மூட நாஸ்திகர்

நாஸ்திகம் நமது பண்பாட்டின் அறிதல் முறைகளில் ஒன்றே. சார்வாகம், உலகாயதம் என்கிற வகைகளில் அம்முறை நமது பண்பாட்டு அடுக்குகளில் அடிப்படையான வழிமுறையாகவே இருந்து வந்துள்ளது. ‘அஸ்தி’ என்பது ‘மீதம் உள்ளது’ எனறு பொருள்படும். ந+அஸ்தி என்பது மீதம் ஒன்றும் இல்லை என்கிற பொருளில் வருகிறது. அவ்வளவுதான் நாஸ்திகம்.

நாஸ்திகத்திற்குப் ‘ப்ரத்யக்‌ஷ வாதம்’ என்கிற பெயரும் உள்ளது. கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புவது அது. ‘திருஷ்டம்’ (கண்களுக்குத் தெரிவது) என்பதை மட்டும் நம்புவது அந்தப் பாதை. ‘அ-திருஷ்டம்’ (கண்களுக்குத் தெரியாது) என்பதை ஒப்புக்கொள்ளாதது. புலன்களால் அறியப்படாத எதையும் ஒப்புக்கொள்வதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டதே நாஸ்திகம். உலகம் ஜடப் பொருட்களால் ஆனது. இரு ஜடப்பொருட்கள் சேர்க்கையால் உருவாவது மற்றொரு ஜடம்.  ஒரு ஜடம் இன்னொன்றைத் தின்று வாழும். பின்னர் மரிக்கும். இதில் ஆத்மா, கடவுள் என்பவை இல்லை என்பது சார்வாகம் என்கிற நாஸ்திக வாதம்.

மேற்சொன்ன நாஸ்திகத்தில் நேர்மை உண்டு. இது பெர்றண்ட் ரஸ்ஸல், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றோரது  நாஸ்திகம். அறிவியல் பார்வை கலந்த இந்த நோக்கு அழகானது, வெறுப்புகளற்றது.

சுபவீ பேசுவது மூட நாஸ்திகம். மூடர்கள் பேச்சு அது. எந்தவகையான தத்துவப் புரிதலும் இல்லாத, வறட்டு வெறுப்புப் பேச்சு நாஸ்திகமாகாது. அது ஈ.வே.ரா. வழி  நாசிச மிருகப்பாதை. ‘அறிவைக் கழற்றி வைத்துவிட்டு, களிமண்ணையும் பாம்பின் விஷத்தையும் கலந்து தலைக்குள் வைத்துச் சுமக்கிறோம்’ என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்யும் பகுத்தறிவுப் பாதை. சுபவீ இதைத்தான் சொல்லியிருக்கிறார்.

அவர் தன்னை ‘சூத்திரர்’ என்று சொல்கிறார். வைசியரான  நகரத்தார்  என்றைக்குச் சூத்திரரானார்கள்? ஈ.வே.ரா. வழி செல்பவர் என்றால் எந்தக் குப்பையையும் சொல்லலாம் என்பதால் சொல்கிறார்.

செட்டியார்கள் செய்துள்ள ஆலய, பண்பாட்டுச் சேவைகள் எத்தனை? நாயக்கர் காலத்திற்குப் பின்னர் செட்டியார் சமூகம் இல்லையெனில் தமிழகத்தில் கோவில்களில் வழிபாடுகள் நடந்திருக்குமா? அச்சமூகம் நடத்திவந்துள்ள வேத / ஆகம பாடசாலைகள்,  தென்கிழக்காசியாவில் சைவ சமயம் வேறூன்ற அச்சமூகம் இன்றளவும் ஆற்றிவரும் அரும்பணிகள் என்று அவர்களது அறப்பணிகள் விரிந்து செல்கின்றன. அப்படிப்பட்ட சமூகத்தில் இப்படி ஒரு பிறவி.

எந்தப் பிரச்சினைக்கும் ‘பார்ப்பனீயம்’ காரணம் என்கிறார். அது என்ன ‘ஈயம்’? பீரியாடிக் டேபிளில் இல்லாத உலோகமும் உண்டா? Brahmin-Plumbum என்கிற பெயருடன் BrPB என்று அழைக்கலாமோ?

தலைக்குள்ளும் விஷம் இருந்து, நாவிலும் விஷம் இருந்தால் அதன் பெயர் சுபவீ. இவரைப் போன்றவர்கள் நஞ்சைக் கக்கிக்கொண்டே இருப்பதால் தான் தமிழர்கள் என்றாலே ஏதோ கலகக்காரர்கள், தேசத் துரோகிகள் என்கிற எண்ணம் பலரிடமும் உள்ளது.

எதையும் ‘பார்ப்பனீயம்’ என்கிற கண்ணாடி வழியாக மட்டுமே, ‘பைனரி’யாகவே பார்க்கும் இந்தப் பிறவிகளை ‘பைரவன்’ என்று அழைக்கலாமோ? ( நிஜ பைரவர்கள் மன்னிக்க).

இந்த அழகில் இவரை வைத்துத் தமிழ் விழாக்கள் நடத்துகிறார்கள். தமிழ் வளரும், கற்பனையில்.

%d bloggers like this: