சங்கப்பலகை – அமர்வு 5 நிகழ்வுகள்

தமிழில் மின் நூல்கள் – புதிய தொழில் நுட்பங்கள் வழியான பார்வைகள் என்னும் தலைப்பில் தொழில் நுட்ப வல்லுநர் திரு.குணசேகரன் ஆழமான, வெளிப்படையான, செயல்முறை விளக்கங்களுடனான சொற்பொழிவாற்றினார். எதிர்காலத்திற்கான மின் புத்தகங்கள் எழுத்துக்கள் மட்டுமே கொண்ட இரு பரிமாணங்களில் இல்லாது காணொளி, தொடர்புத்தன்மை (Interactivity) கொண்டவையாக இருக்கும் என்பதைச் செயல்முறை விளக்கங்களுடன் அளித்தார் திரு.குணசேகரன்.

‘ஏதாவது புதிய தொழில் நுட்பம், மென்பொருள் வந்தால் உடனே அதில் எப்படித் தமிழைக் கொண்டுவருவது என்று யோசித்து, அம்மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களுடன் பேசத்துவங்குவேன்’ என்று சொல்லும் இவரைச் சிங்கை மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு தமிழ்வழியில் புத்தாக்க முயற்சிகளைச் செய்துவரும் திரு குணசேகரன் நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.

பின்னர் பேரா.அருண் மகிழ்நன் அவர்கள் பங்குபெற்ற ஆழமான, அவசியமான, நேரடியான கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டுசெல்லும் முயற்சியில் திரு.மகிழ்நன் ஆற்றி வரும் பணி நாம் அறிந்ததேயாயினும், அவரது பல சீரிய கருத்துக்களைச் செவிமடுத்தால் நாம் செல்லும் தூரம் அதிகமாகும்.

நிகழ்வு தொடர்பான காணொளிகள்:

நிகழ்வு தொடர்பான காணொளிகள்:

 

 

 

 

சங்கப்பலகை -4 நிகழ்வுகள்

‘கம்பன் காட்டும் கணைகள்’ என்னும் அ.கி.வரதராஜனின் நூல் ஆய்வுடன் இன்றைய சங்கப்பலகை நிகழ்வு துவங்கியது. திருமதி.சிவசங்கரி செல்வராஜ் வாலமீகி ராமாயணத்தையும் கம்பனையும் வரதராஜனாரின் நூல் வழியாக ஒப்பிட்டுப் பேசினார். சிவசங்கரி துளசி ராமாயணத்தையும் உள்ளிழுத்து, வாலி வதம் குறித்த ஒப்புமைப் பார்வையை முன்வைத்தார். பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் உடைய இந்தப் பேச்சாளர் அமைதியாகவும், ஆழமாகவும் பேசியது மனதிற்கு நிறைவாக இருந்தது.

பின்னர் பேசிய தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள் தமிழ் பிராமி கல்வெட்டெழுத்துக்கள் வழியாக நீண்ட தமிழக வரலாற்றைப் பற்றி உரையாற்றினார். பிராமி எழுத்துக்கள் ‘கிராஃபிட்டி என்கிற குறியீட்டுக் காலத்திற்கு அடுத்த, மொழி வளர்ச்சியின் அடி நாதம்என்று சொல்லத்தகுந்த காலகட்டத்தை உணர்த்தியதை உணர முடிந்தது. தமிழ் வட்டெழுத்து வருவதற்கு முந்தைய காலகட்டத்தை பிராமி எழுத்துக்கள் காட்டி நின்றன. இந்த எழுத்துக்கள் வழியாக சமண, பௌத்த, ஆஜீவக சமயங்கள் திகழ்ந்த தமிழக நிலபகுதிகள் யாவை என்று படங்களின் ஊடாக திரு சாந்தலிங்கம் விளக்கியது நம்மை பிராமி எழுத்துக் காலத்தில் சில நிமிடங்கள் கொண்டு சென்றது.

எத்தனை சமணப் பள்ளிகள்? அப்பள்ளிகளுக்கு எத்தனை தமிழ் மன்னர்கள் கொடை அளித்திருக்கிறார்கள்? சமணத் துறவிகளுக்கான கல் படுக்கைகள் எங்குள்ளன? அவற்றில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் மூலம் நாம் அறியும் செய்திகள் யாவை? பிராமி எழுத்துக்களை எப்படிப் படிப்பது ? என்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திரு.சாந்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை, தமிழர்களுக்கு மிக முக்கியமான உரை என்பதில் ஐயமில்லை. சித்தன்னவாசல், பல குடைவரைக் கோவில்கள் என்று பயணித்து, பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் சிலையில் கொண்டு முடித்தார் திரு.சாந்தலிங்கம். ஆஜீவக, சமண மரபுகள் பற்றிய பிராமி எழுத்துக்கள் என்று துவங்கிய அவரது பேச்சு, திருப்பரங்குன்றத்தில் தவ்வை வழிபாடு வரை பயணித்து, மிக செறிவான தொல்லியல் சார்ந்த வரலாற்று, சமய, வாழ்வியல் செய்திகளை ஆதாரத்துடன் நிறுவுவதாக இருந்தது.

