கொசுக்களின் பேரிரைச்சல்

ஒரு சில தலைப்புகளைத் தொடவே கூடாது. அவற்றைத்தொட்டால் தீர்ந்தது கதை. உடனே பாய்ந்து வந்து விடுவார்கள்.

அவற்றில் ஒன்று பெரியார். இரண்டு தமிழ். மூன்று இட ஒதுக்கீடு.

இந்த மூன்றைப்பற்றியும் எப்போதுமே உயர்வாகவே பேச வேண்டும், எழுத வேண்டும்.

அதே போல் இந்த ஒன்றைப்பற்றி தாழ்த்தியே பேச வேண்டும். அது தான் பிராம்மணன் பற்றியது. இந்த உலகின் இழி நிலைகளுக்கெல்லாம் காராணம் பார்ப்பனன் தான் என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் தமிழகத்தில் எடுபடும்.

ஆனால் நமக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. அறிவுக்குத் தெரிந்ததை தெரிந்தபடி எழுத வேண்டும். சொல்லடி பட்டாலும் கல்லடி பட்டாலும் ஒன்றே.

அந்த வகையில் பெரியார் பற்றி  இந்த வாரம் எழுதியிருந்தேன். முன்னரும் பல முறை எழுதி விட்டேன் – அவர் தமிழுக்கு ஆற்றிய “சேவை” குறித்து. அதே போல் வைணவ அந்தணர்களின் தர்க்க வாதம் இல்லாத வெற்று எக்களிப்புகள்  பற்றியும் எழுதி இருந்தேன்.

உடனே கிளம்பிவிட்டன கூக்குரல். இணையத்தின் மறைவுத்தன்மை மற்றும் முகம் தெரியாத தன்மையைப் பயன்படுத்தி கண்டபடி ஏச்சுக்கள்.

இப்படிப் பேச்சுகள் பலமுறை நடந்துள்ளன. ஆனால் இந்த முறை ஏனோ ஏசுபவர்களிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. அவர்களை வலைத்தளத்தில் எழுதச்சொன்னேன். ஆனாலும் அவர்கள் மின் அஞ்சலிலேயே அனுப்பினர்.

சில பகிரத்தகுந்த கேள்விகளையும் அதற்க்கான பதில்களையும் உங்களுடன் பகிர எண்ணுகிறேன்.

1. பெரியார் பற்றி எழுதறியே, அவர் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய பணி என்னவென்று தெரியுமா?

பதில் :  உண்மை.  பெரியார் ஈ.வே.ரா. உயர்ந்த மனிதர்  தான். ஆனால் அவரை தமிழர் தந்தை என்று சொல்வது பெரிய நகைச்சுவை. அவர் தமிழுக்கு எதிராகப் பேசியுள்ளதும் எழுதயுள்ளதும் என்று யாராவது செய்தால் வன்முறையில் இறங்குவார்கள்.  தமிழ் மொழியைப் பற்றி மிகக் கேவலமான எண்ணம் கொண்டிருந்தார் அவர். அவரது தாய் மொழி கன்னடம்.

2. பெரியார் இல்லையென்றால் பெண்ணடிமைத்தனம் இன்னும் இருக்கும். அவர் தொண்டு பெரியது தானே ?

பதில் : வடிகட்டிய போய்.  பெண்களைத் திருமணம் தேவை இல்லை என்று கூறினார். பிடித்தவனுடன் பிடித்தவரை இருந்து அடுத்தவனைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும் என்றார். தாம்பத்திய உறவு உணவகத்தில் உணவு அருந்துவது போன்றது. வேண்டியதைச் சாப்பிடலாம். பிடிக்காவிட்டால் வேறு உணவகம் நாடலாம் என்று சொன்னார். விபச்சாரத்தை முற்போக்கு என்று மழுப்பினார்.  சோரம் போவதை நியாயப்படுத்தினார். சிலப்பதிகாரத்தை ‘தேவடியாள் கதை’ என்றார்.

