU லே Yale Ph.D. பத்தி Road Show இருக்கு, நீ வர்றியா டா?”

“Google Internship முடிஞ்சதும் VC யோட meeting இருக்கு”.

“V.C.- யாரு? Blackrock Capital தானே? அவன் ஒரு fraud டா. Ideas சுட்டுடுவான்”.

“மாமா, இங்கே அட்சதை குடுங்கோ”.

“தீர்த்தம் ஆயிடுத்து. கொஞ்சம் விடுங்கோ “.

“இப்போ காண்டரிஷி தர்ப்பணம். சொல்லுங்கோ – சாம வேதம் தர்ப்பயாமி..”

“U.C. Berkeley லே ஏண்டா Research Associate வேண்டான்னுட்டே. அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்”.

“இல்ல ராமு, NUS-லே Scholarshipலே Ph.D குடுக்கறான். U.C.ல Aid  கிடைக்கலே. இது betterனு தோணித்து”.

“யக்நோபவீத தாரணம் கரிஷ்யே ..எல்லாரும் ஆசமனம் பண்ணுங்கோ “.

“என்ன இருந்தாலும் Pilani Dual Degreeக்கு NUS M.S. better இல்லே?”

“நேத்திக்கி DC லே Conference. இன்னிக்கி ஆவணி அவிட்டத்துக்கு வருவேன்னே நினைக்கலே”.

“இப்போ வேத பாடம் ஆரம்பம். கை கூப்பிககோங்கோ . சொல்றபடியே திருப்பிச் சொல்லுங்கோ”

“மாமா காயத்ரி ஜெபம் எப்போ? நாளைக்கி தானே? நீங்க Los Angeles Presentationக்குப் போறேளோல்லியோ?”

“ஆமாம். நல்ல வேளை. பவித்ரம் வாங்கிக்கணும். நாளைக்கு SQ – Airbus A-380ல் காயத்ரி ஜெபம். ஆமாம், போன வாரம் Raghuram Rajan போன் பண்ணினாரா?”

“வேத பாடம் ஆயிடுத்து. வரிசைலே நின்னு நமஸ்காரம் பண்ணுங்கோ. எல்லாரும் தீர்காயுசா இருக்கணும் “.

“சார் நீங்க …. SMUல Design Professor தானே? நான் போன மாசம் உங்க TED Talk பார்த்தேன்”.

“ஓ அது நான் இல்லையாக்கும். என்னோட அண்ணா. நான் Barclays ல SVPயா இருக்கேன்”.

“ஒ ஐ ஸீ ”

avani sing
செட்டியார் கோவில் சிங்கப்பூர்

“Why so many Indian coming with white robe today to Tank Road Chettiyaar Temple lah?”

“Today Indian religious festival lah”.

“So what is the symbol on forehead lah ? sorry just to know”

“Ok. Let me begin. Once upon a time there lived a sage called Vyas”.

“Sorry ya, where you want to go already ?”

“Changi Biz Park”.

“Ok lah, another Little India aleady!”

” ”

“So all Indian come out of India. What happen to economy?”

“All Indian stay in India, so what happen to world economy?”

“You tell Indian story lah, that is better already “

%d bloggers like this: