ஈஷா விவகாரம் -பழைய கத்தி, புதிய ஆடு

மிகச் சரியாகக் காய் நகர்த்துகிறார்கள். அதே தொனி, அதே ஊடக வழி வெறுப்பு வளர்ப்பு, அதே இடது சாரி ‘பெரியவர்கள்’ பேச்சுக்கள்.

ஒவ்வொரு முறை இந்து தர்மம் சார்ந்த பெரியவர்கள், பாரத கலாச்சாரம் சார்ந்த பெரியவர்கள், சன்னியாசிகள் பெரிய அளவில் ஆளுமை பெறும் போதும், தேச அளவில் பிராதான்யம் பெறும் போதும், அரசுகளிடம், உலக நிறுவனங்களிடம் அதிகாரம் பெறும் போதும் தோன்றும் அதே கற்பனைக் குற்றச்சாட்டுக்கள், ஊடக நடவடிக்கைகள்.

முதலில் காஞ்சி சுவாமிகள் மீது குற்றம் சொல்லி, அவரது அந்தஸ்தைக் குறைத்தனர். பின்னர் பலர் பற்றி வாய் கூசாமல் எழுதினர். காஞ்சி சுவாமிகள் அகில இந்திய அளவில் பெரும் பெயரெடுத்தது வந்தார். ஒரு நிலையில் அயோத்யா விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு எதுவாக உதவினார். பூசாரிகள் நிர்வகிக்கும் கிராமக் கோவில்களுக்குச் சென்று தீண்டாமை, சாதி பாகுபாடுகள் களைய மாபெரும் வழிகோலாக  இருந்தார்.இதனால் எல்லாம் யாருடைய ‘வியாபாரம்’ பாதிக்கப்பட்ட்து என்பதை அறிய நீங்கள் சுவிசேஷப் பாதையில் எல்லாம் செல்ல வேண்டாம். கொஞ்சம் சிந்தித்தாலே போதும்.

இப்போது ஈஷா நிறூவனம் மீது கைவைத்துள்ளனர்.

என்னதான் செய்வது அவரை? யோகா என்றால் ஐக்கிய நாடுகள் சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார். அதிகார மையங்கள் இவருக்குக் கட்டுப்படுகின்றன. பசுத்தோல் வியாபாரத்தை எதிர்க்கிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார். புரியும்படி பேசுகிறார். அதனால் ‘வியாபாரம்’ பாதிக்கப்படுகிறது. வேறென்ன? ‘மத’ வியாபாரம் தான்.

பின்னணியில் பலனடைபவர்கள் யார் என்று தெரிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. கூடங்குளம் ஆர்ப்பாட்டத்தில் பலன் அடைந்தவர்கள் எந்த சம்பிரதாய அமைப்பினரோ,அக்கினி அபிஷேகப் பெருவிழா நடத்துவார் எவரோ, நித்திய சுகமளிக்கும் கூட்ட்ங்கள் நடத்துபவர் எவரோ அவர்களின் ‘கைவண்ணம்’ இதிலும் தென்படும்.

நாம் உற்றுப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.


காஞ்சி வழக்கின் காரணங்கள் பற்றிய என் முந்தைய பதிவுகள்.

காஞ்சி வழக்கு – ஒரு பார்வையின் தொடக்கம்

காஞ்சி மட வழக்கின் பின்னணி – ஒரு அலசல் பார்வை

காஞ்சி மட வழக்கு – தொடரும் பார்வை

காஞ்சி வழக்கு – என் அனுமானத்தின் காரணங்கள்