இறுதியாகப் பேசிய முனைவர்.கௌசல்யா ‘சிலம்பு காட்டும் பெண்கள்’ என்பது பற்றி ஆழ்ந்த, செறிவானதொரு உரையை நிகழ்த்தினார். சிலம்பு வழியாக அக்காலத்துப் பெண்களின் வாழ்வியல், குலங்கள் சார்ந்த பெண்களின் குணாதிசியங்கள், பெண்களுக்கான பொதுவான நிலைகள், அறங்கள் என்று பன்முகத்தன்மை கொண்ட பார்வையாக இருந்தது அவரது உரை. பெண்களை ஆய மகளிர், அந்தண மகளிர், மறவர் மகளிர், கணிகையர் என்று பிரித்துக்கொண்டு அவர்களது தனித்தன்மைகளையும், பிரிக்காமல் பொதுவாக மகளிர் சார்ந்த பார்வை என்பதாக அவர்களுக்கான பொது இயல்புகள் என்று சிலம்பு என்ன காட்டுகிறது என்பதை கௌசல்யா கூறியது, தேர்ந்த இன்னொரு ஆய்வாளர் ஒருவர் சிங்கை தமிழாய்வுத் துறையில் இருக்கிறார் என்பதை உணர்த்தியது. கண்ணகி குறித்த ‘பேசா மடந்தை’ என்னும் தொடர் பற்றிய இவரது பார்வை போற்றுதலுக்குரியது.

திடீரெனப் பேச வந்த ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், எந்த தயாரிப்பும் இன்றி சிலம்பைப் பொழிந்தார். ‘தேரா மன்னா..’பாடல் கூறி, ” கண்ணகி பேசா மடந்தை அல்லள்” என்று நிறுவினார் முத்துக்கிருஷ்ணன்.

வாசகர் ராகவன் கம்ப ராமாயணத்தில் வாலி வாதம் பற்றிய பரிணாமப் பார்வை அளித்தார். வரதராஜனின் நூல் அனைவருக்கும் அளிக்கப்பட்ட்து. அத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

சிங்கப்பூர் சங்கப்பலகை அமர்வு 3

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் மூன்றாவது அமர்வு இன்று விக்டோரியா தெரு நூலகத்தில் நடந்தேறியது. மூன்று சிறப்பான தலைப்புகளில் உரைகள் நடந்தேறின. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி. காணொளிகள் கீழே. முனைவர்.ஸ்ரீலக்ஷ்மியின் ‘கம்பன் காட்டும் பெண்ணியப் பார்வைகள்’ ஒளிப்பதிவுக் கருவி செயலிழந்ததால் பதிவாகவில்லை. மீண்டும் ஒருமுறை பதிவு செய்து தெரிவிக்கிறேன்.

துவக்க உரை – ஆமருவி

இந்தியக் கோவில் காலை மரபு –  சு.விஜயகுமார் (poetry in stome )

 

நீராண்மை – நூல்கள் வழியான பார்வை – சசிகுமார்

‘கம்பன் காட்டும் பெண்ணியப் பார்வைகள்’ – முனைவர். ஸ்ரீலக்ஷ்மி.

Munaivar Sreelakshmi

 

 

சிங்கப்பூர் 'சங்கப்பலகை' முதல் அமர்வு – நிகழ்வுகள்

அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களுமாக 26 பேர் வந்திருந்த ‘சங்கப்பலகை’ முதல் அமர்வு, பல சிந்திக்க வைக்கும் பேச்சுக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. 86 வயது இளைஞரும் தமிழ் ஆர்வலருமான திரு.ஏ.பி.ஆர் ஐயா வந்திருந்து ஆசிர்வதித்தார். திரு.செல்வம் கண்ணப்பன், திரு.புகழேந்தி முதலான ஆர்வலர்களும், விழாவில் ஆதரவாளர் திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தது பெரும் ஊக்கம் அளித்தது. ‘நான் இராமானுசன்’ நூலின் கன்னட மொழிபெயர்ப்பாளர் ஹரிணி அவர்களும் வந்திருந்தார்.

பாவை சீயர் –  மாதங்கி

பாலகாண்டம் – நவீன கவிதை – கண்ணன் சேஷாத்ரி

 

நாட்டுப் பசு – சசி குமார்

 

அதிபதி – புகழேந்தி