3. அவர் இல்லையென்றால் உன்னைபோன்ற பார்ப்பானெல்லாம் இன்னைக்கும் கோலோச்சிகொண்டிருப்பான். அதனால்தானே நீ எதிர்க்கிறாய் ?

பதில்: மறுபடியும் வடிகட்டின போய். அவர் எதிர்த்தது வைதீகத்தை. இன்று வைதீகன் யாரும் இல்லை. அன்றும் வைதீகம் என்ற பெயரில் பெரும்பாலும் பொய்கள் நடமாடின. இன்று யாரும் வைதீகன் என்று சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. வைதீகனாக இருக்கப் பல தியாகங்கள் செய்யவேண்டியுள்ளது.  அப்படி இருப்பதில் பார்ப்பனரிடமும் பெரிய மரியாதை இல்லை.  இவ்வாறு வைதீகம் செய்பவர்கள் பெரும்பாலும் அதிகம் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பதில்லை. அர்த்தம் தெரியாமல் பல மந்திரங்களைச் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள்.  இவர்களால் ஆழ்ந்த கல்வி கற்று சமஸ்க்ருதம், தமிழ் இவை இரண்டிலும் புலமை பெற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் உள்ளது.

இதனால் கல்வியில் சிறந்த பார்ப்பனர்கள் வெளியேறி, அடுத்த மாநிலம், நாடு என்று சென்று குடியேறிவிட்டார்கள். விஷயம் தெரிந்த பார்ப்பனர்கள் தமிழகத்தில் அதிக அளவு இல்லை. ஆனால் இந்த நிலை மாறி வருகிறது. மிக்க கல்வி கற்ற பார்ப்பனர்கள் பெரும் பொருளீட்டித் தமிழகம் திரும்பிவருகிறார்கள். கிராமங்களில் வீடுகளை விற்றுவிட்டுச் சென்றவர்கள் தற்போது மீண்டும் திரும்பிவருகிறார்கள்.

இவர்கள் பாதிப்பு வெகு விரைவில் தெரிய வரும்.

ஆனால் இவர்கள் வெளியூர் செல்வதற்கும் வெளி நாடுகளில் கொழிப்பதற்கும் பெரியார் முக்கிய காரணம். எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் நல்ல கல்லூரி, வேலை கிடைக்காது என்றால் அவர்கள் வெளி நாடுகளுக்கு ஓடினார்கள். அந்நாடுகள் பயன் பெற்றன. இவர்களுக்கும் செல்வம் குவிந்தது. இல்லையென்றால் இவர்கள் தஞ்சை மாவட்டத்தில் பஞ்சப்பாட்டு பாட வேண்டியது தான். நாடு திரும்பும் இவர்கள் தங்கள் கிராமங்களில் மீள் குடியேறத் தொடங்கியுள்ளர்கள்.சிறிய அளவில் நடந்தாலும் இது சாதாரணமாக நடக்கத் தொடங்கியுள்ளது. நடப்பது நாட்டின் நன்மைக்கே.

4. நீ என்னமோ பெரிய புடு*கி-யாட்டமா எழுதறியே. நீ எழுதறதெல்லாம் எவ்வளோ பேர் படிக்கறாங்கன்னு  தெரியுமா?  நீ என்ன பெரிய சோ.ராமாசாமின்னு நெனைப்பா ? பாப்பார நாயே …

பதில் :  நன்றி. படிப்பவர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும், பார்ப்பவர்கள் அனைவரும் படிக்காவிட்டாலும், எழுத வேண்டியது என் கடமை.  “சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், இறைவா ..” – என்ன செய்வது ?  வாய்த்த தமிழாசிரியர்களும் ஆங்கில ஆசிரியர்களும் அப்படிப்பட்டவர்கள். பகுத்தறிவு எதையும் கேள்வி கேட்க வைக்கிறது. ஆம். சோவும் ஒரு முன்னோடி தான். அவருடன் அருண் சௌரி, குருமூர்த்தி, நாநி பால்கிவாலா, பெர்னார்ட் ஷா முதலானவர்களும் உண்டு.

5.  பார்ப்பான் தப்பு ஒண்ணுமே பண்ணலேன்னு சொல்றியா  ** மவனே. பெரியார் பத்தி உனக்கு என்னடா தெரியும்?

பதில் :  எனக்கு ஒன்றும் தெரியாது தான். அதனால் தான் அவரது புத்தகங்கள் படித்தேன். அறிஞர் அண்ணாவின் “சரிந்த சாம்ராஜ்ஜியம்”, கண்ணதாசனின் “வனவாசம்”, ம.போ.சி, இன்னும் பல நூல்கள். இவற்றின் பாதிப்புதான். இது எல்லாம் தவறு என்றால், நான் எழுதியதும் தவறுதான். பெரியார் பேசியதே தவறுதான் என்றால் நான் என்ன செய்வது?

பார்ப்பான் செய்தது பலது தவறு தான். பலரைப் போலவே அவனும் தவறு செய்தான் தான். அவன் பார்ப்பானாகவே இல்லாதது தான் அவன் செய்த தவறு.  “செந்தண்மை பூண்டு ஒழுகி ” இருக்க வேண்டும். “அறுதொழில்லோனாக” இருந்திருக்க வேண்டும். சரஸ்வதி கடாட்சம் மட்டுமே கோரியிருக்க வேண்டும் ஆனால் லட்சுமி கடாட்சம் நோக்கிப் போனான். அவனைக் காக்க அரசுகள் இல்லை அதனால் போனான்.

போனவன் போயே விட்டான். தான் கிராமம் விட்டுப் போனான். அக்கிரகாரம் விட்டுப்போனான். சதுர்வேதி மங்கலம் என்று அரசர் கொடுத்த திரையிலி நிலங்களை விடுத்துப் பட்டணம், வேறு நாடு போனான்.  கோவிலையும் பூசையையும் விட்டுப் போனது தவறு தான்.  காசுக்காக தொழிலை விட்டது தவறு தான். ஆனால் “முற்போக்கு” சமூகம் அவனைத் துரத்தியது என்பதும் உண்மை.

6. நீ பெரிய பருப்பு  மாதிரி எழுதறதாலே எல்லாம் மாறிடப்போகுதா ?  பெரியாரைப் பத்தி “உண்மை” எழுதறதாலே உனக்கு என்ன லாபம் ?

பதில் :  எல்லாம் மாறாது. ஆனால் ஒரு சிலர் படிக்கத் தொடங்குவார்கள். தமிழகக் கல்வி முறையில் பயின்ற பிள்ளைகள் சுயமாக சிந்திக்கத் துவங்கலாம். அதுவே நல்லதுதான்.  அதுதான் லாபம்.

7.  இப்போ யாரும் தமிழ்லே எழுதறது இல்லையா ? நீ மட்டும் தான் எழுதரியா? ஆனா நீ எழுதறது பத்தி யாரும் எழுதறது இல்லையே, அதனாலே நீ தேவை இல்லாதது பத்தியும் உன்னோட கற்பனையுமா எழுதறேன்னு நேனைக்கலாமே ?

பதில் :  தமிழ் நாட்டில் எழுதுபவர்கள் சிலரைத் திருப்பதி படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனக்கு யாரையும் திருப்த்திபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. “ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்”. அவ்வளவு தான். போற்றுவார் போற்றுவதும் தூற்றுவோர் தூற்றுவதும் போகட்டும் கண்ணனுக்கே என்று விட்டுவிட்டு என் கடன் எழுதுவதே என்று மேலும் உண்மைகள் எழுதுவேன்.

%d bloggers like this: